5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Did You Know: இந்தியாவில் காஃபி மிஷின்.. சுவாரஸ்ய பின்னணி தெரியுமா?

Espresso: நான் காஃபி பிசினஸ் பண்ணும் வரை espresso என்ற வார்த்தையே இந்தியர்களுக்கு தெரியாது. சுவிட்சர்லாந்துக்கு இங்கு விளைந்த காபி கொட்டையை வாங்கி கொண்டு கொடுத்தேன். அங்குள்ளவர் அதை மைக்ரோஸ்கோப் மூலமாக பார்த்து 80ல் 37 கொட்டைகள் சொத்தையாக உள்ளதாகவும், பயன்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.

Did You Know: இந்தியாவில் காஃபி மிஷின்.. சுவாரஸ்ய பின்னணி தெரியுமா?
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 24 Jul 2024 12:38 PM

எக்ஸ்பிரசோ காஃபி: நம்மில் பலருக்கும் ஒவ்வொரு நாளையும் காஃபி அல்லது டீ போன்றவை இல்லாமல் கடக்க மாட்டோம். அப்படிப்பட்ட காஃபியில் காலப்போக்கில் பல்வேறு விதமான வகைகள் வந்து விட்டது. அதற்கேற்ப வெவ்வேறு பெயர்களில் காஃபி கடைகள் இந்தியாவில் வேரூன்றி விட்டது. நன்கு அரைக்கப்பட்ட கொட்டையுடன் சூடான நீர் சேர்த்து காபி தயாரிக்க பயன்படுவதே எக்ஸ்பிரசோ மிஷினாகும். 1900ஆம் ஆண்டுகளில் இது அறிமுகமானாலும் இந்தியாவில் இந்த மிஷின் மூலம் காஃபி வரும் நடைமுறை 2000 ஆம் ஆண்டுக்கு பின்னால் தான் அறிமுகமானது.இத்தகைய எக்ஸ்பிரசோ காஃபியை இந்தியாவில் பிரபலப்படுத்திய பெருமை என்பது முன்னாள் தொலைத்தொடர்பு நிறுவமான ஏர்செல்லின் நிறுவனர் சிவசங்கரன் தான் பலரும் அறியாத தகவல். அந்த தொழில் ரகசியம் பற்றி நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

இலக்கு பணம் தான்

இன்றைக்கு கூட என்னுடைய இலக்கு என்பது பணம் தான். எனக்கு சுயநலம் என்பது உண்டு. நீ ஒரு சிறப்பான விஷயத்துக்காக வேலை செய். அதற்கான பரிசு தான் பணம். அந்த பணத்தின் மீது ஆசை வை. ஆனால் மோகம் கொள்ளாதே. பணத்துக்கும் இன்பத்துக்கும் சம்பந்தம் இல்லை. நீ மகிழ்ச்சியாக இருந்தால் உனக்கு பணம் கிடைக்கும். பணத்தை நாம் கட்டுக்குள் வைக்கும் வரையில் மகிழ்ச்சி நம்முடன் இருக்கும். என்றைக்கு பணம் நம்மை அதிகாரம் செய்யத் தொடங்குதோ அன்றைக்கு எல்லாம் போய்விடும். பணத்தை பாதுகாப்பதிலேயே கவலை வந்துவிடும். நான் இப்போது தான் அதை படித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு செலவு பண்ணி பழக்கம் ஏற்பட்டு விட்டதால் அதை பாதுகாக்க எனக்கு தெரியவில்லை.

இந்தியாவில் espresso காஃபி

நான் காஃபி பிசினஸ் பண்ணும் வரை espresso என்ற வார்த்தையே இந்தியர்களுக்கு தெரியாது. சுவிட்சர்லாந்துக்கு இங்கு விளைந்த காபி கொட்டையை வாங்கி கொண்டு கொடுத்தேன். அங்குள்ளவர் அதை மைக்ரோஸ்கோப் மூலமாக பார்த்து 80ல் 37 கொட்டைகள் சொத்தையாக உள்ளதாகவும், பயன்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார். அதன்பிறகு நான் காபி கொட்டையை பற்றி படித்தேன். உலகளவில் நம்பர் 1 ஆக இருந்த டாக்டர் எல்லி என்பவரிடம் விநியோக உரிமையை வாங்கி இந்தியாவில் 7 இடங்களில் அந்த காஃபி மெஷினை நிறுவி ரூ.10க்கு காஃபி விற்றேன். அந்த கம்பெனியை 100 மில்லியன் டாலருக்கு விற்றேன்.

காஃபி மாதிரி ஒரு ஆண்டி- ஆக்ஸிடண்ட் எதுவும் கிடையாது. காதலிலும், வீரத்திலும், வியாபாரத்திலும் விதிமுறைகள் என்பது கிடையாது. ஆனால் அரசின் சட்டத்தை மட்டுமே மதிக்க வேண்டும். ஒரு கிலோ சர்க்கரையை ரூ.50க்கு வாங்கி ரூ.60க்கு விற்பதில் தவறில்லை. அது வியாபார யுக்தி. ஆனால் 1 கிலோ சர்க்கரை என சொல்லி அதில் 910 கிராம் வைத்திருப்பது தவறானது. தொழில் போட்டியில் எல்லாருமே ஜெயிக்கலாம். ஒருவர் ஜெயிப்பதால் மற்றவர்கள் வெற்றி பாதிக்காது.ஆனால் இங்கு நிலவும் தாழ்வு மனப்பான்மை மற்றவர்கள் வெற்றி பெறக்கூடாது என நினைக்க வைக்கிறது.

Latest News