வங்கி எஃப்.டி-ஐ விட அதிக வட்டி.. இந்த 5 போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்கள் தெரியுமா?
Best Post office Savings Schemes: ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை விட அதிக வட்டி வழங்கும் 5 போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் இங்குள்ளன. இந்தத் திட்டங்களில் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும்? இந்தத் திட்டங்களின் வட்டி விகிதம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
பொதுவாக, ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும், அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு மிகவும் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட வங்கிகள் உத்ரவாதம் அளிக்கின்றன. அதேநேரத்தில் அஞ்சல திட்ட முதலீடுகளுக்கு மத்திய அரசும், நிதி அமைச்சகமும் உத்ரவாதம் அளிக்கின்றன. மேலும், அஞ்சலகங்களில் பல்வேறு சிறப்பு திட்டங்களும் உள்ளன. இந்தத் திட்டங்கள் முதலீட்டாளர்களின் வயது மற்றும் பாலினத்தை ஒத்தவை ஆகும். உதாரணமாக, மூத்தக் குடிமக்கள், மகளிர், பெண் குழந்தைகள் என சிறப்புத் திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது நாம், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்-ஐ விட அதிக வட்டி வழங்கும் அஞ்சலக திட்டங்கள் குறித்து பார்க்கலாம். இதில் முன்னணியில் மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா (செல்வ மகள் சேமிப்பு திட்டம்) உள்ளது.
இந்தத் திட்டங்களில் 8.2 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகின்றன. நாம் தற்போது இந்தத் திட்டங்களில் எப்படி முதலீடு செய்வது? எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது? என்பது குறித்து பார்க்கலாம்.
இதையும் படிங்க : முதலீட்டாளர்களுக்கு அறிய வாய்ப்பு.. ரூ.100க்கு என்.டி.பி.சி ஐ.பி.ஓ: விண்ணப்பிப்பது எப்படி?
5 போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள்
வ.எண் திட்டத்தின் பெயர் வட்டி விகிதம் (%)
- மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் 8.2%
- சுகன்யா சம்ரித்தி யோஜனா 8.2%
- கிஷான் விகாஸ் பத்ரா 7.5%
- அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம் 7.4%
- தேசிய சேமிப்பு சான்றிதழ் 7.7%
தேசிய சேமிப்பு சான்றிதழ்
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் குறைந்தப்பட்சம் ரூ.1,000 முதல் முதலீடு செய்யலாம். திட்டத்தின் லாக்-இன் காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்தத் திட்டத்தில் சிறப்பு என்னவென்றால் அதிகப்பட்ச முதலீடுக்கு வரம்பு இல்லை.
7.7 சதவீதம் வட்டி கிடைக்கும் இத்திட்டத்தில் மற்றொரு சிறப்பு என்றால் இந்திய வருமான வரிச் சட்டம் 80சியின் படி வரிச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன.
அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்
அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் அதிகப்பட்ச முதலீடு ரூ.9 லட்சம் ஆகும். திட்டத்தின் லாக்-இன் காலம் 5 ஆண்டுகளாக உள்ளன. இந்தக் கணக்கை என்.ஆர்.ஐ திறக்க இயலாது.
கிஷான் விகாஸ் பத்ரா
கிஷான் விகாஸ் பத்ரா திட்டத்தில் ஆண்டுக்கு 7.5 சதவீதம் கூட்டு வட்டி வழங்கப்படுகிறது. அதாவது, இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீடு 115 மாதங்களில் இரட்டிப்பு ஆகிவிடும்.
இதில் குறைந்தப்பட்ச முதலீடு ரூ.1,000 ஆகும். அதேபால் திட்டத்தில் இந்திய வருமான வரிச் சட்டம் 1961ன் கீழ் ரூ.1.5 லட்சம் வைர வரி சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
சுகன்யா சம்ரித்தி யோஜனா
சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், 14 வயதுக்கு உள்பட்ட முதல் இரு பெண் குழந்தைகள் பயன்பெறலாம். இத்திட்டத்தில், ரூ.250-ஐ செலுத்தி கணக்கை திறக்கலாம். இதில் அதிகப்பட்சமாக ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம்
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 2024-25 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) ஆண்டுக்கு 8.2% என்ற வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்தத், திட்டத்திலம் வரிச் சலுகைகள் உள்ளன.
இதையும் படிங்க : மாதம் ரூ.2 ஆயிரம் முதலீடு.. ரூ.3 கோடி சாத்தியம்: எப்படி?
வங்கி எஃப்.டி திட்டங்கள்
வங்கி எஃப்.டி திட்டங்கள் வங்கிகளுக்கு வங்கிகள் மற்றும் முதலீட்டு காலம் மற்றும் தொகைக்கு ஏற்ப மாறுபடுகின்றன. இந்த நிலையில் நாம் தற்போது 5 வங்கிகளின் ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை பார்க்கலாம்.
வ.எண் வங்கி பொது (%) மூத்தக் குடிமக்கள் (%)
1. கனரா வங்கி 6.85% 7.35%
2. பஞ்சாப் நேஷனல் வங்கி 6.85 7.35%
3. எஸ்.பி.ஐ 6.8% 7.3%
4. ஃபெடரல் வங்கி 6.8% 7.3%
5. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 6.7% 7.2%
Disclaimer: இந்தச் செய்தி தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. பயனரின் முதலீட்டு லாப நஷ்டங்களுக்கு டி.வி 9, நிர்வாகம் பொறுப்பேற்காது. எந்தவொரு முதலீட்டுக்கு முன் செபி-யால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது.