5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ATM Card : பணம் எடுக்க ஏடிஎம் கார்டு எடுத்து செல்லவில்லையா?.. கவலை வேண்டாம்.. அதான் UPI இருக்கே!

Money Withdrawal | முன்பெல்லாம் பணம் செலுத்த வேண்டும் அல்லது பணம் எடுக்க வேண்டும் என்றால் மக்கள் வங்கிகளுக்கு தான் செல்ல வேண்டும். வங்கிகளுக்கு சென்றால் மட்டுமே எந்த விதமான பண பரிவர்த்தனையும் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் வங்கிகளுக்கு சென்று படிவத்தை நிரப்பு பணம் எடுப்பது மற்றும் செலுத்துவது சற்று சவாலாகவே இருந்தது.

ATM Card : பணம் எடுக்க ஏடிஎம் கார்டு எடுத்து செல்லவில்லையா?.. கவலை வேண்டாம்.. அதான் UPI இருக்கே!
மாதிரி புகைப்படம் (Photo Credit : Tang Ming Tung/DigitalVision/Getty Images)
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 11 Sep 2024 11:37 AM

ஏடிஎம் கார்டு இல்லாமல் ஏடிஎம்-ல் பணம் எடுப்படி எப்படி : இந்தியாவில் உள்ள அனைத்து ஏடிஎம் மையங்களிலும் ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கும் புதிய அமசம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு முறையும் ஏடிஎம் மையத்திற்கு செல்லும்போது ஏடிஎம் கார்டு எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. கூகுள் பே உள்ளிட்ட ஆப்களை பயன்படுத்தி ஏடிஎம் மையத்தில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த நிலையில் ஏடிஎம் கார்டு இல்லாமல் ஏடிஎம் மையத்தில் எப்படி பணம் எடுப்பது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Fixed Deposit : 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. 8.25% வரை வட்டி வழங்கும் சிறு நிதி வங்கிகள்!

இந்தியா முழுவதும் அமைக்கப்பட்ட ஏடிஎம் மையங்கள்

முன்பெல்லாம் பணம் செலுத்த வேண்டும் அல்லது பணம் எடுக்க வேண்டும் என்றால் மக்கள் வங்கிகளுக்கு தான் செல்ல வேண்டும். வங்கிகளுக்கு சென்றால் மட்டுமே எந்த விதமான பண பரிவர்த்தனையும் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் வங்கிகளுக்கு சென்று படிவத்தை நிரப்பி பணம் எடுப்பது மற்றும் செலுத்துவது சற்று சவாலாகவே இருந்தது. இதன் காரணமாக பொதுமக்களின் பளுவை குறைக்க ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டன. குறிப்பிட்ட கிலோ மீட்டர்களுக்கு ஒரு ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டதால் தங்கள் வீடுகளின் அருகில் உள்ள ஏடிஎம் மையங்களை பொதுமக்கள் பயன்படுத்த தொடங்கினர். ஏடிஎம் மையம் மூலம் பணம் செலுத்துவது மற்றும் பணம் எடுப்பது உள்ளிட்டவற்றை எளிதாக செய்ய முடியும் என்பதால் பொதுமக்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

UPI வசதி கொண்ட மொபைல் செயலிகள்

ஏடிஎம் மையங்களின் தொடர்சியாக கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த செயலிகளில் UPI ஐடியை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யும் அருமையான திட்டம் அறிமுக செய்யப்பட்டது. ஏடிஎம் மையங்களுக்கு சென்று பண பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றால் சிறிது தூரம் பயணிக்க வேண்டும். ஆனால் UPI-ல் அந்த கவலை தேவை இல்லை. இருக்கும் இடத்தில் இருந்தே எப்பொழுது வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம். இந்த UPI சேவை நேரத்தை மிச்சம் செய்வதோடு, பணியையும் குறைத்ததால் பெரும்பாலான மக்கள் UPI சேவைக்கு மாறிவிட்டனர். இந்த நிலையில் இந்தியாவின் கடைகோடி கிராமங்களிலும் UPI சேவை சென்று சேர்ந்துவிட்டது. அந்த அளவிற்கு இந்தியாவில் UPI-ன் வளர்ச்சி உள்ளது. என்னதான் UPI இருந்தாலும் அதில் சில வரம்புகள் உள்ளது. அதுமட்டுமன்றி கையில் பணம் தேவை என்றால் ஏடிஎம் மையங்களுக்கு தான் செல்ல வேண்டும்.

இதையும் படிங்க : Farmer ID Card : ஆதார் கார்டை போலவே விவசாயிகளுக்கு அடையாள அட்டை.. வெளியான முக்கிய தகவல்!

UPI பயன்படுத்தி ஏடிஎம்-ல் பணம் எடுப்பது எப்படி

ஏடிஎம்-ல் ஏடிம் கார்டு பயன்படுத்தாமல் UPI பயன்படுத்தி பணம் எடுக்கும் முறை Interoperable Card – Less Cash Withdrawal என அழைக்கப்படுகிறது. இந்த முறையை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் எந்த ஏடிஎம் மையங்களில் வேண்டுமானாலும் ஏடிஎம் கார்டு பயன்படுத்தாமல் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். அதுமட்டுமன்றி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணத்தை டெபாசிட்டும் செய்யலாம்.

UPI பயன்படுத்தி ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் முறை

  1. முதலில் ஏடிஎம் மையத்திற்கு சென்று டிஸ்பிளேவில் கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷன்களில் UPI Cash Withdrawal at the ATM என்பதை கிளிக் செய்யுங்கள்.
  2. அதில் நீங்கள் பணம் எடுக்க விரும்பும் தொகையை பதிவிட வேண்டும்.
  3. இதற்கு பிறகு ஏடிஎம் டிஸ்பிளேவில் QR கோடு தெரியும். அதை உங்கள் மொபைல் போனில் இருக்கும் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட UPI ஆப்கள் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும்.
  4. பிறகு நீங்கள் பயன்படுத்தும் UPI பின் நம்பரை பதிவிட வேண்டும்.
  5. அவ்வளவு தான். ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நீங்கள் தகவல்களை உள்ளீடு செய்தால் எப்படி பணம் வருமோ அதேபோல பணம் வந்துவிடும்.

இதையும் படிங்க : Fixed Deposit : 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி.. 7.15% வரை வட்டி வழங்கும் பொதுத் துறை வங்கிகள்!

மேற்கண்ட இந்த முறையை பயன்படுத்தி ரூ.10,000 வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News