Did You Know: கோகோ கோலா முதலில் என்ன கலரில் இருந்தது தெரியுமா? - Tamil News | Did You Know, History of coco cola, Coco cola Colour | TV9 Tamil

Did You Know: கோகோ கோலா முதலில் என்ன கலரில் இருந்தது தெரியுமா?

Coco Cola: கோகோ கோலா என்ற பெயருக்கு காரணம், கோகோ என்றால் மேற்கு தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட தாவரமாகும். கோலா என்பது காஃபின் கொட்டையின் மூலப்பொருளாகும். பாட்டில் மற்றும் கேன்களில் விற்கப்படும் கோகோ கோலாவுக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பது நாம் அறிந்த செய்தி தான்.

Did You Know: கோகோ கோலா முதலில் என்ன கலரில் இருந்தது தெரியுமா?

கோப்பு புகைப்படம்

Updated On: 

25 Jul 2024 15:30 PM

கோகோ கோலா: அடிக்கிற வெயிலுக்கும் சரி, உற்சாகப்படுத்த மனதுக்கும் சரி நெருக்கமாக அமைகிறது குளிர்பானங்கள். என்னதான் இயற்கையாக விளையும் பழங்கள் கொண்டு ஜூஸ்கள் தயாரானாலும், செயற்கை நிறம் மற்றும் சுவையூட்டி சேர்த்து விற்பனை செய்யப்படும் ஆக்ஸிஜனேற்ற பானங்கள் தான் சந்தையில் மிகப்பெரிய அளவில் விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் பெப்சி, கோகோ கோலா ஆகிய இரண்டு கம்பெனிகள் உலகமெங்கும் பரந்து விரிந்து வியாபார சந்தையில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளது. இதில் கோகோ கோலா என்றவுடன் அதன் கருப்பு நிற பானம், சிவப்பு, வெள்ளை எழுத்துகள் கலந்த அதன் பாட்டில் தான் நம் அனைவருக்கும் நியாபகம் வரும் இல்லையா?. ஆனால் கோகோ கோலா ஆரம்ப காலத்தில் வேறு வடிவத்தில் வந்துள்ளது நம்மில் பலருக்கும் தெரியாத விஷயமாகும். அதனைப் பற்றி காணலாம்.

Also Read: Did You Know: இந்தியாவில் காஃபி மிஷின்.. சுவாரஸ்ய பின்னணி தெரியுமா?

கோகோ கோலா உற்பத்தி

 

1886 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்டது தான் கோகோ கோலா நிறுவனமாகும்.2023ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சிறந்த உலகளாவிய பிராண்ட் என்ற பட்டியல் ஆய்வில் இதற்கு 6வது இடம் கிடைத்துள்ளது. கோகோ கோலா 1886 ஆம் ஆண்டில் ஜோர்ஜியாவின் அட்லாண்டாவைச் சேர்ந்த டாக்டர் ஜான் எஸ்.பெம்பர்டன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.ஆரம்பத்தில் ஒரு மருத்துவ டானிக்காக பயன்படுத்தப்பட்ட கோகோ கோலா, 1888 ஆம் ஆண்டில் ஆசா கிரிக்ஸ் கேன்ட்லர் என்ற தொழிலதிபருக்கு விற்கப்பட்டது. அவரின் யுக்திதான் உலகளவில் கோகோ கோலா பானம் மிகப்பெரிய அளவில் வியாபார வளர்ச்சியைப் பெற்றது.

கோகோ கோலா என்ற பெயருக்கு காரணம், கோகோ என்றால் மேற்கு தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட தாவரமாகும். கோலா என்பது காஃபின் கொட்டையின் மூலப்பொருளாகும். பாட்டில் மற்றும் கேன்களில் விற்கப்படும் கோகோ கோலாவுக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பது நாம் அறிந்த செய்தி தான். ஆனால் கோகோ கோலா பாட்டில் முதலில் என்ன கலரில் இருந்தது தெரியுமா?

Also Read: Olympic Football Match: அர்ஜென்டினா வீரர்களை தாக்கிய ரசிகர்கள்.. பாரிஸ் ஒலிம்பிக் தொடங்கிய உடனே பெரும் பரபரப்பு!

மாற்றப்பட்ட நிறம்

ஆரம்ப காலக்கட்டத்தில் கோகோ கோலா பச்சை நிற கண்ணாடி பாட்டில்களில் விற்கப்பட்டது என ஆய்வுகள் தெரிவிக்கிறது. அதற்கு காரணம் பச்சை நிறம் சூரிய ஒளியின் தாக்கத்தை குறைக்கும் என பயன்படுத்தப்பட்டது. ஆனால் காலப்போக்கில் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல காரணங்களால் அதன் வடிவமும், நிறமும் மாற்றப்பட்டது. அதன்படி ஆடை அணிந்த ஒரு பெண்ணின் நிழற்படத்தை ஒத்திருந்த வகையில் அந்த கண்ணாடி பாட்டில் உருவாக்கப்பட்டிருப்பதை இன்றும் நாம் காணலாம். ஆனால் உள்ளே இருக்கும் பானத்தின் நிறம் அதே கருப்பு – பழுப்பு நிறம் தான். கோகோ கோலா பானத்தின் சுவைக்கான சூத்திரம் அமெரிக்காவில் உள்ள Truist Financial வங்கி பெட்டகத்தில் 86 ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?
46 ரன்களுக்கு ஆல் அவுட்.. மோசமான சாதனை படைத்த இந்திய அணி..!