5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

EPFO : இபிஎஃப் உறுப்பினர்களுக்கு இனி இதெல்லாம் ஈசி.. புதிய நடைமுறைகளை வெளியிட்ட இபிஎஃப்ஓ.. முழு விவரம் இதோ!

New SOP | ஊழியர் வருங்கால வைப்புநிதி அமைப்பு, ஊழியர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட சுய விவரங்களை திருத்துவதற்கான புதிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ஊழியர்களின் ஊழியர் வருங்கால வைப்புநிதி விவரங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அது திருத்தப்பட்டு, சரியான தகவல் புதுப்பிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. 

EPFO : இபிஎஃப் உறுப்பினர்களுக்கு இனி இதெல்லாம் ஈசி.. புதிய நடைமுறைகளை வெளியிட்ட இபிஎஃப்ஓ.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 06 Aug 2024 15:15 PM

ஊழியர் வருங்கால வைப்புநிதி : இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஊழியர்களுக்கும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அவ்வாறு மாதம், மாதம் பிடித்தம் செய்யப்படும் பணம், ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். ஊழியர்கள் இந்த பணத்தை தங்களது தேவைகளுக்கான பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருவேளை ஊழியர் தனது பணிக்காலம் முழுவதும் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவில்லை என்றால், பணி ஓய்வுக்கு பிறகு ஓய்வூதியமாகவும் பெற்றுக்கொள்ளலாம். ஊழியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ள ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், பயனாளர்களின் நலனுக்காக அவ்வப்போது சில திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் செய்யப்படும். அந்த வகையில் இபிஎஃப்ஓ சில மாற்றங்களை அறிவித்துள்ளது. அது என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஊழியர் வருங்கால வைப்புநிதி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள்

ஊழியர் வருங்கால வைப்புநிதி அமைப்பு, ஊழியர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட சுய விவரங்களை திருத்துவதற்கான புதிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ஊழியர்களின் ஊழியர் வருங்கால வைப்புநிதி விவரங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அது திருத்தப்பட்டு, சரியான தகவல் புதுப்பிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

இதையும் படிங்க : Gold Price 06 August 2024: அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா?

ஊழியர் வருங்கால வைப்புநிதி அமைப்பு, பயனர்கள் தவறாக உள்ள தகவல்களை திருத்துவதில் சில சிறமங்களை சந்திப்பதாக குறிப்பிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தவறான தகவல்களை மாற்றம் செய்வது மற்றும் தகவல்களை புதுப்பிப்பதில் சிக்கல்களை சந்திப்பதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சிறிய தவறுகளை திருத்தம் செய்ய

இந்நிலையில் இபிஎஃப்ஓ, தனது புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இரண்டாக பிரித்துள்ளது. பெரிய மற்றும் சிறிய தகவல் மாற்றங்களுக்கான திருத்தம் நடைமுறைகளை மாற்றி அமைத்துள்ளது. அதாவது பயனர்களின் பெயரில் சிறிய தவறுகள், பிறந்த தேதியில் உள்ள சிறிய தவறுகளை புதுப்பிக்க அல்லது மாற்றம் செய்ய கூட்டு அறிக்கையுடன்(Joint Declaration Request) குறைந்தபட்சம் 2 ஆவணங்களை சமர்பித்தால் போதும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, ஆதார், பான் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.

இதையும் படிங்க : Aadhaar Card : வீடு மாறிட்டீங்களா.. அப்போ மறக்காம ஆதார் கார்டுல இத பண்ணிடுங்க!

பெரிய தவறுகளை திருத்தம் செய்ய

இதேபோல பிறந்த தேதியில் உள்ள பெரிய தவறுகளை, அதாவது பெயர் மாற்றம் செய்வது, பிறந்த தேதியை மாற்றம் செய்வது உள்ளிட்டவைக்கு குறைந்தது 3 ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News