Hurun List 2024 | அம்பானியை பின்னுக்கு தள்ளிய கவுதம் அதானி.. வெளியானது ஹுரூன் இந்திய பணக்காரர்கள் பட்டியல்!
Richest Man | ரிலையன்ஸ் குழுமத்தின் மூலம் பல்வேறு தொழில்களை செய்து வரும் முகேஷ் அம்பானி, தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 2024 ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலில் உலக அளவில் முகேஷ் அம்பானி 9வது இடம் பிடித்த நிலையில், ஆசிய அளவில் முதல் இடம் பிடித்திருந்தார்.
முகேஷ் அம்பானி பின்னடைவு : உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் குழுமத்தின் மூலம் பல்வேறு தொழில்களை செய்து வரும் முகேஷ் அம்பானி, தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 2024 ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலில் உலக அளவில் முகேஷ் அம்பானி 9வது இடம் பிடித்த நிலையில், ஆசிய அளவில் முதல் இடம் பிடித்திருந்தார். அதேபோல கவுதம் அதானி 2வது இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் தற்போது 2024 ஆம் ஆண்டுக்கான ஹூருன் இந்திய பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : Passport : பாஸ்போர்ட் இணையதளம் 3 நாட்களுக்கு செயல்படாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளிய கவுதம் அதானி
2024 ஆம் ஆண்டுக்கான ஹூரூன் இந்திய பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரூ.11.6 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் கவுதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் முதல் இடம் பிடித்துள்ளனர். இதன் மூலம் ஆசியாவின் முதல் பணக்காரராக வளம் வந்த முகேஷ் அம்பானியை கவுதம் அதானி பின்னுக்கு தள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவுதம் அதானி முதல் இடம் பிடித்துள்ள நிலையில், ரூ.10.14 கோடி சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி 2வது இடம் பிடித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
இந்தியாவின் பில்லியனர்களின் எண்ணிக்கை 29% ஆக அதிகரிப்பு
இந்த பட்டியலில் உள்ள தரவரிசைக் கணக்கீடுகள் அனைத்தும் 2024 ஜூலை 31 செல்வத்தை அடிப்படையாக கொண்டு தொகுக்கப்பட்டவை என்று ஹுருன் இந்தியாவின் நிறுவனரும் தலைமை ஆசிரியருமான அனஸ் ரஹ்மான் ஜூனைத் கூறியுள்ளார். அப்போது பேசிய அவர், ஆசியாவின் செல்வத்தை உருவாக்கும் இயந்திரமாக இந்தியா வளர்ந்து வருகிறது. அதேநேரத்தில், சீனாவில் உள்ள பில்லியனர்களின் எண்ணிக்கை சுமார் 25% வரை குறைந்துள்ளது. ஆனால் இந்தியாவில் அந்த எண்ணிக்கை சுமார் 29% அதிகரித்து 334 பில்லியனர்களை எட்டியுள்ளது.
இதையும் படிங்க : Blue Aadhaar Card : ப்ளூ ஆதார் கார்டில் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய எவ்வளவு செலுத்த வேண்டும்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
அதானி, அம்பானியை தொடர்ந்து ஹெச்சிஎல் நிறுவனத்தின் ஷிவ்நாடார் மற்றும் அவரது குடும்பத்தினர் சுமார் ரூ.3.14 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்திலும், சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியாவின் சைரஸ் எஸ் பூனாவாலா மற்றும் அவரது குடும்பம் ரூ.2.89 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 4வது இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
609வது இடத்தில் இருந்து 17வது இடத்திற்கு முன்னேறிய கவுதம் அதானி
முன்னதாக உலக பணக்காரர்கள் பட்டியலில் 609வது இடத்தில் இருந்த அதானி, 17வது இடத்திற்கு முன்னேறினார். அதன்படி இந்தியாவின் 2வது பணக்காரராக உருவெடுத்தார் அதானி. இந்நிலையில், ஹூரூன் இந்திய பணக்காரர்கள் பட்டியலின் படி, கவுதம் அதானி முதல் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் சமீப காலத்தில் அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.