ஓராண்டில் 56% ரிட்டன்.. இந்த மியூச்சுவல் ஃபண்டை நோட் பண்ணுங்க!
Mutual fund Investment : ஆக்ஸிஸ் மல்டிகேப் ஃபண்டுகள் கடந்த ஓராண்டில் 56 சதவீதம் வரை வருவாய் அளித்துள்ளன. இந்தப் ஃபண்டின் நிர்வாகத்தின் கீழ் சொத்து (AUM) ரூ.6,576.86 கோடியாக உள்ளது.
Axis Multicap Mutual Fund : பரஸ்பர ஃபண்டுகள் முதலீட்டில் ஒருவர் நல்ல வருமானம் பெற விரும்பினால் மல்டிகேப் ஃபண்ட் அவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்க முடியும். இது அனைத்து மார்க்கெட் திட்டங்கள் அதாவது, லார்ஜ்கேப், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் ஆகியவற்றிலும் முதலீடு செய்யும் திட்டமாகும். பொதுவாக லார்ஜ்கேப் பண்டுகள் சந்தை வீழ்ச்சியில் பாதுகாப்பை வழங்குகின்றன. ஏனெனில் இவற்றின் முதலீட்டு விகிதம் அதிகம் என்பதால் அவ்வளவு எளிதாக பெரிய அளவில் ரிஸ்க் ஏற்பட வாய்ப்பு இல்லை. அதே வேளையில், நடுத்தர மற்றும் ஸ்மால்கேப் பண்டுகள் அதிக நன்மைகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதே நேரத்தில் இந்தப் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் முன் இதில் உள்ள ரிஸ்க்குகள் குறித்தும் முதலீட்டாளர்கள் அறிந்துக்கொள்வது அவசியம் ஆகும்.
பரஸ்பர நிதி முதலீடு – வருவாய், ரிஸ்க் பகிர்வு
மேலும், சந்தையை பொறுத்தமட்டில், எந்த ஒரு சந்தை ஃபண்டும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடியாது. எனவே, முதலீட்டாளர்கள் சொத்து ஒதுக்கீட்டின் கீழ் அனைத்து சந்தை ஃபண்டுகளிலும் முதலீடு செய்ய வேண்டும். இந்த நிலையில், பரஸ்பர நிதிகள் ஆண்டு அடிப்படையில், 2023 ஆம் ஆண்டில் நிஃப்டி 100 டிஆர்ஐயின் வருவாய் 21 சதவீதமாகவும், நிஃப்டி மிட்கேப் 150 டிஆர்ஐயின் வருவாய் 45 சதவீதமாகவும், நிஃப்டி ஸ்மால்கேப் 250 டிஆர்ஐயின் வருவாய் 49 சதவீதமாக உள்ளது.
அனைத்து சந்தை ஃபண்டுகளிலும் முதலீடு செய்வதன் நன்மை என்னவென்றால், ஒரு சந்தை மூலதனத்தில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ஆபத்து மற்றும் வருமானம் முழு சந்தை மூலதனம் முழுவதும் பன்முகப்படுத்தப்படுகிறது. இதற்கு மத்தியில் கடந்த ஓராண்டிால் 56 சதவீதம் வரை வருவாய் ஈட்டிக் கொடுத்த மல்டிகேப் பரஸ்பர நிதி பற்றி பார்க்கலாம்.
ஆக்ஸிஸ் மல்டி கேப் ஃபண்டு
மல்டிகேப் ஃபண்ட் சந்தையில், ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் கடந்த காலங்களில் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. இந்த ஃபண்ட் அதன் தொடக்கத்தில் இருந்து முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து நல்ல வருமானத்தை அளித்து வருகிறது. மேலும், ஆக்ஸிஸ் மல்டிகேப் ஃபண்டு பொதுவாக பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்கிறது.
இதனால், ஓப்பீட்டளவில் மற்ற மிடில் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது ரிஸ்க் குறைவு ஆகும். மேலும் சில ஸ்மால் நிறுவனங்களிலும் முதலீடு செய்கிறது. ஏனெனில், சிறிய நிறுவனங்கள் பெரியதாக மாறும் வாய்ப்பு உள்ளது. அந்த வகையில், மல்டிகேப் ஃபண்ட், லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் மற்றும் டைனமிக் ஆகியவற்றில் 25-25 சதவிகிதம் முதலீடு செய்கிறது.
