5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கேஸ் சிலிண்டர் முதல் கிரெடிட் கார்டு வரை.. ஆகஸ்ட் மாதம் முதல் மாற்றம் எதிர்பார்க்கும் விஷயங்கள்!

Changes | ஒவ்வொரு மாதமும் சில புதிய விதிகள் கொண்டுவரப்படும், அதன்படி வருகின்ற ஆகஸ்ட் மாதமும் அத்தகைய மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன. அதில் சில, பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் வகையில் இடம்பெற வாய்ப்பு உள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 1 ஆம் தேதி இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஹெச்.டி.எஃப்.சி தனது கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம் செய்ய உள்ளது. இதேபோல கூகுள் மேப்ஸ் இந்தியாவில் கட்டணத்தை மற்றியமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

கேஸ் சிலிண்டர் முதல் கிரெடிட் கார்டு வரை.. ஆகஸ்ட் மாதம் முதல் மாற்றம் எதிர்பார்க்கும் விஷயங்கள்!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 27 Jul 2024 16:01 PM

ஆகஸ்ட் மாத மாற்றங்கள் : சிலிண்டர் விலை முதல் ஹெச்.சி.எப்.சி கிரெடிட் கார்டு சார்ஜஸ் வரை, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பல்வேறு மாற்றங்கள் நிகழ உள்ளன. இந்த மாற்றங்கள் நடுத்தர மக்களை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு மாதமும் சில புதிய விதிகள் கொண்டுவரப்படும், அதன்படி வருகின்ற ஆகஸ்ட் மாதமும் அத்தகைய மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன. அதில் சில, பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் வகையில் இடம்பெற வாய்ப்பு உள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 1 ஆம் தேதி இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஹெச்.டி.எஃப்.சி தனது கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம் செய்ய உள்ளது. இதேபோல கூகுள் மேப்ஸ் இந்தியாவில் கட்டணத்தை மற்றியமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இவற்றை குறித்து விரிவாக பார்க்கலாம்.

சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்படும்

ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யபப்டும். அதன்படி, கடந்த மாதம் கூட 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்து அறிவித்தது. அதன்படி, வரும் ஆக்ஸ்ட் மாதமும் மத்திய அரசு கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெச்.டி.எஃப்.சி கிரெடிட் கார்டு மாற்றங்கள்

CRED, Cheq, Mobikwik, Freecharge உள்ளிட்ட ஆன்லைன் பேமெண்ட் தளங்களை பயன்படுத்துபவர்களுக்கு இனி 1% கட்டணம் விதிக்கப்படும் என்று ஹெச்.டி.எஃப்.சி தெரிவித்துள்ளது. ரூ.3,000 வரையிலான பண பரிவர்த்தனைகள் மற்றும் பெட்ரோல், டீசலுக்கு ரூ.15,000 வரை கட்டணம் விதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளது. மற்றபடி ரூ.15,000-க்கு மேல் பரிவர்த்தனை செய்யபப்டும் தொகைக்கு, மொத்த தொகையில் இருந்து 1% பிடித்தம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Income Tax : நெருங்கும் காலக்கெடு.. வருமான வரி செலுத்தாவிட்டால் என்ன நடக்கும்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

கூகுள் மேப் சார்ஜஸ் சுமார் 705 வரை குறைக்கப்படும்

கூகுள் மேப்ஸ் இந்தியாவில் பல மாற்றங்களை அறிவித்துள்ளது. அவை வரும் ஆகஸ்ட் 1 ஆம் தெதி முதல் அமலுக்கு வருகின்றன. முன்னதாக கூகுள் மேப்ஸ் நிறுவனம், இந்தியாவில் தனது கட்டணத்தை சுமார் 70% வரை குறைக்க உள்ளதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், கூகுள் மேப்ஸ் கட்ட்டணத்தை அமெரிக்க டாலர்களுக்கு பதிலாக இந்திய ரூபாயில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதுமட்டுமன்றி இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் சில பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளதால் விலைவாசியும் குறையும் என்று எதிர்ப்பார்க்கபப்டுகிறது. இதேபோல சில பொருட்களுக்கான வரி உயர்த்தவும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Fixed Deposit : HDFC முதல் SBI வரை.. FD-க்கு 7.90% வரை வட்டி வழங்கும் வங்கிகள்.. முழு விவரம் இதோ!

Latest News