5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Gold Price November 14, 2024: ஒரே நாளில் சவரன் ரூ.880 குறைவு.. இன்றைய தங்கம் விலை நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: தங்கம், வெள்ளி விலை என்றும் நிலையானது இல்லை என்ற நிலையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்ததால் நடுத்தர மக்கள் கவலையடைந்தனர். ஆனால் தற்போது இறங்குமுகமாக மாறியுள்ளதாக சற்று நிம்மதியடைந்துள்ளனர். இன்று நவம்பர் 14 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது. இதன்மூலம் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7 ஆயிரத்துக்கும் கீழே இறங்கியுள்ளது.

petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 14 Nov 2024 10:34 AM
சந்தையில் விற்பனை செய்யப்படும் பல ஆபரணங்களுக்கு மத்தியில் தங்கம் மீது பலருக்கும் அதிகமான பிடிப்பு என்பது உள்ளது. பொருளாதார அடிப்படையில் பார்த்தால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையி தங்க நகைகள் உருவாக்கப்படுகிறது என்பது நிதர்சனம். பணத்தைக் காட்டிலும் தங்கத்தின் மீதான முதலீடு சிறந்ததாக கருதப்படுகிறது. அதனால் பலரும் தங்கத்தை சிறுசேமிப்பாக கூட சேமிக்க விரும்புகிறார்கள்.

1 / 6
தங்கத்தை இறக்குமதி செய்வதில் இன்றளவும் இந்தியா முன்னணி நாடாக திகழ்ந்து வருகிறது. பிற நாடுகளும் தங்கத்தை சேமித்து வைப்பதில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறது. காரணம் கண்டிப்பாக ஏதேனும் நிதி நெருக்கடி ஏற்படும் காலத்தில்  தங்கம் கைகொடுக்கும் என்பது தான். அதனால் தான் நடுத்தர மக்கள் தங்கம் சேமிப்பதில் மிகுந்த ஆர்வம் கொள்கிறார்கள்

2 / 6
தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்றம், இறக்கம் கண்டும் வருவது தொடர்கதையாகி விட்டது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டும் வருகிறது. அதன்படி, நேற்று நவம்பர் 13 ஆம் தேதியான நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.56,360க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7,045-க்கு விற்பனையானது.

3 / 6
இந்நிலையில் நவம்பர் 14 ஆம் தேதியான இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.55,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.110 குறைந்து ரூ.6,935க்கு விற்பனையாகிறது.

4 / 6
அதேசமயம் 24 கேரட் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.880 குறைந்து ரூ.59,520ஆகவும், கிராம் ரூ.110 குறைந்து ரூ.7,440 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் தங்கம், வெள்ளி விலை அதிகரித்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக குறைய தொடங்கியுள்ளது.

5 / 6
மேலும் வெள்ளி விலை ரூ.2 குறைந்து ரூ.99-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.99,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் வெள்ளி விலை உயர்வில் தொடர்ச்சியாக மாற்றம் இருப்பதால் நடுத்தர மக்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

6 / 6
Latest Stories