5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Gold Price November 13, 2024: 2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

தங்கம், வெள்ளி விலை என்றும் நிலையானது இல்லை. ஆனால் அது எட்டாக்கனியாக மாறும்போது தான் சிக்கல் எழுகிறது. அதிகமாக வணிகம் செய்யப்படும் தங்கம் விலை உச்சத்தில் இருக்கும்போது அதை வாங்கும்போது அமல்படுத்தப்படும் வரிகளும் நடுத்தர மக்களுக்கு சுமையாக இருக்கிறது. இன்று நவம்பர் 13 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது சற்று நிம்மதியை அளித்துள்ளது.

petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 13 Nov 2024 11:04 AM
பொதுவாக பல ஆபரணங்கள் இருந்தாலும் தங்கம் மீது பலருக்கும் இருக்கும் ஈர்ப்பு என்பது தனித்துவமானது. பொருளாதார அடிப்படையில் பார்க்கும்போது  அனைத்து வயதினருக்கும் தங்க நகைகள் மீது விருப்பம் உள்ளது என்பது நிதர்சனம். அதனால் தான் பணத்தைக் காட்டிலும் பலரும் தங்கத்தை சேமிக்க விரும்புகிறார்கள்.தங்கம் மீதான முதலீடு என்றைக்கும் நன்மை பயக்கும்.

1 / 6
தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணி நாடாக திகழ்ந்து வருகிறது பிற நாடுகளும் தங்கத்தை சேமித்து வைப்பதில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறது. காரணம் கண்டிப்பாக ஏதேனும் நிதி நெருக்கடி ஏற்படும் காலத்தில் பணத்திற்கு பதிலாக தங்கம் கைகொடுக்கும். தங்கம் கொண்டு சொந்த நாட்டின் வறுமையை போக்கும் அளவுக்கு தங்கம் ஒரு முக்கியமான வணிகமாக பார்க்கப்படுகிறது.

2 / 6
தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்றம், இறக்கம் கண்டும் வருகிறது. குறிப்பாக நடப்பாண்டு வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டும் வருகிறது. அதன்படி, நேற்று நவம்பர் 12 ஆம் தேதியான நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.1080 குறைந்து ரூ.56,680க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை  ரூ.7,085-க்கு விற்பனையானது.

3 / 6
இந்நிலையில் நவம்பர் 13 ஆம் தேதியான இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு  ரூ.320 குறைந்து ரூ.56,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.40 குறைந்து ரூ.7,045க்கு விற்பனையாகிறது.

4 / 6
அதேசமயம் 24 கேரட் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.320 குறைந்து ரூ.60,400 ஆகவும், கிராம் ரூ.40 குறைந்து ரூ.7,550 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில்  தங்கம், வெள்ளி விலை அதிகரித்து வந்த நிலையில் நேற்று முதல் குறைய தொடங்கியுள்ளது.

5 / 6
மேலும் வெள்ளி விலை ரூ.1 அதிகரித்து ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.1,01,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் வெள்ளி விலை உயர்வில் தொடர்ச்சியாக மாற்றம் இருப்பதால் நடுத்தர மக்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

6 / 6
Latest Stories