Crude Oil : 7 நாட்களில் 13% விலை உயர்ந்த கச்சா எண்ணெய்.. தற்போதைய நிலவரம் என்ன?
Price History | கடந்த சில நாட்களுக்கு முன்பு கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு எடுக்கலாம் என்று இக்ரா தரக் குறியீட்டு நிறுவனம் தெரிவித்திருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என கூறப்பட்டது. ஆனால், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் கடும் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்தது. பெட்ரோல், டீசல் எண்ணெய் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்ட சூழலில், கச்சா எண்ணெய் விலை உயர்வு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த திடீர் மாற்றத்தால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் சூழலும் நிலவியது. ஆனால், அதிரடி உயர்வுக்கு பிறகு தற்போது கச்சா எண்ணெய் விலை ஒரே சீராக நிலவி வருகிறது.
இதையும் படிங்க : Fixed Deposit : எஸ்பிஐ-ன் Green Rupee Term Deposit.. ரூ.2.50, ரூ.5, ரூ.7.50 மற்றும் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!
இக்ரா தரக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை
கடந்த சில நாட்களுக்கு முன்பு கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு எடுக்கலாம் என்று இக்ரா தரக் குறியீட்டு நிறுவனம் தெரிவித்திருந்தது. இதுகுறித்து இக்ரா தரக் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் கிரிஷ் எழுதிய கடிதத்தில் கூறியிருந்ததாவது, கடைசியாக பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டபோது கடந்த மார்ச் மாதத்தில் சர்வதே சந்தையில் ஒரு பேரில் கச்சா எண்ணையின் விலை 83 முதல் 84 டாலராக இருந்தது. இந்த நிலையில் செப்டம்பரில் கச்சா எண்ணெய் இறக்குமதி விலை சராசரியாக பேரலுக்கு 75 டாலராக குறைந்துள்ளது.
இதையும் படிங்க : FD Interest Rate : 1 முதல் 2 ஆண்டுகளுக்கான FD.. அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள்.. முழு விவரம் இதோ!
இதனால் இந்தியன் ஆயில் போன்ற எண்ணெய் விநியோக நிறுவனங்களில் மோட்டார் வாகன எரிபொருள் சில்லரை விற்பனையில் லாபம் பரப்பு மெதுவாக அதிகரித்துள்ளது. இதையடுத்து கச்சா எண்ணெய் விலை மாற்றமின்றி நிலையாக இருக்கும் பட்சத்தில், பெட்ரோல் டீசலில் சில்ரை விற்பனை விலையில் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை குறைக்கப்பட வாய்ப்புள்ளது என அவர் குறிப்பிட்டிருந்தார். இக்ரா தரக்கின் இந்த அறிக்கை மூலம் மக்கள் சற்று நிம்மதியடைந்த நிலையில், அதை அப்படியே தலைகீழாக மாற்றியது கச்சா எண்ணெய் விலை உயர்வு.
இதையும் படிங்க : Indian Rupees : இந்திய ரூபாய் நோட்டிற்கு காந்தியின் புகைப்படம் முதல் தேர்வு அல்ல.. முதல் தேர்வு என்ன தெரியுமா?
ஒரே வாரத்தில் சுமார் 13 சதவீதம் விலை உயர்ந்த கசா எண்ணெய்
இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் காரணமாக கடந்த 7 நாட்களில் மட்டும் கச்சா எண்ணெய் விலை சுமார் 13% வரை உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றனர். நேற்றைய (அக்டோபர் 7) நிலவரப்படி, கச்சா எண்ணெய் பேரலுக்கு சுமார் 79.4 அமெரிக்க டாலர்கள் உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,665 ஆகும். இதுவே அதற்கு முந்தைய வாரத்தில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சுமார் 70.2 டாலர்கள் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Mark Zuckerberg : 200 மில்லியன் டாலர் சொத்து.. உலகின் 4வது பணக்காரராக உருவெடுத்த மார்க் ஜூக்கர்பெர்க்!
இவ்வாறு கச்சா எண்ணெய் கடும் விலை உயர்வை சந்தித்து வந்த நிலையில், பொதுமக்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயருமோ என்ற அச்சத்தில் இருந்தனர். ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை சமநிலையில் உள்ளதால் சாதகாமான சூழல் நிலவுவது குறிப்பிடத்தக்கது.