5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Budget 2024 Gold Silver Tax : தங்கம், வெள்ளி வரி குறைப்பு.. பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு

தங்கம் மற்றும் வெள்ளி வரி குறைப்பு | இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கு 15% வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், வரி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன்படி 15% ஆக இருந்த தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி வரி 6% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Budget 2024 Gold Silver Tax : தங்கம், வெள்ளி வரி குறைப்பு.. பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 23 Jul 2024 13:42 PM

தங்கம், வெள்ளி வரி குறைப்பு : பாஜக அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், மத்திய அரசின் முதல் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 5 பட்ஜெட் மற்றும் 1 இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன் 7வது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார்.  இதில் சுமார் 2 மணி நேரம் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு அறிவிப்புகள், சலுகைகள் மட்டும் திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியியிட்டுள்ளார். அதில், தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமறி வரி குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி, தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கு ஏற்கனவே 15% வரி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அதை வெறும் 6% ஆக குறைத்து அறிவித்துள்ளார்.

தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைப்பு – நிர்மலா சீதாரமன் அறிவிப்பு!

இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கு 15% வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், வரி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன்படி 15% ஆக இருந்த தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி வரி 6% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நகை வாங்கும்போது தற்போதைய நிலை இல்லாமல் சற்று குறைவான விலைக்கு நகைகளை வாங்க முடியும் என்று கூறப்படுகிறது. திருமணம் அல்லது விசேஷங்களுக்கு நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு நிச்சயம் இது மகிழ்ச்சியான செய்தியாக அமையும்.

இதையும் படிங்க : Budget 2024 : மத்திய பட்ஜெட் 2024.. ஆந்திராவுக்கு அள்ளிக்கொடுத்த மத்திய அரசு.. எவ்வளவு தெரியுமா?

பிளாட்டினத்திற்கும் இறக்குமதி வரியை குறைத்த மத்திய அரசு

பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கு வரி குறைக்கப்பட்டது போலவே பிளாட்டினத்திற்கும் இறக்குமதி விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிளாட்டினத்தின் இறக்குமதி வரி 12% -ல் இருந்து 6.4% ஆக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல தாமிரம், செல்போன், செல்போன் உதிரி பாகங்கள், மீன், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட சில தோல் பொருட்களுக்கும் வரி குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Budget 2024 Tax Slabs: வருமான வரி செலுத்துவோருக்கு குட் நியூஸ்.. நிலையான வரி கழிவு அதிகரிப்பு!

அரசுக்கு வருமானம் பெருகும்

அதிகப்படியான வரி இறக்குமதி காரணமாக இந்தியாவுக்கு கடத்தல் மூலம் நாட்டிற்குள் தங்கள் நுழைவது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. எனவே இந்த வரி குறைப்பு நடவடிக்கையால், கடத்தலின் மூலம் கிடைக்கும் லாபம் குறைந்து, கள்ளச்சந்தை வர்த்தகம் கட்டுப்படுத்தப்படும் என்று கூறபப்டுகிறது. இதன் மூலம் அரசுக்கு வருமானம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி இந்த வரி குறைப்பு வணிகர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிம் என கூறப்படுகிறது.

Latest News