5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Aadhaar Renewal : இன்னும் 2 மாதங்கள் மட்டும்தான் அவகாசம்.. அதுக்குள்ள ஆதார் கார்டுல இத பண்ணலனா சிக்கல்!

Last Date | இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்களுக்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் தனிநபர் அடையாள அட்டையாக மட்டுமன்றி, முக்கிய முகவரி சான்றிதழாகவும் உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் சேறுவது முதல் மருத்துவம், பயணம், அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது என அனைத்திற்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Aadhaar Renewal : இன்னும் 2 மாதங்கள் மட்டும்தான் அவகாசம்.. அதுக்குள்ள ஆதார் கார்டுல இத பண்ணலனா சிக்கல்!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 14 Oct 2024 09:42 AM

இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் அடையாளமாக உள்ள ஆதார் கார்டில் இருக்கும் விவரங்களை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிப்பது அவசியம். இந்த நிலையில் ஆதார் கார்டை புதுப்பிக்க, வரும் டிசம்பர் 14 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு டிசம்பர் 14 ஆம் தேதிக்குள் ஆதார் கார்டு விவரங்களை புதுப்பிக்கவில்லை என்றால் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். அந்த வகையில் ஆதார் கார்டு விவரங்களை புதுப்பிப்பது எவ்வளவு அவசியம், டிசம்பர் 14 ஆம் தேதிக்குள் ஆதார் புதுப்பிக்கவில்லை என்றால் என்ன பிரச்னை என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : UPI : UPI 123 Pay மற்றும் UPI Lite பரிவர்த்தனை வரம்பை உயர்த்திய ரிசர்வ் வங்கி.. எவ்வளவு தெரியுமா?

ஆதார் கார்டு புதுப்பித்தல்

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்களுக்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் தனிநபர் அடையாள அட்டையாக மட்டுமன்றி, முக்கிய முகவரி சான்றிதழாகவும் உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் சேறுவது முதல் மருத்துவம், பயணம், அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது என அனைத்திற்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இல்லாமல் பல காரியங்களை செய்யவே முடியாத நிலை உள்ளது. இத்தகைய முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை உள்ள நிலையில், ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணகியம் கூறுகிறது. இந்நிலையில், ஆதார் கார்டை இலவசமாக புதுப்பித்துக்கொள்ள டிசம்பர் 14 ஆம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஆதார் கார்டில் திருத்தங்கள் அல்லது அப்டேட் செய்ய விரும்பும் நபர்கள் டிசம்பர் 14 ஆம் தேதிக்குள் அதை செய்து முடிக்கும் பட்சத்தில் கட்டணம் செலுத்த தேவையில்லை.

இதையும் படிங்க : Gold Vs FD : தங்கம் Vs நிலையான வைப்புநிதி.. இரண்டில் எது சிறந்தது?.. முழு விவரம் இதோ!

ஆதாட் கார்டு திருத்தம்

பொதுமக்கள் தங்கள் ஆதார் கார்டை ஆன்லைன் அல்லது இ சேவை மையங்களிலும் அப்டேட் அல்லது திருத்தம் செய்துக்கொள்ளலாம். இந்த நிலையில், வரும் டிசம்பர 14 ஆம் தேதிக்குள் மேல் ஆதார் கார்டில் திருத்தமோ அல்லது அப்டேட் செய்தாலோ கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 14-க்கு பிறகு ஆன்லைனில் ஆதார் கார்டை திருத்த வேண்டும் என்றால் ரூ.25 செலுத்த வேண்டும். அதுவே ஆஃப்லைனில், இ சேவை மையங்களில் திருத்த வேண்டும் என்றால் ரூ.50 செலுத்த வேண்டும். ஒருவேளை நீங்கள் டிசம்பர் 14 ஆம் தேதிக்குள் திருத்தம் மேற்கொள்கிறீர்கள் என்றால் எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Fixed Deposit : எஸ்பிஐ-ன் Green Rupee Term Deposit.. பொது குடிமக்களுக்கு கிடைக்கும் லாபம் எவ்வளவு?

ஆதார் கார்டை ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி

  1. அதற்கு முதலில் UIDAI-ன் https://uidai.gov.in/en/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அதில் ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவு செய்து Send OTP என்பதை கிளிக் செய்யவும்.
  3. அப்போது உங்களது மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும் அதை பதிவிட்டு லாக் இன் செய்ய வேண்டும்.
  4. இதனை தொடர்ந்து UIDAI தளத்தில் தோன்றும் பக்கத்தில் Address Update என்பதை கிளிக் செய்து அதில் Update Aadhaar Online என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  5. அதன் பிறகு நீங்கள் அப்டேட் செய்ய வேண்டிய தகவல்களை பதிவிட்டு Process to Update Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க : Fixed Deposit : எஸ்பிஐ-ன் Green Rupee Term Deposit.. ரூ.2.50, ரூ.5, ரூ.7.50 மற்றும் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!

மேற்கண்ட முறையை பின்பற்றி மிக சுலபமாக ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்துவிடலாம்.

Latest News