Elon Musk : டிரம்ப் வெற்றி எதிரொலி.. அதிரடியாக உயர்ந்த எலான் மஸ்கின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
Donald Trump | அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக எலான் மக்ஸ் வாக்கு சேகரித்தார். அந்த வகையில், தனது எக்ஸ் தளத்திலும் அவர் டிரம்புக்கு ஆதரவாக பதிவிட்டு வந்தார். அதுமட்டுமன்றி டிரம்பின் தேர்தல் செலவுக்காக அவர் நன்கொடையும் வழங்கியுள்ளார். அதாவது, சுமார் ரூ.1,000 கோடியை டிரம்புக்காக செலவிட்டார் மஸ்க்.
அமெரிக்காவில் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நவம்பர் 6 ஆம் தேதி வாக்குகள் என்னப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அமெரிக்காவின் அதிபராக குடியரசுக் கட்சி வேட்பாளரும், அமெரிக்காவின் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளரும், அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபருமான கமலா ஹாரிஸ் தோல்வியை தழுவினார். கடந்த தேர்தலில் ஜோ பைடனை எதிர்த்து போட்டியிட்டு டிரம்ப் தோல்வியடைந்த நிலையில், இந்த வெற்றி அவரது ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க : அம்பானியை விட 5 மடங்கு அதிகமாக நன்கொடை.. யார் அந்த தொழிலதிபர்.. டாப் 10 லிஸ்ட்!
அமெரிக்க அதிபர் தேர்தல் பின்னணி
ஜோ பைடன் தலைமையிலான அரசின் பதவி காலம் முடிவடையும் தருவாயில் இருந்த நிலையில், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் பிரச்சாரங்களின் போது ஜோ பைடன் சந்தித்த கடும் நெருக்கடிகள் மற்றும் சிக்கல்கள் காரணமாக அவர் போட்டியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, தான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த பைடன், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.
தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர்கள்
ஜோ பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸை வேட்பாளராக அறிவித்த போதே தான் வெற்றி பெற்றதாக டிரம்ப் தெரிவித்தார். ஆனால், அவற்றை எல்லாம் கண்டுக்கொள்ளாத கமலா, தொடர் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தார். அதுமட்டுமன்றி, டிரம்ப் உடனும் அவர் நேரடி விவாதம் நடத்தினார். கமலா ஹாரிஸ், டிரம்பு என இரு போட்டியாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது மட்டுமன்றி, உலக பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், டிரம்புக்கு ஆதரவாக களம் இறங்கினார். டிரம்ப் வெற்றிக்காக அவர் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். தற்போது அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், எலான் மஸ்கின் சொத்து மதிப்புகள் அதிரடியாக உயர்துள்ளன.
இதையும் படிங்க : RBI : நிலையான வைப்புநிதி திட்டத்தில் இந்த தொகைக்கு மேல் முதலீடு செய்யாதீர்கள்.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
அதிரடியாக உயர்ந்த எலான் மஸ்கின் சொத்து மதிப்புகள்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக எலான் மக்ஸ் வாக்கு சேகரித்தார். அந்த வகையில், தனது எக்ஸ் தளத்திலும் அவர் டிரம்புக்கு ஆதரவாக பதிவிட்டு வந்தார். அதுமட்டுமன்றி டிரம்பின் தேர்தல் செலவுக்காக அவர் நன்கொடையும் வழங்கியுள்ளார். அதாவது, சுமார் ரூ.1,000 கோடியை டிரம்புக்காக செலவிட்டார் மஸ்க். இந்த நிலையில், டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து எலான் மஸ்கின் சொத்து மதிப்புகள் உயர்ந்துள்ளன. அதாவது, எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 20.5 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ.1.68 லட்சம் கோடி ஆகும். இதன் மூலம் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு தற்போது 285.2 டாலராக உள்ளது. அதாவது, டிரம்ப் வெற்றிக்கு பிறகு மஸ்கின் சொத்து மதிப்பு சுமார் 7.73 சதவீதம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Post Office RD : ரூ.7,000 முதலீடு செய்தால் போதும்.. ரூ.4,99,564 பெறலாம்.. அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்!
டிரம்ப் வெற்றி பெற்றதை தொடர்ந்து எலான் மஸ்கின் சொத்து மதிப்பு அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், தான் பதவிக்கு வந்தால் எலான் மஸ்குக்கு மந்திரி பதவி அல்லது ஆலோசகர் பதவி வழங்குவேன் என்று டிரம்ப் அளித்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படுமா என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.