Saving : குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க என்ன செய்ய வேண்டும்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க! - Tamil News | follow these methods to increased habit of saving in your children | TV9 Tamil

Saving : குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க என்ன செய்ய வேண்டும்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

Published: 

20 Nov 2024 17:01 PM

Children | ஒவ்வொரு தனி மனிதருக்கும் சேமிப்பின் மகத்துவம் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு குழந்தை பருவம் முதலே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். அது அவர்களின் எதிர்காலத்தை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும்.

1 / 6ஒருவரிடம்

ஒருவரிடம் என்னதான் நிலையான பொருளாதாரம் இருந்தாலும், சேமிப்பு இல்லை என்றால் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி சவால்களை சந்திக்க முடியாமல் போய்விடும். எனவே ஒவ்வொருவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். 

2 / 6

பொதுமக்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை செலவு செய்வதை மட்டும் வழக்கமாக கொள்ளாமல், சம்பளத்தின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். 

3 / 6

ஒவ்வொரு தனி மனிதருக்கும் சேமிப்பின் மகத்துவம் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு குழந்தை பருவம் முதலே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். 

4 / 6

பெற்றோர்கள் குழந்தைகளிடம் சிறிய தொகையை கொடுத்து அதில் ஏதேனும் பொருள் வாங்கிவர கூற வேண்டும். குழந்தைகள் பொருட்களை வாங்கிய பிறகு மீதம் இருக்கும் தொகையை ஒரு உண்டியலில் சேர்த்து வைக்க சொல்ல வேண்டும். 

5 / 6

குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணத்தை வைத்து, அவர்கள் நீண்ட நாட்களாக ஆசைப்பட்டு கேட்ட, அல்லது அவர்களுக்கு மிகவும் விரும்பமான பொருட்களை அந்த பணத்தில் வாங்கி தர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களுக்கு சேமிப்பின் பலன் சுலபமாக புரியும். 

6 / 6

அதுமட்டுமன்றி, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நண்பர்களுக்கு பிறந்த நாள் பரிசாகவும் உண்டியலை வழங்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு மத்தியில் சேமிக்கும் பழக்கம் உருவாகும். 

அபர்ணா பாலமுரளியின் அழகிய போட்டோஸ் இதோ
புடவையில் கலக்கும் ராஷ்மிகா மந்தனா!
இன்ஸ்டாவில் வைரலாகும் நிமிர் பட நடிகை நமீதா பிரமோத் போட்டோஸ்!
நடிகை நஸ்ரியா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!