பான் கார்டு திருத்தம், புதுப்பிப்பு இலவசம்.. இந்தப் புதிய திட்டம் தெரியுமா?

PAN 2.0 : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு வருமான வரித் துறையின் பான் 2.0 திட்டத்திற்கு ரூ.1,435 கோடி நிதிச் செலவில் ஒப்புதல் அளித்துள்ளது.

பான் கார்டு திருத்தம், புதுப்பிப்பு இலவசம்.. இந்தப் புதிய திட்டம் தெரியுமா?

பான் 2.0 திட்டத்தின் நன்மைகள்

Published: 

27 Nov 2024 10:24 AM

பான் 2.0 திட்டம்: பான் என்பது வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட 10 இலக்க தனித்துவமான எண் ஆகும். இது, வரி செலுத்துதல்கள், டிடிஎஸ்/டிசிஎஸ் வரவுகள், வருமான வருமானம், குறிப்பிடப்பட்ட பரிவர்த்தனைகள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இதற்கிடையில், மத்திய அரசு ரூ.1,435 கோடி பான் 2.0 திட்டத்தை திங்கள்கிழமை (நவ. 25, 2024) அறிவித்தது. இதன்மூலம், மூன்று போர்ட்டல்களை ஒன்றாக இணைத்து பான் அமைப்பை நவீனமயமாக்குகிறது. இந்த மேம்படுத்தல் பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கான செயல்முறைகளை எளிதாக்குகிறது.

அதாவது, தற்போதைய பான் அமைப்பு மூன்று வெவ்வேறு தளங்களைக் கொண்டுள்ளது. அவை, இ-ஃபைலிங் போர்டல், யுடிஐஐடிஎஸ்எல் போர்டல் மற்றும் புரோட்டீன் இ-கோவ் போர்டல் ஆகும்.
இதில், இ-ஃபைலிங் போர்டல் என்பது வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான ஆன்லைன் தளமாகும். யுடிஐஐடிஎஸ்எல் போர்டல் என்பது பான் கார்டுக்கு விண்ணப்பித்தல், பான் கார்டு விவரங்களைப் புதுப்பித்தல், பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது போன்ற பான் கார்டுகள் தொடர்பான சேவைகளை வழங்கும் இணையதளமாகும்.

இதையும் படிங்க : Explained: SIP என்றால் என்ன? எப்படி முதலீடு செய்யலாம்.. மியூச்சுவல் ஃபண்ட் முழு விவரம்!

பான் 2.0 திட்டத்தின் சிறப்புகள்

இதையடுத்து, பான் 2.0 இந்த மூன்று போர்ட்டல்களையும் ஒருங்கிணைத்து ஒரே மற்றும் ஒருங்கிணைந்த போர்ட்டலாக மாற்றும்.
விண்ணப்பம், புதுப்பிப்புகள், திருத்தங்கள், ஆதார்-பான் இணைப்பு, மறு வழங்கல் கோரிக்கைகள் மற்றும் ஆன்லைன் பான் சரிபார்ப்பு போன்ற அனைத்து தளங்களையும் இந்தத் தளம் கையாளும்.

அதாவது பணிகள் தனித்தனியே கையாளப்படும். இதற்கிடையில் மத்திய அரசு, ” புதிய தளத்தை எளிமையாகவும், பயனாளர்களுக்கு ஏற்றதாகவும் மாற்ற வரித்துறை முயற்சித்து வருகிறது” என அறிககையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்தும் பணி எளிதாக்கப்படுமா?

பான் ஒதுக்கீடு/புதுப்பிப்பு/திருத்தம் இலவசமாக செய்யப்படும். பதிவு செய்யப்பட்ட அஞ்சல் ஐடிக்கு இ- பான் (e-PAN) அனுப்பப்படும்.
பான் கார்டுக்கு, விண்ணப்பதாரர் பரிந்துரைக்கப்பட்ட கட்டணமான ரூ.50 (உள்நாட்டு) உடன் விண்ணப்பம் செய்யும் போது கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்தியாவிற்கு வெளியே கார்டை டெலிவரி செய்ய ரூ. 15 + இந்திய அஞ்சல் கட்டணங்கள் விண்ணப்பதாரரிடம் வசூலிக்கப்படும்.

புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா?

தற்போதுள்ள பான் கார்டு வைத்திருப்பவர்கள் மேம்படுத்தப்பட்ட முறையின் கீழ் (பான் 2.0) புதிய பான் எண்ணுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை. எனினும், ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் மின்னஞ்சல், மொபைல் அல்லது முகவரி அல்லது பெயர், பிறந்த தேதி போன்ற ஏதேனும் திருத்தம் அல்லது புதுப்பிப்புகளைச் செய்ய விரும்பினால், இலவசமாக மேற்கொள்ளலாம். வேறு சில சேவைகளும் வழங்கப்பட்டுள்ளன.

க்யூ.ஆர். கோடு இணைப்பு

மேலும், இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் ஏதேனும் அப்டேட் அல்லது திருத்தம் செய்யாவிட்டால் பான் கார்டு மாறாது.
ஏற்கனவே உள்ள செல்லுபடியாகும் பான் கார்டுகள் பான் 2.0 இன் கீழ் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, க்யூ.ஆர் குறியீடு 2017-18 முதல் பான் கார்டுகளில் இணைக்கப்பட்டுள்ளது. இது, பான் தரவுத்தளத்தில் இருக்கும் சமீபத்திய தரவைக் காண்பிக்கும். இது மட்டுமின்றி டைனமிக் க்யூ.ஆர் குறியீடு போன்ற மேம்பாடுகள் மூலம் பான் 2.0 திட்டத்தின் கீழ் இது தொடரும்.

ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருந்தால்..

1961 இன் வருமான வரிச் சட்டத்தின் விதிகளின்படி, எந்த நபரும் ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண்ணை வைத்திருக்க முடியாது. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் அட்டைகளை வைத்திருந்தால், அதிகாரியின் கவனத்திற்குக் கொண்டு வந்து கூடுதல் பான் எண்ணை நீக்க அல்லது முடக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : வந்தே பாரத் vs ராஜ்தானி.. டிக்கெட் விலை, சொகுசு.. எந்த ரயில் பெஸ்ட்?

ஹீமோகுலோபின் அதிகரிக்க இந்த 7 ஜூஸ் ட்ரை பண்ணுங்க..
இந்த பிரச்சனை இருப்பவர்கள் கத்திரிக்காயை நிச்சயம் சாப்பிடக்கூடாது.
நடிகை சோபிதா துலிபாலாவின் சினிமா பயணம்..!
எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...