Amazon & Flipkart Sale : ஸ்மார்ட்போன் முதல் டிவி வரை.. அதிரடி சலுகைகளை வாரி வழங்கும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்! - Tamil News | From smartphone to TV you can get exciting offers in this amazon and Flipkart festival sale | TV9 Tamil

Amazon & Flipkart Sale : ஸ்மார்ட்போன் முதல் டிவி வரை.. அதிரடி சலுகைகளை வாரி வழங்கும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்!

Published: 

27 Sep 2024 12:37 PM

Sale Offer | இந்த சிறப்பு தள்ளுபடி சலுகையில் ஸ்மார்ட்போன்கள் முதல் மின்சாதன பொருட்களை வரை மிக குறைவான விலையில் விற்பனை செய்யப்படும். அது மட்டுமன்றி, வீட்டிற்கு தேவையான பொருட்கள் மற்றும் உடைகளும் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.

Amazon & Flipkart Sale : ஸ்மார்ட்போன் முதல் டிவி வரை.. அதிரடி சலுகைகளை வாரி வழங்கும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்!

பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேல்

Follow Us On

ஒவ்வொரு ஆண்டும் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஈ காமர்ஸ் நிறுவனங்கள், சிறப்பு தள்ளுபடி சலுகைகளை அறிவிக்கும். இந்த சிறப்பு தள்ளுபடி சலுகையில் ஸ்மார்ட்போன்கள் முதல் மின்சாதன பொருட்களை வரை மிக குறைவான விலையில் விற்பனை செய்யப்படும். அது மட்டுமன்றி, வீட்டிற்கு தேவையான பொருட்கள் மற்றும் உடைகளும் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். இந்த ஆண்டுக்கான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் சேல் இன்று தொடங்கியுள்ள நிலையில், என்ன என்ன பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது, இந்த சேலில் எந்த பொருளை வாங்கினால் சிறந்த லாபம் பெரலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : iPhone 16 Series : வெளிநாடுகளில் இந்தியாவை விட விலை குறைவாக விற்பனை செய்யப்படும் ஐபோன் 16.. எவ்வளவு தெரியுமா?

சிறந்த தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள்

OnePlus Nord CE 4 Lite 5G

ஒன்பிளஸ் நோட் சிஇ 4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.19,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலில் இதற்கு ரூ.3,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த ஒன்பிளஸ் நோட் சிஇ 4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை வெறும் ரூ.16,999-க்கு வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Moto Edge 50 Fusion

லெனோவா நிறுவனத்தின் மோடோ எட்ஜ் 50 ஃபியுஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த மே மாதம் ரூ.22,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேலில் இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.3,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.19,999-க்கு வாங்கிக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : OnePlus Nord CE4 Lite : ரூ.3,000 தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட உள்ள ஒன்பிளஸ் நோட் சிஇ4 லைட்.. முழு விவரம் இதோ!

Nothing Phone 2a

நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் கடந்த மார்ச் மாதம் ரூ.23,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேலில் இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ.18,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ. 5,000 தள்ளுபடி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Realme 12 Pro

கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரியல்மி 12 ப்ரோ ஸ்ம் ஸ்மார்ட்போன் ரூ.25,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேலில் இந்த ஸ்மார்ட்போன் வெறும் 19,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ. 6,000 தள்ளுபடி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : iPhone 16 Series : ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் இப்படி ஒரு பிரச்னையா?.. குழம்பும் பயனர்கள்!

Vivo Y200e 5G

Vivo Y200e 5G  ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்ப விலையாக ரூ.19,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பிறகு இந்த ஸ்மார்ட்போன் ரூ.20,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,250 தள்ளுபடியுடன் ரூ.19,749-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

அதிரடி சலுகைகளுடன் விற்பனை செய்யப்படும் டிவி

43 இன்ச் கொண்ட LG OLED டிவி ரூ.47,000-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது வெறும் ரூ.27,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சுமார் ரூ.20,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : iPhone 16 Series : ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க வரிசையில் நிற்க தேவை இல்லை.. வெறும் 20 நிமிடங்களில் டெலிவரி செய்யும் நிறுவனங்கள்!

இதேபோல ரூ.22,000 மதிப்புள்ள லெனோவா டேப் பிளஸ் தற்போது ரூ.17,000-க்கு விற்பனை செய்யபப்டுகிறது. மேலும் ஆப்பிள் மேக் புக் எம்1-க்கு அதிரடி சலுகை வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.93,000 ஆக உள்ள நிலையில் தற்போது வெறும் ரூ.53,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் 40,000 வரை தள்ளுபடி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஆலிவ் ஆயிலின் நன்மைகள்..!
சருமத்திற்கு பல நன்மைகளை தரும் கற்றாழை..!
புதினாவை தினமும் மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்
Exit mobile version