PAN Card : பான் கார்டுல இத பண்ணிடீங்களா?.. டிசம்பர் 31 தான் கடைசி தேதி.. மிஸ் பண்ணிடாதீங்க!

Aadhaar Link | பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பது இந்தியாவில் உள்ள அனைத்து வரி செலுத்தும் நபர்களுக்கும் கட்டாயமாக உள்ளது. சமீப காலமாக, இந்தியாவில் நிதி மோசடிகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மோசடிக்காரர்கள் பொதுமக்களின் பான் எண்ணை பயன்படுத்தி நிதி மோசடிகள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

PAN Card : பான் கார்டுல இத பண்ணிடீங்களா?.. டிசம்பர் 31 தான் கடைசி தேதி.. மிஸ் பண்ணிடாதீங்க!

ஆதார் மற்றும் பான்

Updated On: 

17 Nov 2024 11:16 AM

இந்திய குடிமக்களுக்கு ஆதார் கார்டு எப்படி ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறதோ, அதே அளவுக்கு பான் கார்டும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பான் கார்டு இல்லையென்றால் நிதி தொடர்பான பல வேலைகளை செய்ய முடியாமல் போய்விடும். இந்த நிலையில், ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை இணைக்க வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு குறிப்பிட்ட தேதிக்குள் பான் கார்டை, ஆதார் கார்டுடன் இணைக்கவில்லை என்றால் நீங்கள் ஏற்கனவே மேற்கொண்டு வந்த நிதி சார்ந்த சேவைகள் மற்றும் முக்கிய நிதி சேவைகளை செய்ய முடியாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Senior Citizen FD : எஸ்பிஐ வங்கியின் மூத்த குடிமக்களுக்கான அம்ரித் விருஷ்டி திட்டம்.. எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பது ஏன் அவசியம்?

பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பது இந்தியாவில் உள்ள அனைத்து வரி செலுத்தும் நபர்களுக்கும் கட்டாயமாக உள்ளது. சமீப காலமாக, இந்தியாவில் நிதி மோசடிகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மோசடிக்காரர்கள் பொதுமக்களின் பான் எண்ணை பயன்படுத்தி நிதி மோசடிகள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு தங்களது பான் விவரங்கள் திருடப்பட்டு மோசடிகள் நடைபெறுவது அந்த எண்ணின் உரிமையாளருக்கே தெரியாது என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் தகவலாக உள்ளது.

மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க இது கட்டாயம்!

இத்தகைய மோசடிகள் மற்றும் குற்ற சம்பவங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க தான் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்றும் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அவ்வாறு ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதன் மூலம் ஒரு நபருக்கு ஒரே ஒரு ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இருப்பதை உறுதி செய்ய முடியும். இதன் மூலம் பெரும்பாலான மோசடி சம்பவங்கள் மற்றும் குற்றங்கள் தடுக்கப்படுகின்றனர். இவ்வாறு ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கப்படுவதன் மூலம் பொதுமக்களின் தனிப்பட்ட விவரங்கள் பாதுகாக்கப்பட்டு மோசடி சம்பவங்கள் குறைக்கப்படுவதால் பான் மற்றும் ஆதார் கார்டை இணைக்க அரசு வலியுறுத்துகிறது.

இதையும் படிங்க : Senior Citizen FD : எஸ்பிஐ வழங்கும் மூத்த குடிமக்களுக்கான FD.. 1 ஆண்டு திட்டத்தில் ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

அபராதம் செலுத்த வேண்டும்

இந்த நிலையில் வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க வேண்டும் என அரசு கூறியிருந்தது. டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் இலவசமாக இணைத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் கார்டை இணைத்தாலும் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதார் மற்றும் பான் கார்டை இணைப்பது எப்படி?

  • ஆதார் மற்றும் பான் கார்டை இணைப்பதற்கு முதலில் வருமான வரித்துறையின் www.incometax.gov.in என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அங்கு முகப்பு பக்கத்தில் “Quick Link” என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சென்று “Link Aadhaar” என்பதை கிளிக் செய்யுங்கள்.
  •  தற்போது ஒரு புதிய பக்கம் தோன்றும். அதில் உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு எண், பெயர் உள்ளிட்ட தகவல்களை சரியாக பதிவிட வேண்டும். விவரங்களை பதிவிட்ட பிறகு, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் செக் பாக்ஸை கிளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு லிங்க் ஆதார் என்பதை கிளிக் செய்து உங்களுடைய பான் மற்றும் ஆதார் விவரங்களை பதிவிட வேண்டும்.
  • தேவையாக தகவல்களை வழங்கிய பிறகு லிங்க் ஆதார் என்பதை கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் பதிவிட்டுள்ள அனைத்து விவரங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்கள் பான் மற்றும் ஆதான் கார்டு இணைக்கப்படும்.

மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றி நீங்கள் சுலபமாக ஆதார் மற்றும் பான் கார்டை இணைத்துக்கொள்ளலாம்.

தலையணை உறையை மாற்றாமல் இருந்தால் என்னாகும்?
30 வயதுக்கு பிறகும் முகத்தில் முகப்பரு எதனால் ஏற்படுகிறது..?
பெற்றோரிடம் குழந்தைகள் ரகசியமாக தெரிந்து கொள்ளும் விஷயங்கள்!
நீங்கள் வேலை பார்க்கும் இடம் சரியானதா? - அறிய டிப்ஸ் இதோ!