WhatsApp : இதை செய்தால் போதும்.. உங்கள் “Personal Chat”-ஐ யாராலும் பார்க்க முடியாது! - Tamil News | do this to protect your personal whatsapp chat from your friends and family | TV9 Tamil

WhatsApp : இதை செய்தால் போதும்.. உங்கள் “Personal Chat”-ஐ யாராலும் பார்க்க முடியாது!

Published: 

26 Nov 2024 21:17 PM

Chat Lock | வாட்ஸ்அப் அன்றாட உரையாடல்கள் மட்டுமன்றி, முக்கிய மற்றும் தனிப்பட்ட விவரங்களை பகிர்ந்துக்கொள்ளும் செயலியாகவும் உள்ளது. இந்த நிலையில், உங்களின் வாட்ஸ்அப் உரையாடலை பாதுகாக்க இதை செய்தால் மட்டும் போதும்.

1 / 6மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலிக்கு லட்சக்கணக்கான பயனர்கள் உள்ளனர். தங்கள் பயனர்களின் நலனுக்காக வாட்ஸ்அப், அவ்வப்போது சில அறிவிப்புகள் மற்றும் அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. 

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலிக்கு லட்சக்கணக்கான பயனர்கள் உள்ளனர். தங்கள் பயனர்களின் நலனுக்காக வாட்ஸ்அப், அவ்வப்போது சில அறிவிப்புகள் மற்றும் அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. 

2 / 6

அந்த அறிவிப்புகள் மற்றும் அம்சங்கள் பயனர்களை பாதுகாப்பாக வாட்ஸ்அப் பயன்படுத்த உதவி செய்கிறது. இந்த நிலையில், வாட்ஸ்அப் உரையாடல்களை யாரும் பார்க்காத வகையில் பாதுகாக்க இத செய்தால் போதும். 

3 / 6

முதலில் வாட்ஸ்அப் செயலியை திறக்க வேண்டும். அதில் நீங்கள் எந்த உரையாடலை லாக் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

4 / 6

சாட்டை தேர்வு செய்த பிறகு அதை நீண்ட நேரம் அழுத்தி மேலே வலது பக்கத்தில் தெரியும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும். 

5 / 6

அப்போது லாக் சாட் (Lock Chat) என்ற ஒரு அம்சம் தோன்றும். அதனை கிளிக் செய்யும் பட்சத்தில் நீங்கள் தேர்வு செய்த உரையாடல் மறைக்கப்படும். நீங்கள் அந்த உரையாடலை திறக்க வேண்டும் என்றால் உங்களது கைரேகையை பதிவு செய்தால் மட்டுமே முடியும். 

6 / 6

வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சம் தனிப்பட்ட மற்றும் முக்கிய விவரங்கள், உரையாடல்களை பாதுகாக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மனித உடலில் உள்ள இரத்தம் ஏன் உப்பாக இருக்கிறது..?
குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள்!
இந்தியாவின் பிரபலமான தேயிலை தோட்டங்கள்!
காலிஃபிளவரை இப்படி சுத்தம் செய்யுங்கள்