5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Aadhaar Card : ஒரு மொபைல் எண்ணில் எத்தனை ஆதார் அட்டைகளை இணைக்கலாம்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

UIDAI | ஆதார் அட்டையை மொபைல் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாகப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு மொபைல் எண்ணுடன் எத்தனை ஆதார் கார்டுகளை இணைக்கலாம் என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் இருக்கிறது.

Aadhaar Card : ஒரு மொபைல் எண்ணில் எத்தனை ஆதார் அட்டைகளை இணைக்கலாம்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 30 Nov 2024 10:17 AM

ஆதார் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் அடையாளமாக விளங்குகிறது. அதன்படி, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இல்லையென்றால் பல வேலைகளை நம்மால் செய்து முடிக்க முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, வயது, பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. எனவே, ஆதார் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் தங்களது ஆதார் அட்டையை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும் என்பது முக்கியமாக பார்க்கபப்டுகிறது. ஆதார் அட்டையில், பெயர் உள்ளிட்ட விவரங்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு மொபைல் எண்ணை இணைப்பது முக்கியமாக கருதப்படுகிறது. காரணம், மொபைல் எண்ணை வைத்து அந்த ஆதார் அட்டை உண்மையானதா அல்லது போலியானதா என கண்டறியப்படுகிறது. இந்த நிலையில், ஒரு மொபைல் எண்ணில் எத்தனை ஆதார் கார்டுகளை இணைக்கலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Ration Card : 5.8 கோடி ரேஷன் அட்டைகள் ரத்து.. டிசம்பர் 31-க்குள் இத பண்ணுங்க.. இல்லனா உங்க அட்டையும் ரத்து செய்யப்படலாம்!

ஆதார் அட்டையின் முக்கியத்துவம் என்ன?

ஆதார் அட்டை திட்டம் கடந்து 2009 ஆம் ஆண்டு மத்திய அரசால் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அது முதலே இந்திய தனித்துவ ஆணையத்தால் ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் முக்கிய அடையாள ஆவணமாக இருப்பது மட்டுமின்றி பல்வேறு தேவைகளுக்கும் ஆதார் முக்கிய ஆவணமாக கேட்கப்படுகிறது. குறிப்பாக குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது வரை அனைத்து இடங்களிலும் ஆதார் கட்டாயமாக கேட்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்களின் ஆதார் அட்டையையும், ஆதார் அட்டை விவரங்களையும் முறையாக பாதுகாக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், ஒரு மொபைல் எண்ணில் எத்தனை ஆதார் அட்டையை இணைக்கலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Post Office FD : ரூ.6 லட்சம் முதலீடு செய்தால் ரூ.18 லட்சம் கிடைக்கும்.. முதலீட்டுக்கு 3 மடங்கு லாபம் தரும் அசத்தல் திட்டம்!

ஒரு மொபைல் எண்ணில் எத்தனை ஆதார் கார்டுகளை இணைக்கலாம்

ஆதார் அட்டையை மொபைல் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாகப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு மொபைல் எண்ணுடன் எத்தனை ஆதார் கார்டுகளை இணைக்கலாம் என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. ஒரே மொபைல் எண்ணில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஆதார் கார்டுகளை இணைத்துக் கொள்ளலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறுகிறது. அதாவது குடும்ப உறுப்பினர்கள் தங்கள் குடும்ப தலைவரின் மொபைல் எண்ணிலோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாருடைய மொபைல் எண்ணில் வேண்டுமானாலும் தங்களது ஆதார் அட்டைகளை இணைத்துக் கொள்ளலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெளிவுப்படுத்துகிறது. இந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே ஒரே மொபைல் எண்ணில் ஆதார் அட்டையை இணைக்க முடியும், வேறு குடும்பத்தை சேர்ந்தவர்கள் வேறு ஒருவரின் மொபைல் எண்ணில் தங்களது ஆதார் கார்டுகளை இணைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Paytm : புதிய அம்சத்துடன் களமிறங்கிய பேடிஎம்.. இனி அனைத்திற்கும் “PIN” நம்பர் தேவையில்லை!

ஆதார் கார்டில் உள்ள விவரங்களைஒ ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய தனித்து அடையாள ஆணையம் கூறுகிறது. இந்த நிலையில், ஆதார் அட்டை விவரங்களை இலவசமாக புதுப்பித்துக்கொள்ள டிசம்பர் 14 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News