Fixed Deposit : 9.5% வட்டி வழங்கும் புதிய Super FD திட்டம் தொடக்கம்.. சிறப்பு அம்சங்கள் என்ன?
Super FD | பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஃபின்டெக் நிறுவனம் Super FD என்ற புதிய நிலையான வைப்பு நிதி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே பலவேறு வங்கிகள் பல நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், ஃபின்டெக் நிறுவனமும் புதிய நிலையான வைப்பு நிதி திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
பொதுமக்கள் சேமிப்பதற்காக அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்பு நிதி திட்டம் ஆகும். இந்த திட்டம் FD (Fixed Deposit) என அழைக்கப்படுகிறது. வங்கிகள் மூலம் நிலையான வைப்பு நிதி திட்டங்கள் செயல்படுத்துவது மட்டுமன்றி, அஞ்சலங்கள் மூலமும் அரசு இந்த நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், 9.5 சதவீதம் வட்டியுடன் ஒரு புதிய நிலையான வைப்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு Super FD என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள், முதலீடு உள்ளிட்டவற்றை விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Government Scheme : வீடு கட்ட ரூ.3,50,000 தரும் தமிழக அரசு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் இதோ!
Super FD திட்டம் என்றால் என்ன?
பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஃபின்டெக் நிறுவனம் Super FD என்ற புதிய நிலையான வைப்பு நிதி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே பலவேறு வங்கிகள் பல வகையான நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், ஃபின்டெக் நிறுவனமும் புதிய நிலையான வைப்பு நிதி திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு சுமார் 9.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. தற்போதை நடைமுறையில் உள்ள நிலையான வைப்பு நிதி திட்டங்களை ஒப்பிட்டு பார்க்கையில் சூப்பர் மணியின் இந்த திட்டம் அதிக வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.
Super FD திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன?
- சூப்பர் மணியின் இந்த சூப்பர் நிலையான வைப்பு நிதி திட்டத்தில் பயனர்கள் ரூ.1,000 முதலே முதலீடு செய்யலாம்.
- இந்த புதிய நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு சூப்பர் மணி நிறுவனம் சுமார் 9.5 சதவீதம் வட்டி வழங்குகிறது.
- சூப்பர் மணியில் பயனர்கள் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிகப்பட்ட 5 வங்கிகளில் இருந்து தேர்வு செய்யலாம்.
- சூப்பர் மணியின் அனைத்து நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கும் வைப்புத் தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழகம் மூலம் ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும்.
- சூப்பர் மணியின் இந்த சூப்பர் எஃப்டி திட்டம் யூபிஐ பேமெண்ட்களை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக லாபத்துடன் கூடிய முதலீடு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிங்க : SBI FD : மூத்த குடிமக்களுக்கான 1 ஆண்டுகக்கான FD.. ரூ.7,14 மற்றும் ரூ.21 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
இந்த திட்டத்தில் கணக்கை பதிவு செய்வது எப்படி?
- இந்த Super FD திட்டத்தில் கணக்கை தொடங்க super.money பயன்பாட்டை பதவிறக்கம் செய்ய வேண்டும்.
- பிறகு நீங்கள் எந்த வங்கியின் நிலையான வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களோ அந்த வங்கியை தேர்வு செய்ய வேண்டும்.
- பிறகு டிஜிட்டல் கெஒய்சி மேற்கொள்ள வேண்டும்.
- பிறகு உங்களது நிலையான வைப்பு நிதி திட்டத்தை திறக்க வேண்டியதுதான்.
மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றி சூப்பர் மணியின் புதிய சூப்பர் நிலையான வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு தொடங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Government Scheme : வீடு கட்ட ரூ.3,50,000 தரும் தமிழக அரசு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் இதோ!
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.