ITR Refund : வருமான வரி Refund Request எப்படி அனுப்பனும்னு தெரியுமா?.. இத படிங்க!

Income Tax | பொதுவாக வருமான வரி தாக்கல் செய்த பிறகு ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ரீஃபண்ட் கிடைத்துவிடும். அவ்வாறு உங்களுக்கு ரீஃபண்ட் கிடைக்கவில்லை என்றால், ரீஃபண்ட் ரெக்வஸ்ட் அனுப்ப வேண்டும். இந்த நிலையில் ரீஃபண்ட் ரெக்வஸ்ட் எப்படி அனுப்புவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ITR Refund : வருமான வரி Refund Request எப்படி அனுப்பனும்னு தெரியுமா?.. இத படிங்க!

மாதிரி புகைப்படம் (Photo Credit - Thana Prasongsin/Moment/Getty Images)

Updated On: 

18 Nov 2024 13:54 PM

வருமான வரி திரும்ப பெறுதல் : இந்தியாவில் குறிப்பிட்ட தொகைகளுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விதிக்கப்படும். அதன்படி 2023 – 2024 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது. வருமான வரி தாக்கல் செய்வதற்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து விளக்கமளித்த வருமான வரித்துறை, காலக்கெடு எதுவும் நீட்டிக்கப்படவில்லை என்றும் வருமான வரி செலுத்துவோர் ஜூலை 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. வருமான வரித்துறையின் இந்த அறிவிப்பை அடுத்து, பெரும்பாலானோர் வருமான வரி செலுத்தி முடித்தனர். தற்போது, வருமான வரி ரீஃபண்ட் எப்போது கிடைக்கும் என பலரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் உங்களுக்கு இன்னும் வருமான வரி ரீஃபண்ட் கிடைக்கவில்லை என்றால் ரீஃபண்ட் ரெக்வஸ்ட் செய்யுங்கள். அப்போதுதான் உங்கள் ரீஃபண்ட் என்ன ஆனது என்பது குறித்த தெளிவு கிடைக்கும்.

இதையும் படிங்க : ITR Refund : வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லையா?.. இந்த 8 காரணங்களாக கூட இருக்கலாம்.. உடே செக் பண்ணுங்க!

வருமானவரி ரீஃபண்ட் ரெக்வஸ்ட் செய்வது எப்படி?

  1. அதற்கு முதலில் வருமானவரி துறையின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அங்கு Service Menu-க்கு சென்று Refund Reissue என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  3. எந்த காரணத்திற்கான நீங்கள் இந்த ரெக்வஸ்ட் செய்கிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  4. பிறகு எந்த வங்கி கணக்கில் உங்களுக்கு ரீஃபண்ட் வர வேண்டும் என நினைக்கிறீர்களோ அந்த வங்கியை தேர்வு செய்ய வேண்டும்.
  5. ஒருவேளை நீங்கள் தேர்வு செய்த வங்கி கணக்கு வேலிடேட் செய்யப்படவில்லை என்றால், வேலிடேட் செய்ய வேண்டும்.
  6. பிறகு Proceed for verification என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  7. பிறகு இ வெரிஃபிகேஷன் முறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  8. அதாவது ஆதார் ஒடிபி, இவிசி மற்றும் டிஎஸ்சி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று.
  9. பிறகு Continue என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  10. அப்போது உங்களுக்கு டிரான்ஸாக்‌ஷன் ஐடி உடன் கூடிய குறுஞ்செய்தி அனுப்படும்.

இதையும் படிங்க : Post Office Scheme : மாதம் ரூ.20,500 வரை வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!

ரீஃபண்ட் ரெக்வஸ்ட் ஸ்டேட்டஸ் செக் செய்வது எப்படி?

மேற்கண்ட முறையை பயன்படுத்தி நீங்கள் ரீஃபண்ட் ரெக்வஸ்ட் அனுப்பிய பிறகு, Service Request-க்கு சென்று, உங்கள் வருமான வரி ரீஃபண்டின் நிலையை நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!