5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இப்படி முதலீடு பண்ணுங்க: மாதம் ரூ.20 ஆயிரம், ரூ.12 லட்சமாக உயரும்!

ELSS SIP Mutual Funds: இந்த முதலீடுகளில் பெரும்பாலான விருப்பங்களுக்கு குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் லாக்-இன் காலம் இருக்கும். மேலும், இவை வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வைப்புத்தொகை மூலம் ஒரு வருடத்தில் ரூ.1.50 லட்சம் வரை வருமான வரியைச் சேமிக்கும் விருப்பத்தை வழங்குகின்றன.

இப்படி முதலீடு பண்ணுங்க: மாதம் ரூ.20 ஆயிரம், ரூ.12 லட்சமாக உயரும்!
இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்.
Follow Us
intern
Tamil TV9 | Published: 28 Jun 2024 23:20 PM

சிறந்த இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள்: இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள் வருமான வரிச் சட்டம் 80சி-யின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த முதலீடுகளில் பெரும்பாலான விருப்பங்களுக்கு குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் லாக்-இன் காலம் இருக்கும். மேலும், இவை வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வைப்புத்தொகை மூலம் ஒரு வருடத்தில் ரூ.1.50 லட்சம் வரை வருமான வரியைச் சேமிக்கும் விருப்பத்தை வழங்குகின்றன. இதற்கிடையில், ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம் அல்லது இஎல்எஸ்எஸ் என்பது மூன்று வருட லாக்-இன் காலத்துடனும் வருகின்றன. இவை, வரிச் சலுகைகளை வழங்கும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் வகைகளில் ஒன்றாக விளங்குவதால் முதலீட்டாளர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. மேலும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள் ஒரு வருட காலத்தில் 41.75 சதவீத வருமானத்தையும், மூன்று ஆண்டுகளில் 19.79 சதவீதத்தையும், ஐந்தாண்டுகளில் 19.49 சதவீத வருமானத்தையும் வழங்கியுள்ளன. இந்நிலையில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த 5 திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

பேங்க் ஆஃப் இந்தியா இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்டு

பேங்க் ஆஃப் இந்தியா இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்டு மூன்றாண்டு காலத்தில் 35.10 சதவீத வருமானத்தை அளித்துள்ளது. இந்த நிதியின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் ரூ 1,327 கோடி ஆகும். அதன் நிகர மதிப்பு ரூ 196.2300 ஆகும். இந்தத் திட்டத்தில், , ரூ. 20,000 மாதாந்திர எஸ்ஐபி மூன்று ஆண்டு காலத்தில் மொத்தம் ரூ.11,83,363 கொடுத்துள்ளது.

ஐ.டி.ஐ இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்டு

ஐ.டிஐ இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்டு மூன்று ஆண்டுகளில் 35.71 சதவீத வருடாந்திர SIP வருமானத்தை அளித்துள்ளது. இது ரூ 338 கோடி நிர்வாகத்தில் கீழ் உள்ள சொத்துக்களை கொண்டிருக்கும் போது, ​​அதன் நிகர மதிப்பு ரூ 26.5845 ஆக இருந்தது. அதே நேரத்தில், ரூ.20,000 மாதாந்திர எஸ்ஐபி ரூ.11,92,762 கொடுத்துள்ளது.

மோதிலால் ஓஸ்வால் வரி சேமிப்பு ஃபண்டு

மோதிலால் ஓஸ்வால் வரி சேமிப்பு ஃபண்டு இஎல்எஸ்எஸ் நிதி மூன்று வருட காலத்தில் 38.09 சதவீத வருமானத்தை அளித்துள்ளது. இந்த நிதியில் ரூ. 20,000 மாதாந்திர எஸ்ஐபி அதே காலகட்டத்தில் மொத்தம் ரூ.12,30,137 கொடுத்துள்ளது.

குவாண்ட் இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு நிதி

குவாண்ட் இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு நிதி மூன்று வருட காலப்பகுதியில் 35.97 சதவீத வருடாந்திர எஸ்.ஐ.பி வருமானத்தை வழங்கியுள்ளது. ஃபண்டில் ரூ.20,000 மாதாந்திர எஸ்ஐபி அதே காலக்கட்டத்தில் ரூ.11,96,860ஐப் பெற்றுள்ளது.

எஸ்.பி.ஐ லாங் டெர்ம் ஈக்விட்டி ஃபண்டு

எஸ்.பி.ஐ லாங் டெர்ம் ஈக்விட்டி ஃபண்டு, 38.65 சதவீத வருடாந்திர எஸ்.ஐ.பி வருமானத்துடன் (XIRR) பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிதியானது ரூ.23,888 கோடி நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்து (AUM) ஆகும், அதே சமயம் அதன் நிகர சொத்து மதிப்பு (NAV) ரூ.451.7710 ஆகும். மறுபுறம், மூன்று ஆண்டுகளில் ஃபண்டில் ரூ.20,000 மாத எஸ்ஐபி அல்லது ரூ.7,20,000 முதலீடு, மொத்தம் ரூ.12,38,963 கொடுத்துள்ளது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீட்டுக்கு முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முழுமையாக தெரிந்துகொள்ளவும்.

இதையும் படிங்க : ஓராண்டில் 60% வரை ரிட்டன்: இந்த ஈக்விட்டி ஃபண்டுகளை நோட் பண்ணுங்க!