ஓராண்டில் 56% ரிட்டன்
ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்டின் மல்டிகேப் பற்றி நாம் பேசினால், அது நிதிச் சேவைகள், ஆட்டோமொபைல், மூலதனப் பொருட்கள், ஹெல்த்கேர், தகவல் தொழில்நுட்பம் (ஐடி), ரியால்டி மற்றும் நுகர்வோர் பொருட்கள் ஆகியவற்றில் அதிகபட்சமாக முதலீடு செய்துள்ளது. இவை அனைத்தும் ஒவ்வொரு சந்தை சூழலிலும் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதோடு அவர்களின் முதலீடுகளுக்கு நல்ல வருமானத்தையும் அளிக்கும் துறைகளாகும்.
கடந்த ஓராண்டில் மல்டிகேப் துறையில் நல்ல வருமானம் கொடுத்த 4 ஃபண்டுகளில், ஆக்சிஸின் மல்டிகேப் 56.02 சதவீத லாபத்தை அளித்துள்ளது. கோடக் மல்டிகேப் 52.83%, எச்.எஸ்.பி.சி திட்டம் 51.90% மற்றும் எல்ஐசி மல்டிகேப் 51.37% வருமானத்தை அளித்துள்ளது. இந்த ஃபண்டுகளில் ஓராண்டுக்கு முன்பு யாராவது ரூ.1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், அந்தத் தொகை இப்போது ரூ.1.56 லட்சமாக மாறியிருக்கும்.
சுருங்கசொல்வதென்றால், இந்தப் ஃபண்டின் நிதியானது உள்நாட்டு பங்குகளில் 93.55% முதலீட்டைக் கொண்டுள்ளது. அதில் 31.33% லார்ஜ் கேப் பங்குகளிலும், 11.05% மிட் கேப் பங்குகளிலும், 23.36% ஸ்மால் கேப் பங்குகளிலும் உள்ளது. மேலும், கடந்த கால நிலவரத்தை பார்க்கும்போது, குறைந்த பட்சம் 3-4 வருடங்கள் பணத்தை முதலீடு செய்து அதிக வருமானத்தை முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதையும் படிங்க : SIP முதலீட்டில் அதிகரிக்கும் ஆர்வம். அக்டோபர் மாதம் புதிய சாதனை!
ஃபண்ட் தொடக்கம்- ஃபண்டுகள் வருவாய்
ஆக்சிஸ் மல்டிகேப் ஃபண்ட் என்பது ஈக்விட்டி – மல்டி கேப் ஃபண்ட் மற்றும் ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்டிற்கு சொந்தமானது. இது 17-டிசம்பர்-2021 அன்று தொடங்கப்பட்டது. தற்போது, நிர்வாகத்தின் கீழ் சொத்து (AUM) ரூ.6,576.86 கோடியாக உள்ளது.
இந்த நிலையில், கடந்த ஓராண்டில் மல்டிகேப் துறையில் நல்ல வருமானம் கொடுத்த 4 ஃபண்டுகளில், ஆக்சிஸின் மல்டிகேப் 56.02 சதவீத லாபத்தை அளித்து முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து, இரண்டாம் இடத்தில் கோடக் மல்டிகேப் 52.83% உள்ளது. அடுத்த இடங்களில், எச்.எஸ்.பி.சி (HSBC) திட்டம் (51.90%) மற்றும் எல்ஐசி மல்டிகேப் 51.37% உள்ளது.
அதாவது, இந்த ஃபண்டுகளில் ஓராண்டுக்கு முன்பு யாராவது ரூ.1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், அந்தத் தொகை தற்போது ரூ.1.56 லட்சமாக மாறியிருக்கும். அதேநேரம், எல்.ஐ.சி மல்டிகேப் ஃபண்டில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் தொகை ரூ.1.51,000 ஆக வளர்ந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை.