அதிகளவு எஃப்.டி-ஐ ஈர்த்த மாநிலம் எது? தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?
fixed deposit investment: அதிகளவு ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு செய்த மாநிலங்கள் பட்டியலில் இந்தியாவின் நிதி நகரம் என போற்றப்படும் மும்பைய தலைநகராக கொண்ட மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
ஓய்வு பெறுவதற்கோ அல்லது அவசர நிதியை உருவாக்குவதற்கோ சேமிப்பு என்பது வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகும். உங்கள் சேமிப்பை அதிகரிக்கவும், புத்திசாலித்தனமான முதலீடுகளைச் செய்யவும் பல சிறந்த வழிகள் உள்ளன. இதில் பெரிதளவு ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை தேர்ந்தெடுக்கின்றனர். இந்நிலையில், இந்தியாவில் அதிகளவில் ஃபிக்ஸட் டெபாசிட் செய்த மாநிலங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்தப் பட்டியலில், இந்தியாவின் நிதி நகரம் என போற்றப்படும் மும்பைய தலைநகராக கொண்ட மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
இந்தப் பட்டியலில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது என்பதை அறிந்துக் கொள்வதற்கு முன்பு, ஃபிக்ஸட் டெபாசிட் என்றால் என்ன? அதன் வகைகள் குறித்து பார்க்கலாம்.
ஃபிக்ஸட் டெபாசிட் என்றால் என்ன?
ஃபிக்ஸட் டெபாசிட் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தனிநபர் மொத்த தொகையை வங்கியில் முதலீடு செய்யும் ஒரு வகை முதலீடு ஆகும். எஃப்டியில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையானது கணக்கு திறக்கும் நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட நிலையான விகிதத்தில் வட்டியைப் பெறுகிறது.
மேலும் ஈக்விட்டி உள்ளிட்ட பங்கு முதலீடு வணிகத்துடன் ஒப்பிடும் போது, ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகள் ரிஸ்க் குறைவாக பார்க்கப்படுகின்றன. இதில், அசலுக்கும் வட்டியும் உறுதி அளிக்கப்படுகிறது. ஆனால், பங்குச் சந்தைகளில் இந்த உத்தரவாதங்கள் அளிக்கப்படுவதில்லை. ஆகவே ரிஸ்க் விரும்பாத முதலீட்டாளர்கள் எஃப்.டி-களில் அதிகளவு ஆர்வம் செலுத்துகின்றனர்.
அதிலும் குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்த வகை முதலீடு முன்னணியில் உள்ளது. இதில், ஆண்கள், பெண்கள் என வித்தியாசமின்றி முதலீட்டாளர்கள் அதிகளவு முதலீடு செய்ய முன்வருகின்றனர். மேலும், முதலீடும் வயது வித்தியாசமின்றி காணப்படுகிறது.
இதையும் படிங்க : ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 8% வரை வட்டி: இந்த வங்கிகளை செக் பண்ணுங்க!
ஃபிக்ஸட் டெபாசிட்டின் வகைககள் என்ன?
ஃபிக்ஸட் டெபாசிட்டில் பல்வேறு வகைகள் உள்ளன. அதில் வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட், மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட், கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட், ப்ளெக்ஸி ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் ஆர்.டி உள்ளிட்டவை முக்கியமானவை ஆகும்.
இதில் மற்ற ஃபிக்ஸட் டெபாசிட் உடன் ஒப்பிடும்போது ஆர்.டி சற்று வித்தியாசனது. இதில் எஸ்.ஐ.பி போன்று சிறிய தொகையை மாதந்தோறும் முதலீடு செய்ய வேண்டும்.
தற்போது நாம் அதிகளவில் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு செய்த மாநிலங்கள் குறித்து பார்க்கலாம்.
- மகாராஷ்டிரா (ரூ.20 ஆயிரத்து 395 கோடி)
- கர்நாடகா (ரூ.19 ஆயிரத்து 59 கோடி)
- டெல்லி (ரூ.10 ஆயிரத்து 788 கோடி)
- தெலங்கானா (ரூ.9 ஆயிரத்து 23 கோடி)
- குஜராத் (ரூ.8 ஆயிரத்து 508 கோடி)
- தமிழ்நாடு (ரூ.8 ஆயிரத்து 325 கோடி)
- ஹரியானா (ரூ.5 ஆயிரத்து 818 கோடி)
- உத்தரப் பிரதேசம் (ரூ.370 கோடி)
- ராஜஸ்தான் (ரூ.311 கோடி)
முன்னணி முதலீடுகளை ஈர்க்கும் துறைகள்
தரவுகளின்படி, கர்நாடகா, டெல்லி, தெலுங்கானா மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை விட மகாராஷ்டிரா முன்னேறியுள்ளது. 19,059 கோடி அந்நிய நேரடி முதலீட்டுடன் கர்நாடகா இரண்டாவது இடத்திலும், டெல்லி 10,788 கோடி அந்நிய நேரடி முதலீட்டுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்தப் பட்டியலில் தமிழ்நாடு 6ம் இடத்தில் உள்ளது. தற்போது மாநிலங்களில் ரியல் எஸ்டேட், உற்பத்தி மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகள் முதலீடுகளை ஈர்க்கும் முன்னணி துறைகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சரிவை சந்திக்கும் தங்கம்.. இது முதலீட்டுக்கு உகந்த நேரமா?