5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Gold Price September 06 2024: மாற்றம் கண்டதா தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ!

ப்ரல் மாதத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்ட நிலையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தவற்கு முன்னால் வரை ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்தது. மத்திய பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி சுங்க வரி குறைப்பால் விலை சரிய தொடங்கியது. பட்ஜெட் தாக்கலான பிறகு 4 நாட்கள் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், அதன்பிறகு இதுவரை ஏற்ற இறக்கத்தில் உள்ளது.

Gold Price September 06 2024: மாற்றம் கண்டதா தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 06 Sep 2024 11:17 AM

தங்கம் விலை: தங்கம் மீது வயது வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் அளவு கடந்த ஈர்ப்பு இருக்கும். தங்கத்தை சேமிப்பது போல வேறு எந்த பொருளையும் சேர்ப்பதில் ஆர்வம் காட்டமாட்டார்கள். அத்தகைய தங்கத்தின் விலை சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் நாள்தோறும் நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில மாதங்களாக தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்ட நிலையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தவற்கு முன்னால் வரை ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்தது. மத்திய பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி சுங்க வரி குறைப்பால் விலை சரிய தொடங்கியது. பட்ஜெட் தாக்கலான பிறகு 4 நாட்கள் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், அதன்பிறகு இதுவரை ஏற்ற இறக்கத்தில் உள்ளது. குறிப்பாக நேற்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு மாற்றமின்றி ரூ.6,670-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ரூ.53,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், செப்டம்பர் 5ஆம் தேதியான இன்றும் தங்கம் விலை மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

Also Read: Uttar Pradesh: உ.பி.,யில் அசைவம் கொண்டு வந்த மாணவன்.. சஸ்பெண்ட் செய்த பள்ளி முதல்வர்!

இன்றைய தங்கம் விலை:

செப்டம்பர் 6 ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு விலை மாற்றமில்லாமல் ரூ.53,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை மாற்றமில்லாமல் ரூ.6,720-க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.57,400 ஆகவும் கிராம் ரூ. 7,175 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை:

அதேபோல, வெள்ளி விலை கிராமுக்கு  ரூ.2 உயர்ந்து ரூ.92.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.92,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை சேமிப்பது எப்படி?

உலகளவில் தங்கத்தை நுகரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் வகிக்கிறது. இந்தியாவை போன்ற பிற நாடுகளும் தங்கத்தை சேமித்து வைக்கின்றன. ஏதேனும் நிதி நெருக்கடி காலத்தில் பணத்திற்கு பதிலாக தங்கத்தை கொண்டு பிற நாடுகளில் இருந்து தானியங்கள் கூட வாங்கி, சொந்த நாட்டின் வறுமையை போக்கும் அளவுக்கு தங்கம் ஒரு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அப்படிதான், வீடுகளில் திடீர் செலவு வரும் நாட்களில் தங்கம் ஒரு காக்கும் தேவதையாகவே மாறிவிடுகிறது. இந்தியாவைச் பொருத்தவரை ஏழை மற்றும் நடுத்தர வர்கத்திற்கு தங்கம் தான் முதல் மற்றும் ஒரே சேமிப்பாக இருக்கிறது.

தங்கம் தான் சரியான சேமிப்பு என்பதால் இவர்கள் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். தங்கத்தை நகைகளாக மட்டும் வாங்காமல் நாணயங்கள், தங்க கட்டிகள், தங்க பத்திரம் வடிவில் வாங்கலாம். தங்கத்தின் செய்யும் முதலீடு பாதுகாப்பானதாகவும், லாபகரமானதாவும், நமது எதிர்கால நிதி சிக்கல்களை சமாளிக்கும் வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News