EFPO : PF பயனர்களுக்கு இனிப்பான செய்தி வழங்கிய EPFO.. விதிகளில் மாற்றம்!
New Rules | இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஊழியர்களுக்கும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அவ்வாறு மாதம், மாதம் பிடித்தம் செய்யப்படும் பணம், ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். ஊழியர்கள் இந்த பணத்தை தங்களது தேவைகளுக்கான பயன்படுத்திக்கொள்ளலாம்.
அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சேமிப்பு மற்றும் எதிர்காலம் ஆகிவற்றில் EPFO முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் பயனர்களின் நலனுக்காக சமீபத்தில் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. EPFO-ன் இந்த அறிவிப்பு பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், EPFO வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு என்ன, அதன் சிறப்பு அம்சங்கள் மற்றும் பயனர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : GST Exemption: இன்சூரன்ஸ் டூ தண்ணீர் பாட்டில்.. ஜிஎஸ்டி வரி குறையப்போகுதா? நிர்மலா சீதாராமன் எடுத்த முடிவு!
முக்கிய அறிவிப்பை வெளியிட்ட EPFO
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஊழியர்களுக்கும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அவ்வாறு மாதம், மாதம் பிடித்தம் செய்யப்படும் பணம், ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். ஊழியர்கள் இந்த பணத்தை தங்களது தேவைகளுக்கான பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருவேளை ஊழியர் தனது பணிக்காலம் முழுவதும் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவில்லை என்றால், பணி ஓய்வுக்கு பிறகு ஓய்வூதியமாகவும் பெற்றுக்கொள்ளலாம். ஊழியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமன்றி ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் மற்றும் காப்பீட்டு திட்டங்களையும் EPFO செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், காப்பீட்டு திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : Post Office Scheme : 8.2% வட்டி.. மாதம் ரூ.20,500 வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான அசத்தலான அஞ்சலக சேமிப்பு திட்டம்!
அதாவது ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைச்சகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும், ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீட்டு பலன்கள் (EDLI) நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் EPFO பயனர்களின் குடும்பத்தினர் சுமார் 7 லட்சம் வரை காப்பீடு பெற முடியும். EPFO-ன் இந்த அறிவிப்பு பயனர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : SBI : எஸ்.பி.ஐ வழங்கும் 5 சிறப்பு FD திட்டங்கள்.. வட்டி எவ்வளவு தெரியுமா?.. முழு விவரம் இதோ!
EDLI காப்பீட்டு திட்டம் என்றால் என்ன?
EDLI என்பது ஊழியர் வருங்கால வைப்புநிதி உறுப்பினர்களுக்கான காப்பீட்டு திட்டம் ஆகும். உறுப்பினர்களுக்கு காப்பீடு பலன்களை வழங்குவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் கடந்த 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் EPFO உறுப்பினர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்த திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட தொகையை உதவியாக பெறலாம். இந்த திட்டத்தில் பயன்பெற ஊழியர்கள் தனியாக பணம் எதுவும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. EPFO உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனைவருமே இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Bank of Baroda : FD-களுக்கான வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்திய பேங்க் ஆஃப் பரோடா.. எவ்வளவு தெரியுமா?
காப்பீட்டு திட்ட பலன்கள் நீடிப்பு
இந்த திட்டத்தின் விதிகளின்படி, ஏப்ரல் 2021 வரை ஊழியர்கள் உயிரிழந்துவிட்டால் அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ.6 லட்சம் வரை பணம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் காப்பீடு பலன்கள் வழங்கப்படுவதற்கான காலம் ஏப்ரல் 2024 வரை நீடிக்கப்பட்டது. இதன் மூலம் குறைந்தபட்ச பலன் ரூ.2.5 லட்சமாகவும், அதிகபட்ச பலன் ரூ.7 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது.
இதையும் படிங்க : Bob Utsav : அதிக வட்டியுடன் கூடிய புதிய FD திட்டத்தை அறிமுகம் செய்த பேங்க் ஆஃப் பரோடா.. சிறப்பு அம்சங்கள் என்ன?
முன்னதாக ஒரு நிறுவனத்தில் 12 மாதங்கள் தொடர்ந்து பணியாற்றினால் தான் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் இந்த நிபந்தனை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. அதாவது 12 மாதங்களுக்கு குறைவாக பணியாற்றினாலும் இந்த திட்டத்தில் பயன்பெறலாம் என விதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிகமான ஊழியர்கள் இந்த திட்டத்தில் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.