5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Senior Citizen: செம்ம… இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு இத்தனை சலுகைகளா? முழு லிஸ்ட்!

பொதுவாக ஓய்வு காலத்தில் யாரையும் நம்பி இருக்காமல் தங்களுக்கான பொருளாதார தேவைகளை கவனித்து கொள்ள வேண்டும் என்பதில் பலரது விருப்பமாக உள்ளது. இதற்காக மத்திய அரசு மூத்த குடிமக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இது பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கவும், நிதி சுமையை குறைக்கவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Senior Citizen: செம்ம… இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு இத்தனை சலுகைகளா? முழு லிஸ்ட்!
மூத்த குடிமக்கள்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 07 Aug 2024 19:23 PM

மூத்த குடிமக்களுக்கான நன்மைகள்: பொதுவாக ஓய்வு காலத்தில் யாரையும் நம்பி இருக்காமல் தங்களுக்கான பொருளாதார தேவைகளை கவனித்து கொள்ள வேண்டும் என்பதில் பலரது விருப்பமாக உள்ளது. இதற்காக மத்திய அரசு மூத்த குடிமக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இது பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கவும், நிதி சுமையை குறைக்கவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதிய திட்டங்கள், வருமான வரி சலுகைகள், சொத்து வரி, சுகாதார காப்பீடு என பல உள்ளது. எனவே, இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு கிடைக்கும் சலுகைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

Also Read: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு இனி இதெல்லாம் ஈசி.. புதிய நடைமுறைகளை வெளியிட்ட இபிஎஃப்ஓ.. முழு விவரம் இதோ!

அதிக வட்டி:

பொது மக்களுடன் ஒப்பிடும்போது, ​​நிலையான வைப்புத்தொகைகள் , தொடர் வைப்புத்தொகைகள் மற்றும் சேமிப்புக் கணக்குகள் மீதான வட்டி விகிதங்கள் அதிகரிக்க முதியவர்கள் தகுதியுடையவர்கள். சாதாரண மக்களை விட மூத்த குடிமக்களுக்கு பிக்சட் டெபாசிட்கள், ரெக்கரிங் டெபாசிட்கள், சேமிப்பு கணக்கு திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது. குறிப்பாக பிக்சட் டெபாசிட்களில் சாதாரண மக்களை விட மூத்த குடிமக்களுக்கு 0.25 முதல் 0.75 சதவீதம் வரை அதிகமாக வட்டி வழங்கப்படுகிறது. அதிக வட்டி வழங்கப்படுவதால் மூத்த குடிமக்கள் தங்களின் சேமிப்பின் மூலம் அதிக வருமானத்தை பெற முடிகிறது.

வருமான வரி:

தற்போது 60 முதல் 80 வயதுடைய தனிநபர்களுக்கு வரி விலக்கு வரம்பு ரூ.3 லட்சமாகவும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சமாகவும் விலக்கு அளிக்கப்படுகிறது. உடல்நலக் காப்பீட்டு பிரீமியங்கள் மற்றும் குறிப்பிட்ட திட்டங்களில் முதலீடு செய்திருந்தால் ரூ.50,000 வரை விலக்கு பெற முடியும்.

ஓய்வூதியத் திட்டங்கள்:

இந்தியாவில் மூத்த குடிமக்களுக்காக பிரத்யேகமாக பல ஓய்வூதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஓய்வுக்கு பிறகு மூத்த குடிமகன்களுக்கு என சில பிரத்யேக சேமிப்பு திட்டங்கள் உள்ளன. தினசரி செலவுகளை நிர்வகிக்க மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) மற்றும் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) உள்ளிட்டவை உதவும்.

வங்கி வசதிகள்:

ரிசர்வ் வங்கி வழங்கிய உத்தரவுகளுக்கு இணங்க, வங்கிகள் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பணம் அல்லது காசோலையை வங்கியில் செலுத்த வேண்டும் என்றால் வீட்டிற்கே அந்த சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் வந்து வாங்கி செல்வார்கள். 70 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு KYC, பணப் பரிவர்த்தனைகள் மற்றும் திரும்பப் பெறுதல் போன்ற அத்தியாவசிய சேவைகள் கிடைக்கும் வகையில், வீட்டிற்கு வந்தே வங்கி தொடர்பான வேலைகள் முடித்து தரப்படுகிறது.

சுகாதார காப்பீடு:

மூத்த குடிமக்களுக்கு மருத்துவ பராமரிப்பு தேவைப்படுகிறது. மூத்த குடிமக்களின் தனிப்பட்ட மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்ய பல்வேறு மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்கள் விரிவான கவரேஜ் செய்கின்றன. இது மருத்துவ நெருக்கடிகளில்போது இந்த தொகை பெரிதும் உதவும்.

சொத்து வரி:

இந்தியாவில் உள்ள சில பிராந்தியங்கள் மூத்த குடிமக்களுக்கு சொத்து வரி விலக்கை வழங்குகின்றன. இது சொத்து வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு பெரிதும் உதவும்.

Also Read: வீடு மாறிட்டீங்களா.. அப்போ மறக்காம ஆதார் கார்டுல இத பண்ணிடுங்க!

பொதுபோக்குவரத்து:

பல மாநில போக்குவரத்து துறைகள் பேருந்து அல்லது ரயில் சேவைகளை பயன்படுத்தும் மூத்த குடிமக்களுக்கு போக்குவரத்து சேவை கட்டம் 50 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. இது மூத்த குடிமக்களின் பயணச் செலவை குறைக்கிறது.

Latest News