5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Aadhaar : ஆதார் கார்டு விவரங்களை எத்தனை முறை மாற்றலாம்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்!

Corrections of Aadhaar Details | ஆதார் கார்டில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், ஆதார் மையத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும். பிறந்த தேதியை ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும் என்பதால் அதையும் ஆதார் மையத்திலே செய்து முடிப்பது நல்லது.

Aadhaar : ஆதார் கார்டு விவரங்களை எத்தனை முறை மாற்றலாம்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 28 Jul 2024 18:16 PM

ஆதார் கார்டு : ஆதார் கார்டு என்பது இந்திய குடிமக்களின் தனித்துவ அடையாள அட்டை ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டாயம் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டும். ஏனெனில், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்தகைய மிக முக்கிய ஆதாரமான ஆதார் கார்டை அவ்வப்போது அப்டேட் செய்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அவ்வாறு ஆதார் கார்டுகளை அப்டேட் செய்யாமல் இருந்தால், உங்களால் பல வேலைகளை செய்ய முடியாமல் போகலாம். ஆனால் அதிக முறையும் ஆதார் கார்டை அப்டேட் செய்யவும் முடியாது. இப்போது ஆதார் கார்டில் உள்ள விபவரங்களை எத்தனை முறை அப்டேட் செய்யலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆதார் கார்டில் பெயர், முகவரி, பாலினம் உள்ளிட்ட விவரங்களை எத்தனை முறை மாற்றலாம் என்பது குறித்து சில விதிகள் உள்ளன.

எவற்றையெல்லாம் மாற்றம் செய்யலாம் ?

பெயர் : ஆதார் அட்டையில் உங்கள் பெயரை அதிகபட்சமாக 2 முறை மாற்றாலாம்.

பாலினம் : ஆதார் கார்டில் உங்கள் பாலினத்தை 1 முறை மட்டுமே மாற்ற முடியும்.

பிறந்த தேதி : பாலினத்தை போலவே பிறந்த தேதியையும் ஆதார் கார்டில் 1 முறை மட்டுமே மாற்ற முடியும்.

முகவரி : முகவரி மாறிக்கொண்டே இருக்கும் என்பதால் முகவரியை எப்போது வேண்டுமானாலும் அதார் கார்டில் மாற்றிக்கொள்ளலாம்.

மொபைல் எண் : முகவரியை போலவே மொபைல் எண்ணும் மாறிக்கொண்டே இருக்கும் என்பதால் அதையும் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : PMAY : மத்திய அரசின் இலவச வீடு பெற என்ன செய்ய வேண்டும்.. யார் யார் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் இதோ!

ஆதார் கார்டில் மாற்றம் செய்வது எப்படி

ஆதார் கார்டில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், ஆதார் மையத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும். பிறந்த தேதியை ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும் என்பதால் அதையும் ஆதார் மையத்திலே செய்து முடிப்பது நல்லது. போதிய ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். முகவரியை மாற்ற வரம்புகள் இல்லை என்பதால் அவற்றை ஆதார் மையங்களில் மட்டுமன்றி, ஆன்லைனிலும் சுலபமாக செய்து முடித்துவிடலாம்.

ஆதாரில் முகவரியை மாற்றுவது எப்படி?

  • முதலில் ஆதாரின் அதிகாரப்பூர்வ UIDAI இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • உங்கள் ஆதார் எண் மற்றும் ஓடிபியை கொண்டு லாக் இன் செய்யவும்.
  • பின் மெனுவிலிருக்கும் “ஆதார் அப்டேட்” ஆப்ஷனை செலக்ட் செய்து ப்ரொசீட் செய்யவும்.
  • பின்னர் முகவரியை செலக்ட் செய்து, புதிய முகவரி விவரங்களை பதிவிடவும்.
  • ஆவணங்களை அப்லோட் செய்யவும்.
  • பிறகு ரூ.50 கட்டணத்தை செலுத்து புதுப்பித்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : Whatsapp : இனி புகைப்படங்கள் , வீடியோக்களை ஷேர் செய்ய நெட்வொர்க் தேவையில்லை.. வாட்ஸ்அப்பின் அசத்தல் அம்சம்!

ஒருவேளை உங்களது பெயர் அல்லது முகவரியை மாற்றம் அல்லது திருத்தம் செய்ய வேண்டு என்றால் மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றி செய்துக்கொள்ளலாம்.

Latest News