5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

400 நாள்கள் எஃப்.டிக்கு 8.05 சதவீதம் வட்டி.. இந்தியன் வங்கியின் அசத்தல் அறிவிப்பு!

Indian Bank Special Fixed Deposit Scheme: இந்தியன் வங்கி இரண்டு சிறப்பு நிலையான வைப்பு திட்டங்களை தனது வாடிக்கையாளருக்கு வழங்குகிறது. இதில், ஒன்று 300 நாட்கள், மற்றொன்று 400 நாள்கள் காலக்கெடு கொண்டது.

400 நாள்கள் எஃப்.டிக்கு 8.05 சதவீதம் வட்டி.. இந்தியன் வங்கியின் அசத்தல் அறிவிப்பு!
இந்தியன் வங்கி ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட்
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Published: 29 Nov 2024 11:09 AM

இந்தியன் வங்கி சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம்: இந்தியன் வங்கி இரண்டு சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களும் நவ.30, 2024ஆம் தேதியோடு நிறைவு பெறுகின்றன. மேலும், இந்த சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் சூப்பர் மூத்த குடிமக்களுக்கு 8.05 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. தொடர்ந்து, சாதாரண வட்டி விகிதம் 7.30 சதவீதம் ஆகும். மற்றொரு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில், மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு 7.80 சதவீதம் வட்டி கிடைக்கிறது. இந்தத் திட்டங்களின் முழுமையான வட்டி விகிதம், கடைசி தேதி, டெபாசிட் திட்டத்தின் நாள்கள் குறித்து பார்க்கலாம்.

இந்த் சுப்ரீம் 300 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட்

இந்த் சுப்ரீம் 300 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் 300 நாள்கள் காலக்கெடுவை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில், சாதாரண குடிமக்களுக்கு 7.05 சதவீதத்தைப் பெற உரிமை உண்டு. மூத்த குடிமக்கள் 7.55 சதவீதம் வட்டி பெறுவார்கள். மேலும், சூப்பர் மூத்த குடிமக்கள் 7.80 சதவிகிதம் வரை வட்டி வருமானம் பெறுவார்கள்.

இதையும் படிங்க :  ரயில் டிக்கெட்டில் பெயர் தப்பாகிடுச்சா? கவலைய விடுங்க.. இப்படி மாற்றுங்க!

400 நாள்கள் சிறப்பு எஃப்.டி

இந்தியன் வங்கியின் 400 நாள்கள் சூப்பர் எஃப்.டி-க்கு வட்டி சற்று கூடுதலாக கிடைக்கும். மேலும், இந்த் சுப்ரீம் 300 நாள்கள் எஃப்.டி-ஐ போன்று, இந்தத் திட்டமும் நவ.30, 2024 ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது.

வட்டி விகிதம்

  1. பொது 7.30%
  2. மூத்தக் குடிமக்கள் 7.80%
  3. சூப்பர் மூத்தக் குடிமக்கள் 8.05%

இந்தியன் வங்கி சாதாரண ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம்

  • 91-120 நாள்கள் 3.50%
  • 121-180 நாள்கள் 3.85%
  • 181 முதல் 9 மாதங்களுக்குள் 4.50%
  • 9 மாதம் முதல் 1 ஆண்டுக்குள் 4.75%
  • 1 ஆண்டு 6.10%
  • 2 ஆண்டு 6.70%
  • 3 ஆண்டு 6.25%
  • 4 ஆண்டு 6.25%
  • 5 ஆண்டு 6.25%

இந்த வட்டி விகிதங்கள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.3 கோடிக்கு உள்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு மட்டும் பொருந்தும். மேலும், மூத்தக் குடிமக்களுக்கு வட்டி விகிதம் சற்று அதிகமாக இருக்கும். இது தொடர்பான முழுமையான விவரங்களுக்கு வங்கி கிளையை தொடர்புக் கொள்ளவும்.

ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.

  • 1 ஆண்டு 6.70%
  • 2 ஆண்டு 6.10%
  • 3 ஆண்டு 6.00%
  • 4 ஆண்டு 6.00%
  • 5 ஆண்டு 6.00%

இந்த வட்டி விகிதங்கள் ஜூன் 12, 2024 முதல் பொருந்துகின்றன.

மற்ற வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்

ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டின் காலத்தைப் பொறுத்து, எச்டிஎஃப்சி, பொது மக்களுக்கு ஆண்டுக்கு 3.50-7.25 சதவீதம் ரிட்டன் அளிக்கிறது.
அதேநேரத்தில், எஸ்.பி.ஐ 3.50-7.00% வட்டி வழங்குகிறது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியை பொறுத்தமட்டில் 3 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வட்டி வழங்குகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி 3.50 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதில் மூத்தக் குடிமக்களுக்கு கூடுதலாக 0.50 சதவீதம் வட்டி விகிதம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மாதம் ரூ.500-ஐ ஒதுக்குங்க.. ரூ.1,60,728-ஐ தூக்குங்க: PPF திட்டத்தில் வருமானம் பார்ப்பது எப்படி?

Latest News