EPF Insurance | PF உறுப்பினர்களுக்கு ரூ.7 லட்சம் வரை இன்சூரன்ஸ்.. முழு விவரம் இதோ!
Provident Fund | ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அவ்வாறு மாதம், மாதம் பிடித்தம் செய்யப்படும் பணம், ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். ஊழியர்கள் இந்த பணத்தை தங்களது தேவைகளுக்கான பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஊழியர் வருங்கால வைப்புநிதி : இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஊழியர்களுக்கும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அவ்வாறு மாதம், மாதம் பிடித்தம் செய்யப்படும் பணம், ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். ஊழியர்கள் இந்த பணத்தை தங்களது தேவைகளுக்கான பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருவேளை ஊழியர் தனது பணிக்காலம் முழுவதும் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவில்லை என்றால், பணி ஓய்வுக்கு பிறகு ஓய்வூதியமாகவும் பெற்றுக்கொள்ளலாம். ஊழியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உள்ள முக்கியமான திட்டம் தான் Employees Deposit Linked Insurance (EDLI). இதில் எவ்வளவு காப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Top 10 : உலகில் அதிக பணக்காரர்களை கொண்ட டாப் 10 நாடுகள் இவைதான்.. இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?
EPFO-ன் EDLI காப்பீட்டு திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன?
ஊழியர் வருங்கால வைப்புநிதி திட்டத்தில், உறுப்பினர்களுக்கு ரூ.7 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த திட்டத்தின் கீழ், காப்பீட்டை பெற உறுப்பினர்கள் பிரீமியம் எதுவும் செலுத்த தேவையில்லை. அடிப்படை சம்பளம் ரூ.15,000-க்கு மேல் உள்ளவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.6 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும். இந்த காப்பீட்டின் தொகையானது EPF உறுப்பினர்களின் முந்தைய 12 மாதங்களுக்கான சராசரி மாத ஊதியத்தை விட 35 மடங்கு அதிகமாக வழங்கப்படுகிறது. அதாவது அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ரூ.1,15,000 ஆக வழங்கப்பட்ட போனஸ் தொகை கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரூ.1,75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Fixed Deposit : 444 நாட்கள் வரையிலான FD திட்டங்கள்.. அதிக வட்டி வழங்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!
EPFO EDLI காப்பீட்டை க்ளெய்ம் செய்வது எப்படி?
EPF உறுப்பினர் அகால மரணம் அடைந்தால் அவரின் நாமினியோ அல்லது சட்டப்பூர்வ வாரிசு யாரோ அவர்கள் காப்பீட்டு தொகையை பெற்றுக்கொள்ளலாம். அதன்படி, உறுப்பினரின் நாமினி 18 வயதை நிறம்பியவராக இருக்க வேண்டும். ஒருவேளை நாமினியின் வயது 18 விட குறைவாக இருந்தால், அவரின் பெற்றோர் அந்த பணத்திற்கு உரிமை கோரலாம். இந்த தொகையை பெற இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயமாகும்.