Gold Price | ஷாக் அடிக்கும் தங்கம் விலை.. வெறும் 6 நாட்களில் ரூ.2,920 உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Chennai | அமெரிககவில் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேதல் நடைபெற்று, அதற்கான முடிவுகள் நவம்பர் 6 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. அதில், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்ட நிலையில், அதுவரை தங்கத்தில் முதலீடு செய்து வந்த முதலீட்டாளர்கள் டாலரில் முதலீடு செய்ய தொடங்கினர்.

Gold Price | ஷாக் அடிக்கும் தங்கம் விலை.. வெறும் 6 நாட்களில் ரூ.2,920 உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

24 Nov 2024 13:15 PM

சென்னையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை கடும் ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 6 நாட்களில் மட்டும் கடும் உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, கடந்த 6 நாட்களில் மட்டும் தங்கம் விலை சுமார் ரூ.2,920 வரை உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பிந்தைய வாரத்தில் தங்கம் விலை அதிரடியாக குறைந்து வந்த நிலையில், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இவ்வாறு தங்கம் விலை உயர்ந்துக்கொண்டே செல்லும் நிலையில், விரைவில் ரூ.60,000-த்தை எட்டும் நிலை உள்ளது. இந்த நிலையில், கடந்த 6 நாட்களுக்கான தங்கம் விலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Government Scheme : வீடு கட்ட ரூ.3,50,000 தரும் தமிழக அரசு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் இதோ!

கடந்த 6 நாட்களுக்கான தங்கம் விலை நிலவரம்

19.11.2024 – கடந்த நவம்பர் 19 ஆம் தேதி 22 கேரட் ஆபரணத் தங்கத்தில் விலை கிராம் ரூ.7,065 ஆகவும், சவரன் ரூ.56,520 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.7,570 ஆகவும், சவரன் ரூ.60,560 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

20.11.2024 – கடந்த நவம்பர் 20 ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 மற்றும் சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.7,115 ஆகவும், சவரன் ரூ.56,920 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.7,620 ஆகவும், சவரன் ரூ.60,960 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

21.11.2024 – கடந்த நவம்பர் 21 ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 மற்றும் சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.7,145 ஆகவும், சவரன் ரூ.57,160 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.7,650 ஆகவும், சவரன் ரூ.61,200 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இதையும் படிங்க : Indian Rupees : இதுவரை இல்லாத சரிவை சந்தித்த இந்திய ரூபாய்.. கடும் எச்சரிக்கை விடுத்த RBI!

22.11.2024 – கடந்த நவம்பர் 22 ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 மற்றும் சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.7,225 ஆகவும், சவரன் ரூ.57,800 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.7,730 ஆகவும், சவரன் ரூ.61,840 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

23.11.2024 – நவம்பர் 23 ஆம் தேதியான நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 மற்றும் சவரனுக்கு ரூ. 600 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.7,300 ஆகவும், சவரன் ரூ.58,400 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.7,805 ஆகவும், சவரன் ரூ.62,440 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

24.11.2024 – இன்று (நவம்பர் 24) ஞாயிற்று கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.7,300 ஆகவும், சவரன் ரூ.58,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.7,805 ஆகவும், சவரன் ரூ.62,440 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : SBI FD : மூத்த குடிமக்களுக்கான 1 ஆண்டுகக்கான FD.. ரூ.7,14 மற்றும் ரூ.21 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

அதிபர் தேர்தலுக்கு பிறகு அதிரடியாக குறைந்த தங்கம் விலை

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேதல் நடைபெற்று, அதற்கான முடிவுகள் நவம்பர் 6 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. அதில், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்ட நிலையில், அதுவரை தங்கத்தில் முதலீடு செய்து வந்த முதலீட்டாளர்கள் டாலரில் முதலீடு செய்ய தொடங்கினர். இதன் காரணமாக, அமெரிக்க அதிபர் தேர்தலை அடுத்த வாரம் தங்கம் விலை அதிரடியாக குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அப்போது ஒரே வாரத்தில் தங்கம் விலை ரூ.3280 வரை குறைந்தது குறிப்பிடத்தக்கது.

மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்