Aadhaar Card : வீடு மாறிட்டீங்களா.. அப்போ மறக்காம ஆதார் கார்டுல இத பண்ணிடுங்க! - Tamil News | Did you shifted your house then do it immediately in Aadhaar card | TV9 Tamil

Aadhaar Card : வீடு மாறிட்டீங்களா.. அப்போ மறக்காம ஆதார் கார்டுல இத பண்ணிடுங்க!

Updated On: 

05 Aug 2024 21:11 PM

Details Correction | பள்ளி, கல்லூரிகளில் சேறுவது, மருத்துவம், பயணம், அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது என அனைத்திற்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இல்லாமல் பல காரியங்களை செய்யவே முடியாத நிலை உள்ளது. இத்தகைய முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை உள்ள நிலையில், ஆதாரில் உள்ள விவரங்கள் சரியாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

Aadhaar Card : வீடு மாறிட்டீங்களா.. அப்போ மறக்காம ஆதார் கார்டுல இத பண்ணிடுங்க!

மாதிரி புகைப்படம்

Follow Us On

ஆதார் முகவரி : இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமனக்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை தனிநபர் அடையாள அட்டையாக மட்டுமன்றி, முக்கிய முகவரி சான்றிதழாகவும் உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் சேறுவது, மருத்துவம், பயணம், அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது என அனைத்திற்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இல்லாமல் பல காரியங்களை செய்யவே முடியாத நிலை உள்ளது. இத்தகைய முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை உள்ள நிலையில், ஆதாரில் உள்ள விவரங்கள் சரியாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். ஒருவேளை உங்கள் ஆதாரில் ஏதேனும் தகவல் தவறாக இருந்தால் அதை உடனடியாக திருத்தம் செய்வது மிக முக்கியம்.

இதையும் படிங்க : Aadhaar Card : செப்டம்பர் 14 ஆம் தேதி தான் கடைசி.. ஆதார் கார்டு குறித்து வெளியான முக்கிய தகவல்!

ஆதாரில் முகவரியை அப்டேட் செய்வது கட்டாயம்

முக்கியமாக ஒரு நபர் ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு, அதாவது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயருகிறார் என்றால் அவர் அதை கட்டாயம் ஆதார் அட்டையில் அப்டேட் செய்ய வேண்டும். எனவே நீங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயருகிறீர்கள் என்றால் முகவரியை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும். ஆதார் அட்டையில் முகவரியை மாற்றம் செய்வது சுலபம். வீட்டில் இருந்தபடியே நீங்கள் அதை செய்து முடித்துவிடலாம். அதற்கு புதிதாக இடம் பெயர்ந்த வீட்டின் மின்சார கட்டண ரசீது மட்டும் இருந்தால் போதும்.

இணையத்தில் ஆதார் முகவரியை அப்டேட் செய்வது எப்படி?

  1. முதலில் UIDAI-ன் My Aadhaar இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. பிறகு ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவு செய்து, Send OTP என்பதை கிளிக் செய்யவும்.
  3. பிறகு உங்கள் மொபைல் எண்ணுக்கு வந்துள்ள OTP-யை பதிவு செய்து Log In என்பதை கிளிக் செய்யவும்.
  4. அதன் பின் இணையத்தில் ஒரு புதிய பக்கம் திறக்கப்படும். அதற்கு கீழே Address Update என்பதை கிளிக் செய்து, பிறகு Update Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  5. அப்போது புதிய பக்கம் ஒன்று தோன்றும். அதில் உள்ள தகவல்களை சரிபார்த்துவிட்டு பிறகு Process to Update Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  6. இதற்கு பிறகு தற்போதைய முகவரி திரையில் தோன்றும். பின்னர் நீங்கள் மாற்றம் செய்ய விரும்பும் விவரங்களை அதன் கீழ் தோன்றும் Details to be updated என்ற பகுதியில் பதிவு செய்ய வேண்டும்.
  7. முகவரியை முழுவதுமாக பதிவேற்றிய பிறகு, முகவரிக்கான ஆதாரமாக மின் கட்டண ரசீதை அப்டேட் செய்ய வேண்டும்.
  8. இதற்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Amazon Freedom Festival : அதிரடி ஆஃபர்களுடன் வரப்போகும் அமேசான் ஃப்ரீடம் சேல்.. எப்போது தெரியுமா.. தேதிய குறிச்சு வச்சுக்கோங்க!

மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றி நீங்கள் வீட்டிலேயே ஆதாரில் உள்ள முகவரியை அப்டேட் செய்துக்கொள்ளலாம்.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version