November Changes : கேஸ் சிலிண்டர் முதல் தொலைத்தொடர்பு வரை.. நவம்பர் மாதம் வரவுள்ள அதிரடி மாற்றங்கள்!

Rules | வம்பர் மாதம் தொடங்க இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், கேஸ் சிலிண்டர் விலை, ஆதார் கார்டு, கிரெடி கார்டு, தொலைத்தொடர்பு உள்ளிட்டவற்றில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

November Changes : கேஸ் சிலிண்டர் முதல் தொலைத்தொடர்பு வரை.. நவம்பர் மாதம் வரவுள்ள அதிரடி மாற்றங்கள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

28 Oct 2024 16:35 PM

ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் முதல் ஆதார் கார்டு, கிரெடிட் கார்டு, தொலைத்தொடர்பு ஆகியவற்றில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும். அதன்படி, அக்டோபர் மாத தொடக்கத்திலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. நவம்பர் மாதம் தொடங்க இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், கேஸ் சிலிண்டர் விலை, ஆதார் கார்டு, கிரெடி கார்டு, தொலைத்தொடர்பு உள்ளிட்டவற்றில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், நவம்பர் மாதம் முதல் என்ன என்ன மாற்றங்கள் ஏற்பட உள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Post Office Scheme : அஞ்சலக சேமிப்பு திட்டம்.. மாதம் ரூ.2,000 முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்?

கேஸ் சிலிண்டர் விலை

ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலைகளை மாற்றி அமைக்கும். அதன்படி வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே வீட்டு பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Fixed Deposit : எஸ்பிஐ முதல் ஐசிஐசிஐ வரை.. 5 ஆண்டுகளுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்!

சிஎன்ஜி விலை

எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலை மட்டுமன்றி சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலைகளையும் வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் மாற்றி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக சிஎன்ஜி உள்ளிட்ட ATF விலைகள் குறைக்கப்பட்டு வந்தது. இதற்கு விழாக்காலம் முக்கிய காரணமாக கருதப்பட்டது. இந்த நிலையில் வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் இவற்றிலும் விலை மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்ப்பார்க்கபப்டுகிறது.

இதையும் படிங்க : Fixed Deposit : எஸ்பிஐ Vs செண்ட்ரல் பேங்க்.. மூத்த குடிமக்களுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கி எது?

எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு விதிகள்

நவம்பர் மாதம் முதல் கிரெடிட் கார்டு விதிகளில் புதிய மாற்றங்கள் கொண்டு வர எஸ்பிஐ வங்கி திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் பாதுகாப்பற்ற கிரெடிட் கார்டுகளுக்கு 3.75 சதவீதம் மாதாந்திர நிதிக் கட்டணம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி மின்சாரம், எரிவாயு போன்ற பயன்பாடுட்களுக்கு ரூ.50,000-க்கு மேல் கட்டணம் செலுத்தினால் 1 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : MSSC Scheme : பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்.. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!

மியூச்சுவல் ஃபண்ட் விதிமுறைகள்

நவம்பர் மாதம் முதல் மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு கடுமையான வர்த்தக விதிகளை செபி அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் AMC-கள் பரிந்துரைக்கப்பட்டவர்கள் அல்லது உறவினர்கள் தொடர்பான ரூ.15 லட்சத்திற்கும் அதிகமான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Fixed Deposit : 9.50% வரை வட்டி.. மூத்த குடிமக்களுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!

டெலிகாம் விதிகள்

ஸ்பேம் காலகளை தடுக்க ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களை மெசேஜ் டிரேசபிலிட்டியை செயல்படுத்துமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புதிய விதிகள் ஏதேனும் அமல்படுத்தலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Airtel : ரீச்சார்ஜ் திட்டங்களில் விபத்து காப்பீடு.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஏர்டெல்.. எவ்வளவு தெரியுமா?

மேற்குறிப்பிட்ட அனைத்து மாற்றங்களும் வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!