5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

EPFO : PF உறுப்பினர்களுக்கு முக்கியச் செய்தி.. EPF பணத்தை எடுக்கும் விதிகளில் அதிரடி மாற்றம்.. முழு விவரம் இதோ!

Money Withdrawal | இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஊழியர்களுக்கும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அவ்வாறு மாதம், மாதம் பிடித்தம் செய்யப்படும் பணம், ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். ஊழியர்கள் இந்த பணத்தை தங்களது தேவைகளுக்கான பயன்படுத்திக்கொள்ளலாம்.

EPFO : PF உறுப்பினர்களுக்கு முக்கியச் செய்தி.. EPF பணத்தை எடுக்கும் விதிகளில் அதிரடி மாற்றம்.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 23 Oct 2024 12:14 PM

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு PF தொகை பிடித்தம் செய்யபப்டும் நிலையில், தங்களுக்கு தேவையான நேரத்தில் பயனர்கள் அந்த பணத்தில் இருந்து குறிப்பிட்ட அளவு தொகையை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், அதற்கு சில கால அளவுகள் மற்றும் விதிகள் உள்ளன. அவற்றை முறையாக பின்பற்றினால் மட்டுமே EPF பணத்தை எடுக்க முடியும். இந்த நிலையில், EPF பணத்தை எடுப்பதற்கான விதிமுறைகளில் EPFO அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி பல புதிய விதிகளையும் அறிமுகம் செய்துள்ளது.

இதையும் படிங்க : Monthly Income Scheme : வட்டி மட்டும் ரூ.66,600.. அதிக லாபம் வழங்கும் அஞ்சலக மாத வருமான திட்டம்.. முழு விவரம் இதோ!

ஊழியர் வருங்கால வைப்புநிதி என்றால் என்ன?

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஊழியர்களுக்கும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அவ்வாறு மாதம், மாதம் பிடித்தம் செய்யப்படும் பணம், ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். ஊழியர்கள் இந்த பணத்தை தங்களது தேவைகளுக்கான பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருவேளை ஊழியர் தனது பணிக்காலம் முழுவதும் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவில்லை என்றால், பணி ஓய்வுக்கு பிறகு ஓய்வூதியமாகவும் பெற்றுக்கொள்ளலாம். ஊழியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் EPF பணத்தை எடுக்கும் விதிமுறைகளில் EPFO சில அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

இதையும் படிங்க : India’s UPI : மாலத்தீவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தியாவின் UPI சேவை.. பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என நம்பிக்கை!

EPF பணத்தை எடுக்க திருத்தப்பட்ட புதிய விதிகள்

விண்ணப்பம்

  • முதலில் EPF கணக்கில் இருந்து பணத்தை எடுக்க விரும்பும் பயனர்கள், அதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • EPF-ல் இருந்து சில குறிப்பிட்ட தேவைகளுக்காக மட்டுமே பணம் எடுக்க முடியும். அதாவது, வீடு வாங்குதல் அல்லது வீடு கட்டுதல், திருமணம், மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட சில காரணங்களுக்கு மட்டுமே பணம் எடுக்க முடியும்.

எவ்வளவு பணம் எடுக்க முடியும்?

  • EPFO-ன் திரும்ப பெறுதல் விதிகளின்படி, EPF பயணர்கள் ஓய்வு பெறுவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு மொத்த EFP தொலையில் இருந்து சுமார் 90 சதவீத பணத்தை எடுக்கலாம்.
  • அவ்வாறு EPF கணக்கில் இருந்து 90 சதவீத பணத்தை எடுக்க EPF பயனரின் வயது குறைந்தபட்சம் 54 ஆக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க : Aadhaar Correction : திருமணத்திற்கு பிறகு ஆதாரில் குடும்ப பெயரை நீக்குவது எப்படி.. முழு விவரம் இதோ!

வேலையை இழந்த ஊழியர்கள்

  • தற்போதைய காலக்கட்டத்தில் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. அவ்வாறு பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு EPFO ஒரு சிறப்பு சலுகையை வழங்குகிறது.
  • அதாவது ஊழியர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டால், அவர்கள் EPF கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
  • ஒரு மாதம் வேலை இல்லாமல் இருந்தால் ஊழியர் EPF கணக்கில் இருந்து 75% பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
  • மீதமுள்ள 25% தொகையை புதிய வேலைக்கு சேர்ந்த பிறகு அந்த புதிய கணக்கிற்கு ஊழியர்கள் மாற்றிக்கொள்ளலாம்.
  • இதுவே ஊழியர் தொடர்ந்து பல மாதங்களாக வேலை இல்லாமல் இருக்கிறார் என்றால் முழு EPF தொகையையும் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : Fixed Deposit : 7.75% வரை வட்டி.. மூத்த குடிமக்களுக்கு அதிக லாபம் வழங்கும் ஆக்சிஸ் வங்கியின் FD திட்டங்கள்!

வரிச் சலுகை

  • ஒரு ஊழியர் தொடர்ந்து 5 ஆண்டுகள் EPF கணக்கில் பங்களித்துள்ளார் என்றால், பணத்தை எடுக்கும்போது வரிச் சலுகை வழங்கப்படும்.
  • இதுவே ஊழியர் முதிர்வுக்கு முன்பு பணத்தை எடுக்கிறார் என்றால் டிடிஎஸ் கழிக்கப்படும்.
  • ஊழியர்கள் EPF கணக்கில் இருந்து ரூ.50,000-க்கு குறைவாக பணம் எடுத்தால் டிடிஎஸ் கழிக்கப்படாது.
  • பயனர்கள் EPF கணக்கில் இருந்து பணத்தை எடுக்க PAN கார்டை சம்ர்பித்தால் அவருக்கு 10% டிடிஎஸ் கழிக்கப்படும்.
  • இதுவே பயனர் PAN கார்டு சமர்பிக்கவில்லை என்றால் அவருக்கு 30% டிடிஎஸ் கழிக்கப்படும்.

மேற்குறிப்பிட்ட விதிகளை EPFO அறிமுகம் செய்துள்ள நிலையில், இனிமேல் EPF கணக்கில் இருந்து பணம் எடுக்கும் நபர்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றி பணம் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News