5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

New Rules : கேஸ் சிலிண்டர் முதல் ஆதார் கார்டு வரை.. செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறைகள்!

September Changes | ஆகஸ்ட் மாத தொடக்கத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. தற்போது ஆகஸ்ட் மாதம் முடிவடையவுள்ள நிலையில், செப்டம்பர் மாத தொடக்கத்தில் இந்த மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அவை என்னவென்று விரிவாக பார்க்கலம். 

New Rules : கேஸ் சிலிண்டர் முதல் ஆதார் கார்டு வரை.. செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறைகள்!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 30 Sep 2024 17:21 PM

செப்டம்பர் மாதம் மாற்றங்கள் : ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் முதல் ஆதார் கார்டு வரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும். அதன்படி, ஆகஸ்ட் மாத தொடக்கத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. தற்போது ஆகஸ்ட் மாதம் முடிவடையவுள்ள நிலையில், செப்டம்பர் மாத தொடக்கத்தில் இந்த மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அவை என்னவென்று விரிவாக பார்க்கலம்.

இதையும் படிங்க : ITR Refund : வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லையா?.. இந்த 8 காரணங்களாக கூட இருக்கலாம்.. உடே செக் பண்ணுங்க!

கேஸ் சிலிண்டர்

ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும். கடந்த 4 மாதங்களாக கேஸ் சிலிண்டர் விலை குறைந்து வந்த நிலையில், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.17 உயர்த்தப்பட்டு,  ரூ.1,817 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாத தொடக்கத்தில் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்ப்படுகிறது. இதேபோல விமான எரிபொருட்களின் விலையையும் மாற்றி அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொலைத்தொடர்பு வழிகாட்டு நெறிமுறைகள்

போலி அழைப்புகள் மற்றும் போலி செய்திகளை கட்டுப்படுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக டிராய் கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதாவது, பிளாக் செயின் தொழில்நுட்பத்தை கொண்ட 140 என தொடங்கும் மொபைல் எண்களுக்கான டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள், வணிக செய்திகளை அனுப்ப ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் டிராய் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : Senior Citizen Saving Scheme : மூத்த குடிமக்களுக்கான FD-க்கு 8.2% வட்டி.. அசத்தும் அஞ்சலக சேமிப்பு திட்டம்!

எச்டிஎஃப்சி வங்கியின் மாற்றங்கள்

செப்டம்பர் மாதம் முதல் எச்டிஎஃப்சி வங்கி, பயன்பாட்டு பரிவர்த்தனைகளுக்கான வெகுமதி புள்ளிகளின் வரம்பை நிர்ணயிக்க உள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ரூ.2,000 வரை மட்டுமே வெகுமதி புள்ளிகளை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Hurun List 2024 | அம்பானியை பின்னுக்கு தள்ளிய கவுதம் அதானி.. வெளியானது ஹுரூன் இந்திய பணக்காரர்கள் பட்டியல்!

ஆதார் அட்டை மாற்றங்கள்

ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாக புதுப்பிக்க செப்டம்பர் 14 ஆம் தேதி கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 14 ஆம் தேதித்து பிறகு ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டும். முன்பு ஜூன் 14 ஆக் தேதி வரை காலக்கெடு இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 14 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News