Income Tax Refund : வருமான வரி ரீஃபண்ட் எப்போது கிடைக்கும்.. பான் கார்டு இருந்தால் போதும்.. சுலபமா தெரிஞ்சுக்கலாம்!
Online Check | வருமான வரி தாக்கல் செய்த 10 நாட்களுக்குள் பணத்தை திரும்ப பெறவில்லை என்றால் ITR-ல் உள்ள பிழை குறித்து வரி செலுத்தும் நபருக்கு தெரிவிக்கப்படும். அதுமட்டுமன்றி உங்கள் பணத்தை திரும்பப் பெறுவது குறித்து வருமான வரித்துறை உங்களுக்கு மின் அஞ்சம் அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.
வருமான வரி திரும்ப பெறுதல் : இந்தியாவில் குறிப்பிட்ட தொகைகளுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விதிக்கப்படும். அதன்படி 2023 – 2024 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது. வருமான வரி தாக்கல் செய்வதற்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து விளக்கமளித்த வருமான வரித்துறை, காலக்கெடு எதுவும் நீட்டிக்கப்படவில்லை என்றும் வருமான வரி செலுத்துவோர் ஜூலை 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. வருமான வரித்துறையின் இந்த அறிவிப்பை அடுத்து, பெரும்பாலானோர் வருமான வரி செலுத்தி முடித்தனர். இந்த நிலையில், பலரும் வருமான வரி திரும்ப பெறுதல் குறித்த குழப்பத்தில் உள்ளனர். வருமான வரி திரும்ப பெறுதல் குறித்து நீங்கள் இணையதளம் மூலமே தெரிந்துக்கொள்ளலாம். அதற்கு பான் கார்டு அவசியம். எனவே பார் கார்டு வைத்து இணையதளத்தில் வருமான வரி திரும்ப பெறுதல் குறித்து எப்படி தெரிந்துக்கொள்வது என்பதை பார்க்கலாம்.
இதையும் படிங்க : EPFO : இபிஎஃப் உறுப்பினர்களுக்கு இனி இதெல்லாம் ஈசி.. புதிய நடைமுறைகளை வெளியிட்ட இபிஎஃப்ஓ.. முழு விவரம் இதோ!
ஆன்லைனில் வருமான வரி திரும்ப பெறுதல் நிலையை தெரிந்துக்கொள்வது எப்படி?
- அதற்கு முதலில் அரசின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் இ ஃபைலிங் இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- பிறகு உங்கள் பான் எண், கடவுச் சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை பதிவு செய்து உள்நுழையவும்.
- அதில் My Account என்ற பிரிவுக்குச் செல்லவும்.
- அதில் உள்ள Refund அல்லது Demand Status என்பதை கிளிக் செய்யவும்.
- இந்த விருப்பத்தை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் வருமான வரி திரும்ப பெறுதலின் நிலை, மதிப்பீட்டு ஆண்டு, தற்போதைய நிலை, வருமான வரி திரும்ப பெறுதல் வராததன் காரணங்கள் மற்றும் பணம் செலுத்தும் முறை குறித்த தகவல்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேல் குறிப்பிட்ட முறைகளை பயன்படுத்தி நீங்கள் வருமான வரி திரும்ப பெறுதல் குறித்த தகவலை தெரிந்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு வங்கி கணக்கு விவரங்கள் சரியாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Air India : வெறும் ரூ.1,947-க்கு விமானத்தில் பயணிக்கலாம்.. ஃப்ரீடம் சேலை அறிவித்த ஏர் இந்தியா!
வருமான வரி தாக்கல் செய்த 10 நாட்களுக்குள் பணத்தை திரும்ப பெறவில்லை என்றால் ITR-ல் உள்ள பிழை குறித்து வரி செலுத்தும் நபருக்கு தெரிவிக்கப்படும். அதுமட்டுமன்றி உங்கள் பணத்தை திரும்பப் பெறுவது குறித்து வருமான வரித்துறை உங்களுக்கு மின் அஞ்சம் அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.