5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Gold Price November 15, 2024: மீண்டும் தங்கம் விலை அதிகரிப்பு.. இன்றைய நிலவரம் இதோ!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: தங்கம், வெள்ளி விலை தொடர்ச்சியாக மாற்றம் கண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக குறைந்த வந்த தங்கம் விலையால் நடுத்தர மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் தற்போது மீண்டும் ஏறுமுகமாக மாறியுள்ளது. இன்று நவம்பர் 15 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. இதன்மூலம் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7,945க்கு விற்பனை செய்யப்படுகிறது.

petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 15 Nov 2024 11:40 AM
தங்கம் மீது சந்தையில் விற்பனை செய்யப்படும் பல ஆபரணங்களுக்கு மத்தியில் பலருக்கும் அதிகமான விருப்பம் என்பது உள்ளது. பொருளாதார பார்வையில் பார்க்கும் போது வயது வித்தியாசமில்லாமல் அனைத்து வயதினருக்கும் ஏற்ற மாதிரியான தங்க நகைகள் விற்பனை செய்யப்படுகிறது பணத்தைக் காட்டிலும் தங்கத்தின் மீதான முதலீடு சிறந்ததாகும். அதனால் பலரும் தங்கத்தை சிறிது சிறிதாக கூட சேர்க்க விரும்புகிறார்கள்.

1 / 6
இன்றளவும் இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்வதில்  முன்னணி நாடாக திகழ்கிறது. பிற நாடுகளும் தங்கத்தை சேமித்து வைப்பதில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறது. நாம் சேமிக்கும் தங்கம் ஏதேனும் நிதி நெருக்கடி ஏற்படும் காலத்தில்  கைகொடுக்கும்.. அதனால் தான் மக்கள் தங்கம் சேமிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்

2 / 6
தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்றம், இறக்கம் கண்டும் வருவது தொடர்கதையாகி விட்டது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டும் வருகிறது. அதன்படி, நேற்று நவம்பர் 14 ஆம் தேதியான நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.55,480க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6,935-க்கு விற்பனையானது

3 / 6
இந்நிலையில் நவம்பர் 15 ஆம் தேதியான இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.55,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 அதிகரித்து ரூ.6,945க்கு விற்பனையாகிறது.

4 / 6
அதேசமயம் 24 கேரட் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.80 அதிகரித்து ரூ.59,600ஆகவும், கிராம் ரூ.10 அதிகரித்து ரூ.7,450 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் தங்கம், வெள்ளி விலை அதிகரித்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக குறைய தொடங்கியுள்ளது.

5 / 6
மேலும் வெள்ளி விலை இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ.99-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.99,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் வெள்ளி விலை உயர்வில் தொடர்ச்சியாக மாற்றம் இருப்பதால் நடுத்தர மக்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

6 / 6
Latest Stories