Credit Card : கிரெடிட் கார்டு பில் பேமெண்டில் மாற்றம்.. இனி இதுதான் நடைமுறை! - Tamil News | | TV9 Tamil

Credit Card : கிரெடிட் கார்டு பில் பேமெண்டில் மாற்றம்.. இனி இதுதான் நடைமுறை!

Updated On: 

02 Jul 2024 20:07 PM

RBI New Rules : நாட்டின் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் கணிசமான பகுதியைக் கட்டுப்படுத்தும் எச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட இந்தியாவின் முதல் மூன்று தனியார் வங்கிகள் இன்னும் பிபிபிஎஸ் தளத்தில் பதிவேற்றப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Credit Card : கிரெடிட் கார்டு பில் பேமெண்டில் மாற்றம்.. இனி இதுதான் நடைமுறை!

கோப்பு புகைப்படம்

Follow Us On

கிரெடிட் கார்டு பில் பேமெண்ட்: அனைத்து கிரெடிட் கார்டு பில் பேமெண்ட்டுகளும் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (பிபிபிஎஸ்) தளத்தின் மூலம் செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான காலக்கெடுவுடன், பல மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநர்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) உத்தரவை இன்னும் பின்பற்றவில்லை என தெரியவந்துள்ளது. பிப்ரவரியில், இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து கிரெடிட் கார்டு பில் பேமெண்ட்டுகளையும் ஜூன் 30, 2024க்குள் BBPS பிளாட்ஃபார்ம் மூலம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இந்தத் தேதிக்குப் பிறகு, BBPS பிளாட்ஃபார்மில் உள்ள வங்கிகளுக்கு மட்டுமே கிரெடிட் கார்டு பேமெண்ட்கள் ஆதரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது.

மேலும், நாட்டின் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் கணிசமான பகுதியைக் கட்டுப்படுத்தும் எச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட இந்தியாவின் முதல் மூன்று தனியார் வங்கிகள் இன்னும் பிபிபிஎஸ் தளத்தில் பதிவேற்றப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த இணக்கமற்ற வங்கிகள் மற்றும் Cred மற்றும் PhonePe உள்ளிட்ட மூன்றாம் தரப்பு கட்டண பயன்பாடுகள் IMPS, NEFT மற்றும் UPI போன்ற மாற்று முறைகளைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவைத் தவிர்த்து, கிரெடிட் கார்டு பில் பணம் செலுத்துவதற்கான விருப்பத்தைத் தொடர்ந்து பயனர்களுக்கு வழங்குகின்றன.

இது தொடர்பாக பேசிய fintech நிர்வாகி ஒருவர் “மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் IMPS, NEFT மற்றும் UPI போன்ற மாற்று முறைகளைப் பயன்படுத்துகின்றன, இருப்பினும், fintech நிறுவனங்கள் ஏற்கனவே செயல்படுத்திய கடன் வழங்குபவர்களுக்கு BBPS ஐ பயன்படுத்துகின்றன” என் தெரிவித்துள்ளார்.

கிரெடிட் கார்டு கட்டண பரிவர்த்தனைகளை ஆதரிக்கும் Paytm, அதன் செயலியில் உள்ள பயனர்களுக்கு அறிவிப்பின்படி, BBPS இயங்குதளத்தில் உள்ள வங்கிகளுக்கு மட்டுமே தற்போது சேவையை வழங்குகிறது. பாரத ஸ்டேட் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, ஐடிபிஐ வங்கி, ஏயூ சிறு நிதி வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் பெடரல் வங்கி ஆகியவை இதில் அடங்கும்.

நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்ட பணம் செலுத்தும் நிறுவனம், மற்ற வங்கிகள் BBPS தளத்தில் நுழைந்தவுடன், கடன் அட்டை பில் செலுத்தும் சேவைகளை மீண்டும் தொடங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவுக்கு 90 நாட்கள் காலக்கெடுவை நீட்டிக்க பணம் செலுத்தும் துறை திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version