5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வேலை மாறிய பிறகு பிஎஃப் கணக்கை மாற்றவில்லை என்றால் என்ன நடக்கும்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

PF Transfer | ஊழியர்கள் ஒரு பணியில் இருந்து மற்றொரு பணிக்கு மாறும் போது கட்டாயம் பிஎஃப் கணக்கையும் மாற்ற வேண்டும். அவ்வாறு பிஎஃப் கணக்கை மாற்றவில்லை என்றால் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது தற்போது பிஎஃப் தொகைக்கு 8.25% வட்டி வழங்கப்படுகிறது. ஒருவேளை ஊழியர்கள் பிஎஃப் கணக்கை மாற்றவில்லை என்றால் அந்த வட்டிக்கு வரி பிடித்தம் செய்யப்படும்.

வேலை மாறிய பிறகு பிஎஃப் கணக்கை மாற்றவில்லை என்றால் என்ன நடக்கும்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 04 Jul 2024 17:13 PM

ஊழியர் வருங்கால வைப்புநிதி : அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஒவ்வொரு ஊழியருக்கும் பிஎஃப் கணக்கு தொடங்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் வங்கி கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். இவ்வாறு வரவு வைக்கப்படும் பணத்தை ஊழியர்கள் எந்த காரணத்தை கொண்டும் எடுக்கவில்லை என்றால், ஊழியர்கள் பணி ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்படும். ஊழியர்களின் பணி முதுவதும் பிஎஃப் தொகை பிடிக்கப்படும் என்பதால் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும்போது பிஎஃப் கணக்கையும் மாற்ற வேண்டும் என்று பிஎஃப் விதிகள் கூறுகின்றன.

ஆனால் அவ்வாறு ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு பிஎஃப் கணக்கை மாற்றுவதற்கு சில நடைமுறைகள் உள்ளன. இதன் காரணமாக பெரும்பாலான ஊழியர்கள் தங்களின் பிஎஃப் கணக்குகளை முன்பு வேலை செய்த அலுவலகத்தில் இருந்து புதிய அலுவலகத்திற்கு மாற்றாமல் வைத்துள்ளனர். இவ்வாறு பிஎஃப் கணக்கை மாற்றாமல் இருப்பதால் சில பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதாக பொருளாதார வள்ளுஞர்கள் எச்சரிக்கின்றனர்.

குறிப்பாக ஊழியர்களின் வருங்கால வைப்புநிதியில் மாதம் மாதம் வரவு வைக்கப்படும் பணத்திற்கு வட்டி வழங்கப்படும். கடந்த ஆண்டு 8,15% ஆக இருந்த ஊழியர்கள் வருங்கால வைப்புநிதி வட்டி இந்த ஆண்டு 8.25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் பயனடைவார்கள். பிஎஃப் பணத்திற்கு வட்டி வழங்கப்படுவதற்கும், ஊழியர்கள் பிஎஃப் கணக்கை மாற்றாமல் வைத்திருப்பதற்கும் ஒரு தொடர்பு உள்ளது.

அதாவது ஊழியர்கள் ஒரு பணியில் இருந்து மற்றொரு பணிக்கு செல்லும்போது பிஎஃப் கணக்கை மாற்றாவிட்டால் பிஎஃப் தொகைக்கு விதிக்கப்பட்டும் வட்டிக்கு வரி விதிக்கப்படும். மின்ட் செய்தி தளத்தின் தகவலின் படி, ஊழியர் பணி மாறிய  பிறகு பிஎஃப் கணக்கை மாற்ற தவறினால், ஊழியர்கள் தங்கள் பிஎஃப் கணக்கின் தொடர்ச்சியை இழக்க நேரிடும். EPFO, EPS திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு ஓய்வூதிய வழங்குகிறது. அதற்கு குறைந்தது 15 ஆண்டுகள் ஊழியர்கள் பிஎஃப் கணக்கில் பங்களிப்பு செய்திருக்க வேண்டும் என்று முதலீட்டு நிபுணர் ஜிதேந்திர சோலங்கி கூறியிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : பால் ஜீவன் பீமா யோஜனா.. ரூ.6 செலுத்தினால் போதும் ரூ.1,00,000 கிடைக்கும்.. குழந்தைகளுக்கான அசத்தல் திட்டம்!

அதுமட்டுமன்றி ஊழியர்கள் 15 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பிஎஃப் கணக்கில் பங்களிப்பு செய்தால் அவர்களின் நம்பிக்கையை ஊக்குவிக்கும் விதமாக, பிஎஃப் வங்கி கணக்கில் ரூ.50,000 செலுத்தப்படும் என்று அறிவித்திருந்தது. எனவே மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக பிஎஃப் கணக்கை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு பணிக்கு மாறும் போதும் மாற்றுவது பாதுகாப்பானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News