5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Budget 2024 PDF download: மத்திய பட்ஜெட் 2024 PDF.. டவுன்லோட் செய்வது எப்படி.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

பட்ஜெட் 2024 PDF | மத்திய பட்ஜெட்டில் வருமான வரியில் ஒரு சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி ரூ.3 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு எந்த வரியும் விதிக்கப்படவில்லை. ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 5% வரி விதிக்கப்பட்டுள்ளது. ரூ.7 லட்சம் முதல் ரூ.10 வரை வருவாய் ஈட்டுவோருக்கு 10% வரி விதிக்கப்பட்டுள்ளது.

Budget 2024 PDF download: மத்திய பட்ஜெட் 2024 PDF.. டவுன்லோட் செய்வது எப்படி.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 23 Jul 2024 14:50 PM

மத்திய பட்ஜெட் 2024 : பாஜக தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் ஆட்சி அமைத்த பிறகு முதல் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதும் வெளியிடப்படாத நிலையில், இந்த பெட்ஜெட் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் 7 வது முறையாக மத்திய அமைச்சராக பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் சுமார் 1.30 மணி நேரம் உரையாற்றினார். அதில், வருமான வரி, தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் மீதான இறக்குமதி வரி, ஏஞ்சல் வரி உள்ளிட்டவை குறித்து பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்ற அறிவிப்புகள் குறித்த விரிவான தகவல் அடங்கிய PDF-ஐ எப்படி டவுன்லோட் செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.

மத்திய பட்ஜெட் 2024 PDF டவுன்லோட் செய்வது எப்படி?

  • இதற்கு முதலில் இந்திய அரசின் வருவாய் அமைச்சகம் அல்லது இந்திய அரசின் பட்ஜெட் போர்டலுக்கு செல்ல வேண்டும்.
  • அதில் உங்களுக்கு பட்ஜெட் 2024 என்று முகப்பு பக்கத்தில் இருக்கும்.
  • அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்தும் PDF-ஐ டவுன்லோட் செய்துக்கொள்ளலாம்.
  • நீங்கள் லிங்கை கிளிக் செய்தது PDF டவுன்லோட் ஆக தொடங்கிவிடும்.
  • பிறகு அதை உங்கள் லேப்டாப் அல்லது கணினியில் பதிவு செய்து வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : Budget 2024 Angel Tax : ஏஞ்சல் வரி என்றால் என்ன? பட்ஜெட்டில் ரத்து செய்யப்பட்டதால் யாருக்கு லாபம்?

மத்திய பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் என்ன?

மத்திய பட்ஜெட்டில் வருமான வரியில் ஒரு சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி ரூ.3 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு எந்த வரியும் விதிக்கப்படவில்லை. ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 5% வரி விதிக்கப்பட்டுள்ளது. ரூ.7 லட்சம் முதல் ரூ.10 வரை வருவாய் ஈட்டுவோருக்கு 10% வரி விதிக்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 15% வரி விதிக்கப்பட்டுள்ளது. ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 20% வரி விதிக்கப்பட்டுள்ளது. ரூ.15 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு 30% வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Budget 2024 Tax Slabs: வருமான வரி செலுத்துவோருக்கு குட் நியூஸ்.. நிலையான வரி கழிவு அதிகரிப்பு!

தங்கம் மற்றும் வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதேபோல பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 12 சதவீதத்திலிருந்து 6.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest News