Aadhaar : சரியாக 14 நாட்கள் மட்டுமே உள்ளது.. அதுக்குள்ள ஆதார் கார்டுல இத பண்ணிடுங்க.. இல்லனா சிக்கல்!
UIDAI | ஆதார் கார்டில் உள்ள விவரங்களை இலவசமாக திருத்த டிசம்பர் 14ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேதிக்குள் விவரங்களை திருத்தவில்லை என்றால், கட்டணம் செலுத்தி திருத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஆதார் கார்டு ஒரு கட்டாய ஆவணமாக விளங்குகிறது. அதுமட்டுமன்றி, ஆதார் கார்டு இந்திய குடிமக்களின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இந்த நிலையில, பல்வேறு வேலைகளை செய்ய ஆதார் கார்டு முக்கிய சான்றாக கேட்கப்படுகிறது. ஆதார் கார்டு இல்லை என்றால் பல வேலைகளை செய்ய முடியாத நிலை தான் தற்போது நிலவி வருகிறது. குறிப்பாக, குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல், மருத்துவம், வீடு வாங்குவது, வீடு விற்பனை செய்வது என அனைத்திற்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு நபர் புதியதாக வேலையில் சேர்ந்தாலோ அல்லது ஏற்கனவே பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறினாலோ ஆதார் கார்டு கட்டாய ஆவணமாக கேட்கப்படுகிறது. இவ்வாறு பல தேவைகளுக்கு ஆதார் முக்கியமாக உள்ள நிலையில், அதில் இருக்கும் விவரங்களை பிழை இல்லாமல் வைத்திருப்பது கட்டாயம் ஆகும்.
இதையும் படிங்க : Aadhaar Card : ஒரு மொபைல் எண்ணில் எத்தனை ஆதார் அட்டைகளை இணைக்கலாம்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
அதிரடியாக அமல்படுத்தப்பட்ட ஆதார் அட்டை திட்டம்
இந்தியாவில் ஆதார் அட்டை திட்டம் கடந்து 2009 ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. ஆதார் அட்டை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது முதலே அது மிக வேகமாக நாடு முழுவதும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. ஆதார் அட்டை திட்டத்தை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரும் நோக்கில் கிராமங்கள் தோறும் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு ஆதார் அட்டை விநியோகம் செய்யப்பட்டது. அதன்படி இந்தியா முழுவதும் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் கார்டு வழங்கப்பட்டது. தற்போது அந்த ஆதார் கார்டு தான், பல்வேறு தேவைகளுக்கு மிக முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் கார்டில் உள்ள விவரங்களை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறுகிறது. அவ்வாறு விவரங்களை திருத்தாவிட்டால், ஆதார் கார்டை பயன்படுத்த முடியாது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை இலவசமாக திருத்த டிசம்பர் 14ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேதிக்குள் விவரங்களை திருத்தவில்லை என்றால், கட்டணம் செலுத்தி திருத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Ration Card : 5.8 கோடி ரேஷன் அட்டைகள் ரத்து.. டிசம்பர் 31-க்குள் இத பண்ணுங்க.. இல்லனா உங்க அட்டையும் ரத்து செய்யப்படலாம்!
ஆதார் அட்டையில் விவரங்களை அப்டேட் செய்வது எப்படி?
- முதலில் myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அங்கு ஆதார் எண் மற்றும் ஆதாருடன் தொடர்புடைய மொபைல் எண் ஆகியவற்றை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
- பிறகு நீங்கள் பதிவிட்ட விவரங்களை சரிபார்க்கவும். இப்போது, உங்களுக்கு ஏதேனும் விவரங்களை மாற்ற வேண்டும் என்றால் அவற்றை மாற்றலாம்.
- அதாவது முகவரி உள்ளிட்ட ஏதேனும் விவரங்களை மாற்ற வேண்டும் என்றால் மாற்றலாம்.
- பிறகு அதற்கான ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- நீங்கள் ஆவணங்களை சரியான முறையில் பதிவேற்றம் செய்த உடன் உங்கள் மொபைல் எண்ணுக்கு SRN எண் அனுப்பப்படும்.
- அந்த எண்ணை பயன்படுத்தி உங்கள் ஆதார் விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்.
டிசம்பர் 14 ஆம் தேதித்து ஆன்லைனில் ஆதார் விவரங்களை அப்டேட் செய்தால் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.
இதையும் படிங்க : Ration Card : பண்டகமில்லா குடும்ப அட்டை.. ரேஷன் கார்டு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
ஆதார் கார்டு விவரங்களை ஆஃப்லைனில் அப்டேட் செய்யும் பட்சத்தில் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.