வட்டியாக மட்டும் ரூ.4.5 லட்சம் வருமானம்: இந்தப் போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம் தெரியுமா? | Do you know the interest rate of post office time deposit schemes Tamil news - Tamil TV9

வட்டியாக மட்டும் ரூ.4.5 லட்சம் வருமானம்.. இந்தப் போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம் தெரியுமா?

Updated On: 

14 Jun 2024 08:47 AM

Post office scheme: ஜூன் 30, 2024 காலாண்டில், சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை அரசாங்கம் மாற்றாமல் வைத்துள்ளது. 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஏப்ரல் 1, 2024 இல் தொடங்கி ஜூன் 30, 2024 அன்று முடிவடைகிறது.

வட்டியாக மட்டும் ரூ.4.5 லட்சம் வருமானம்.. இந்தப் போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம் தெரியுமா?

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்

Follow Us On

அஞ்சலக சிறுசேமிப்பு திட்டம்: இந்திய அஞ்சலகங்கள் ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 6.9 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன. அதேநேரத்தில் 2 ஆண்டு முதலீடுக்கு 7 சதவீதம் வட்டியும், 3 ஆண்டு முதலீடுக்கு 7.1 சதவீதம் வட்டியும், 5 ஆண்டு முதலீடுக்கு 7.5 சதவீதம் வட்டியும் வழங்குகின்றன. இந்தத் திட்டத்தில் ரூ.1000 முதல் முதலீடு செய்யலாம். மேற்கொண்டு முதலீடு 100-ன் மடங்குகளில் இருத்தல் வேண்டும். மேலும் இந்தத் திட்டங்களில் வரிச் சலுகைகளும் உள்ளன. அதாவது, 5 ஆண்டு திட்டத்தில் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரிச் சட்டம் 80சி பிரிவில் வரி விலக்கு காட்டிக் கொள்ளலாம். அந்த வகையில், இந்தத் திட்டத்தில் ரூ.10 லட்சத்தை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் தற்போதுள்ள வட்டி விகிததத்தின்படி, முதிர்ச்சியின் போது வருவாய் ஆக ரூ.14,49,948 கிடைக்கும். அதாவது வட்டியாக மட்டும் ரூ.4,49,948 கிடைக்கும். ஏனெனில் 5 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

முதலீடுக்கு என்ன வட்டி?

அதேபோல் இந்தத் திட்டத்தில் ரூ.1 லட்சத்தை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் ரூ.1,44,995 ரிட்டன் ஆக கிடைக்கும். மேலும், ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால் ரூ.2,89,990ம், ரூ.3 லட்சத்தை முதலீடு செய்தால் ரூ.4,34,984ம், ரூ.4 லட்சத்தை முதலீடு செய்தால் ரூ.5,79,979ம், ரூ.4 லட்சத்தை முதலீடு செய்தால் ரூ.5,79,979ம், ரூ.5 லட்சத்தை முதலீடு செய்தால் ரூ.7,24,974ம் கிடைக்கும். அதாவது வட்டியாக மட்டும் ரூ.1 லட்சம் முதலீடுக்கு ரூ.44,995ம், ரூ.2 லட்சம் முதலீடுக்கு ரூ.89,990ம், ரூ.3 லட்சம் முதலீடுக்கு ரூ.1,34,984ம், ரூ.4 லட்சம் முதலீடுக்கு ரூ.1,79,979ம், ரூ.5 லட்சம் முதலீடுக்கு ரூ.2,24,974ம் கிடைக்கும்.

அஞ்சலக வட்டி விகிதங்கள்

ஜூன் 30, 2024 காலாண்டில், சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை அரசாங்கம் மாற்றாமல் வைத்துள்ளது. 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஏப்ரல் 1, 2024 இல் தொடங்கி ஜூன் 30, 2024 அன்று முடிவடைகிறது.
இதனை நிதி அமைச்சகம் 2024 மார்ச் 8ஆம் தேதி விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவித்து இருந்தது.

மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம்

அஞ்சலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் அரசாங்கம் 8.2% வட்டி வழங்குகிறது. இந்தத் திட்டத்தில், குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ. 1000 மற்றும் 1000 இன் மடங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். ஒருவர் இதில் அதிகப்பட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்துக் கொள்ளலாம். ஒரு நிதியாண்டில் அனைத்து மூத்தக் குடிமக்கள் சேமிப்பு கணக்குகளின் மொத்த வட்டி ரூ.50,000க்கு மேல் இருந்தால் வட்டிக்கு வரி விதிக்கப்படும். மேலும், நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் டி.டி.எஸ் மொத்த வட்டியிலிருந்து கழிக்கப்படும். படிவம் 15 G/15H சமர்ப்பிக்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்கு மேல் திரட்டப்பட்ட வட்டி இல்லை என்றால் டிடிஎஸ் கழிக்கப்படாது.

இதையும் படிங்க : SBI மியூச்சுவல் ஃபண்டு: மாதம் ரூ.20000 முதலீடு செய்தால் ரூ.32.61 லட்சம் தேடி வரும்!

குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
Exit mobile version