ரூ.15 ஆயிரம் முதலீடு, ரூ.10 லட்சம் ரிட்டன்.. டாப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!
Mid Cap Mutual Funds : கடந்த 3 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த டாப் 5 மிட்கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். இந்தப் ஃபண்டுகளில் ரூ.15 ஆயிரம் மாதாந்திர எஸ்.ஐ.பி முதலீடு ரூ.10 லட்சமாக உயர்ந்துள்ளது.
மிட்கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்: இன்றைய காலகட்டத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த விழிப்புணர்வு இளசுகள் மட்டுமின்றி மூத்தக் குடிமக்களிடமும் காணப்படுகிறது. எனினும், அவர்கள் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்ய யோசிக்கின்றனர். ஆனால், வளர்ந்து வரும் தலைமுறையினர் ரிஸ்க் எடுக்க தயங்குவதில்லை. அதிக ரிஸ்க், அதிக ரிட்டன் என்ற முதலீட்டு விதியை அவர்கள் தயக்கமின்றி பின்பற்றுகின்றனர். இதனால், தற்போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த மிட்கேப் ஃபண்டுகள் குறித்து பார்க்கலாம்.
மிட் கேப் ஃபண்டுகள் என்றால் என்ன?
மிட்-கேப் ஃபண்டுகள் என்பது நடுத்தர அளவிலான நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யும் ஒரு வகை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஆகும். இந்தத் திட்டத்தில் (மார்க்கெட் கேப்ஸ் ரூ.5,000 கோடிக்கு மேல், அதே நேரம் ரூ.20,000 கோடிக்கும் கீழ் குறைவாக உள்ளது.
அதாவது, சந்தை மூலத்தனத்தின் அடிப்படையில் இந்த நிறுவனங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. மியூச்சுவல் ஃபண்ட் விதிமுறைகளின்படி, சந்தை மூலதனத்தின் அடிப்படையில் 101 முதல் 250 வரை தரவரிசையில் இவை காணப்படும். இந்த நிறுவனங்களே மிட் கேப் நிறுவனங்கள் என அழைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன.
இதையும் படிங்க : நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்.. மாதம் ரூ.10 ஆயிரம் முதலீடு, ரூ.1 கோடி ஈஸி ரிட்டன்!
மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட்
மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட் கடந்த 3 ஆண்டுகளில் 47.04 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளது. இதன் அதன் நிகர சொத்து மதிப்பு (NAV) ரூ 124.5802 ஆகும். இந்தத் திட்டத்தில் ரூ.500 முதல் முதலீடு செய்யலாம்.
ரூ.15 ஆயிரம் மாதாந்திர எஸ்.ஐ.பி முதலீடு ரூ.10 லட்சத்து 33 ஆயிரத்து 318 ஆக உயர்ந்துள்ளது.
எடெல்வெசிஸ் மிட்கேப் ஃபண்ட்
எடெல்வெசிஸ் மிட்கேப் ஃபண்ட் திட்டம் ஆண்டுக்கு 37.73 சதவீதம் வட்டி கொடுத்துள்ளது. இத்திட்டத்தில் மாதாந்திர ரூ.15 ஆயிரம் எஸ்.ஐ.பி. முதலீடு, 3 ஆண்டுகளில் ரூ.9 லட்சத்து 18 ஆயிரத்து 555 ஆக உயர்ந்துள்ளது.
இன்வெஸ்கோ இந்தியா மிட்கேப் ஃபண்ட்
இன்வெஸ்கோ இந்தியா மிட்கேப் ஃபண்ட் கடந்த 3 ஆண்டுகளில் 37.32 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளது. இந்தத் திட்டத்தில் ரூ.500 முதல் முதலீடு செய்யலாம்.
ரூ.15 ஆயிரம் மாதாந்திர எஸ்.ஐ.பி ரூ.9 லட்சத்து 13 ஆயிரத்து 701 ஆக உயர்ந்துள்ளது.
ஹெச்.எஸ்.பி.சி மிட்கேப் ஃபண்ட்
ஹெச்.எஸ்.பி.சி மிட்கேப் ஃபண்ட் திட்டத்தில் ரூ.500 குறைந்தப்பட்ச எஸ்.ஐ.பி முதலீடு ஆகும். இந்தத் திட்டத்தில் ரூ.15 ஆயிரம் மாதாந்திர எஸ்.ஐ.பி ரூ.9 லட்சத்து ஆயிரத்து 879 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.
மகிந்திரா மேனுலைஃப் மிட்கேப் ஃபண்ட்
மகிந்திரா மேனுலைஃப் மிட்கேப் ஃபண்ட் திட்டம் கடந்த 3 ஆண்டுகளில் 35.87 சதவீதம் வளர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்தத் திட்டத்தில், குறைந்தப்பட்ச எஸ்.ஐ.பி ரூ.500 ஆகும்.
கடந்த 3 ஆண்டுகளில் ரூ.15 ஆயிரம் மாதாந்திர எஸ்.ஐ.பி ரூ.8 லட்சத்து 96 ஆயிரத்து 683 ஆக உயர்வு கண்டுள்ளது.
இதையும் படிங்க : Mutual fund: மாதம் ரூ.5 ஆயிரம் முதலீடு.. ரூ.1 கோடி ரிட்டன்!
மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் தங்கள் முதலீட்டில் 65 சதவீதத்தை மிக உயர்ந்த சந்தை மூலதன நிறுவனங்களின் பட்டியலில் 101 முதல் 250 வது இடத்தில் உள்ள நிறுவனங்களில் வைத்திருக்க வேண்டும் என்பது பரஸ்பர நிதிகளுக்கான இந்திய பங்குச் சந்தை வாரியத்தின் (செபி) விதியாகும்.
ஆகவே இந்த வகை ஃபண்டுகள் ஸ்மால் கேப் ஃபண்டுகளை காட்டிலும் சிறந்தவைகளாக உள்ளன. மேலும், மியூச்சுவல் ஃபண்டுகளின் வளர்ச்சி வாய்ப்புகளையும் சில நிலைத்தன்மையையும் வழங்குகின்றன. அந்த வகையில் தரவுகளின் அடிப்படையில் இந்த மியூச்சுவல் ஃபண்ட்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
பொறுப்பு துறப்பு : மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவை. இதில் எந்தவொரு திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன், செபியால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு நிபுணரின் ஆலோசனைகளை பெற பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு எவ்வித நிதி உத்தரவாதமும் அளிக்கப்படுவதில்லை.