DA : மத்திய அரசு ஊழியர்களுக்கு வரவிருக்கும் குட் நியூஸ்.. அகவிலைப்படி உயர்வு குறித்து வெளியன புதிய தகவல்! - Tamil News | Dearness allowance will be increased by 4 percentage to central government employees says source | TV9 Tamil

DA : மத்திய அரசு ஊழியர்களுக்கு வரவிருக்கும் குட் நியூஸ்.. அகவிலைப்படி உயர்வு குறித்து வெளியன புதிய தகவல்!

Published: 

29 Jul 2024 15:37 PM

Dearness Allowance | 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அதன்படி, ஜனவரி மாதத்தில் ஒரு முறையும், பிறகு 6 மாதங்கள் கழித்தும் அகவிலைப்படி உயர்த்தப்படும். இந்த ஆண்டுக்கான முதல் 6 மாதங்களுக்கான ஆகவிலைப்படி உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த 6 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்காக ஊழியர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

DA : மத்திய அரசு ஊழியர்களுக்கு வரவிருக்கும் குட் நியூஸ்.. அகவிலைப்படி உயர்வு குறித்து வெளியன புதிய தகவல்!

மாதிரி புகைப்படம்

Follow Us On

அகவிலைப்படி உயர்வு : மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. அதாவது 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அதன்படி, ஜனவரி மாதத்தில் ஒரு முறையும், பிறகு 6 மாதங்கள் கழித்தும் அகவிலைப்படி உயர்த்தப்படும். இந்த ஆண்டுக்கான முதல் 6 மாதங்களுக்கான ஆகவிலைப்படி உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த 6 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்காக ஊழியர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான 2வது அகவிலைப்படி ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கபப்டும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அகவிலைப்படி 4% உயர்ந்தால் அடிப்படை ஊதியம் எவ்வளவு உயரும்

ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியில் மேலும் 4% உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அகவைலைப்படி சதவீதம் உயர்ந்தால் 7வது ஊதியக் குழுவின் படி அடிப்படை ஊதியம் பெறுவோருக்கு அடிப்படி ஊதியம் உயர வாய்ப்புள்ளது. அதாவது, அகவிலைப்படியில் 4% உயர்த்தப்பட்டால் ரூ.18,000 அடிப்படை ஊதியம் பெறுவோருக்கு மாதம் ரூ. 720 கூடுதலாக வழங்கப்படும். அதன்படி அடிப்படை ஊதியம் ரூ.18,720 ஆக உயர்வது மட்டுமன்றி ஆண்டுக்கு ரூ.8,640 கூடுதலாக கிடைக்கும். இதேபோல ரூ.20,000 அடிப்படை ஊதியம் பெறுபவர்களுக்கு ரூ.800 உயர்த்தி வழங்கப்படும். அதன்படி, அடிப்படை ஊதியம் ரூ.20,800 ஆக உயர்வது மட்டுமன்றி, ஆண்டுக்கு ரூ.9,600 கூடுதலாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகது.

இதையும் படிங்க : Income Tax : நெருங்கும் காலக்கெடு.. வருமான வரி செலுத்தாவிட்டால் என்ன நடக்கும்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

ரூ.20,000-க்கு மேல் அடிப்படி ஊதியம் இருந்தால் எவ்வளவு கிடைக்கும்

ரூ.25,000 அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.1,000 கூடுதலாக வழங்கப்படும். இதன் மூலம் அடிப்படை ஊதியம் ரூ.26,000 ஆக உயர்வது மட்டுமன்றி, ஆண்டுக்கு ரூ.12,000 கூடுதலாக கிடைக்கும். இதேபோல ரூ.30,000 அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.1,200 உயர்த்தப்பட்டு அடிப்படை ரூ.31,200 ஆக இருக்கும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.14,400 கூடுதலாக கிடைக்கும். இதேபோல அடிப்படை ஊதியம் ரூ.40,000-க்கு மேல் இருந்தால் ரூ.1,600 உயர்ந்து அடிப்படை ஊதியம் ரூ.41.600 ஆக இருக்கும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.19,200 கூடுதலாக கிடைக்கும். இவ்வாரு ரூ.1 லட்சம் வரை அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் ரூ.43,200 வரை ஆண்டுக்கு கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Post Office FD : வெறும் ரூ.5 லட்சம் முதலீடு செய்து ரூ.15,00,000 பெறலாம்.. அசத்தலான அஞ்சலக FD திட்டம்.. முழு விவரம் இதோ!

ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கபடுகிறது குறிப்பிடத்தக்கது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version