DA Hike : மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்! - Tamil News | Central ministers cabinet approved the 3 percentage DA hike for government employees | TV9 Tamil

DA Hike : மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Ministers Cabinet | இந்த நிதி ஆண்டுக்கான முதல் அகவிலைப்படி கடந்த மார்ச் மாதம் உயர்த்தப்பட்ட நிலையில், அடுத்த அகவிலைப்படி உயர்வு எப்போது வரும் என அரசு ஊழியர்கள் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இந்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி போனஸ் உடன் அகவிலைப்படி உயர்வும் சேர்த்து அறிவிக்கப்படலாம் என ஊழியர்கள் எதிப்பார்த்த நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

DA Hike : மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மாதிரி புகைப்படம்

Published: 

16 Oct 2024 15:22 PM

வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், போனஸை எதிர்ப்பார்த்து மத்திய அரசு ஊழியர்கள் காத்துக்கொண்டிருந்தனர். இந்த ஆண்டுக்கான இரண்டாவது அகவிலைப்படி உயர்வு குறித்த நேற்று வரை எந்த வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், தீபாவளி போனஸ் உடன் சேர்த்து அகவிலைப்படி உயர்வு அறிவிப்பும் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், மத்திய அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் மாத ஊதியத்துடன் அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க : Ration Card : ரேஷன் அட்டை பயனர்களுக்கு முக்கிய செய்தி.. புதிய விதிமுறைகளை கொண்டு வந்த தமிழக அரசு!

அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை உயர்த்தப்படும் அகவிலைப்படி உயர்வு

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அதாவது ஆண்டுக்கு முதல் முறை ஜனவரி மாதத்திலும், பிறகு 6 மாதங்கள் கழித்து இரண்டாவதாக ஜூலை மாதத்திலும் அகவிலைப்படி உயர்த்தப்படும். அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியானதும், குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அது நடைமுறைப்படுத்தப்படும். பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை போலவே பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் ஆண்டுக்கு 2 முறை டிஆர் உயர்த்தப்படும்.

இதையும் படிங்க : SBI : எஸ்.பி.ஐ வழங்கும் 5 சிறப்பு FD திட்டங்கள்.. வட்டி எவ்வளவு தெரியுமா?.. முழு விவரம் இதோ!

கடைசியாக 4% உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு

சமீபத்தில் கூட மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதாவது கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. மார்ச் மாதத்தில் உயர்த்தப்பட்ட இந்த அகவிலைப்படி, ஜனவரி மாதத்தில் இருந்து பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, தற்போது மத்திய அரசு ஊழியர்கள் தங்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து சுமார் 50% அகவிலைப்படியாக பெறுகின்றனர். இதேபோல ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்களின் ஓய்வூதியத்தில் இருந்து 50% டிஆர் ஆக பெறுகின்றனர்.

இதையும் படிங்க : Bank of Baroda : FD-களுக்கான வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்திய பேங்க் ஆஃப் பரோடா.. எவ்வளவு தெரியுமா?

தீபாவளி போனஸ் உடன் அறிவிக்கப்படும் அகவிலைப்படி உயர்வு

இந்த நிதி ஆண்டுக்கான முதல் அகவிலைப்படி கடந்த மார்ச் மாதம் உயர்த்தப்பட்ட நிலையில், அடுத்த அகவிலைப்படி உயர்வு எப்போது வரும் என அரசு ஊழியர்கள் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இந்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி போனஸ் உடன் அகவிலைப்படி உயர்வும் சேர்த்து அறிவிக்கப்படலாம் என ஊழியர்கள் எதிப்பார்த்த நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : Bob Utsav : அதிக வட்டியுடன் கூடிய புதிய FD திட்டத்தை அறிமுகம் செய்த பேங்க் ஆஃப் பரோடா.. சிறப்பு அம்சங்கள் என்ன?

மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்படும் 3% அகவிலைப்படி

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 50% அகவிலைப்படி வழங்கப்பட்டு வரும் நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3% வரை அகவிலைப்படி உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அவ்வாறு அகவிலைப்படி உயர்த்தப்படும் பட்சத்தில், ஜூலை மாதம் முதல் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதன்படி, ஜூலை மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 53% ஆக இருக்கும்.

இதையும் படிங்க : SBI Amrit Vrishti : எஸ்.பி.ஐ வழங்கும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு FD திட்டம்.. வட்டி மட்டும் 7.75%.. அம்ரித் விருஷ்டி குறித்த முழு விவரம் இதோ!

இன்று டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், மத்திய அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் மாத ஊதியத்துடன் அகவிலைப்படி உயர்வும், கடந்த 3 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வும் சேர்த்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
தண்ணீரின்றி உயிர் வாழும் பாலைவன விலங்குகள் என்னென்ன?
உங்களைச் சுற்றி மகிழ்ச்சியான உறவுகளை உருவாக்குவது எப்படி?
மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் அப்துல் கலாமின் பொன்மொழிகள்...!