Gold Vs FD : தங்கம் Vs நிலையான வைப்புநிதி.. இரண்டில் எது சிறந்தது?.. முழு விவரம் இதோ!

Investment | பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும்.

Gold Vs FD : தங்கம் Vs நிலையான வைப்புநிதி.. இரண்டில் எது சிறந்தது?.. முழு விவரம் இதோ!

மாதிரி புகைப்படம்

Updated On: 

25 Oct 2024 11:10 AM

மனிதர்களின் வாழ்வில் சேமிப்பு என்பது மிகவும் முக்கியாமன் ஒன்றாகும். சேமிப்பின் மகத்துவத்தை உணர்ந்த பெரும்பாலான மக்கள் சேமிக்க தொடங்கிவிட்டனர். சேமிப்பு என்றதுமே மக்களுக்கு இரண்டு வகையான சேமிப்புகள் தான் நினைவிற்கு வரும். ஒன்று தங்கத்தில் முதலீடு செய்வது அல்லது நிலையான வைப்புநிதி உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்வது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு நிலையான வைப்புநிதி அல்லது தங்க நகைகள் இவை இரண்டில் எது பாதுகாப்பானது, எது சிறந்த பலனை கொடுக்கும் என்ற கேள்வி உள்ளது. இந்த நிலையில், தங்கம் மற்றும் நிலையான வைப்புநிதி இவை இரண்டில் எது சிறந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : FD Interest Rate : 2 முதல் 5 ஆண்டுகளுக்கான FD.. அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள்.. முழு விவரம் இதோ!

நிலையான வைப்புநிதி திட்டம்

பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் FD எனப்படும் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும்.

இதையும் படிங்க : FD Interest Rate : 1 முதல் 2 ஆண்டுகளுக்கான FD.. அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள்.. முழு விவரம் இதோ!

FD முதலீட்டில் இருக்கும் சாதக, பாதகங்கள்

  • பொதுவாக நிலையான வைப்புநிதி திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் 5 ஆண்டுகளுக்கான நீண்ட முதலீட்டு திட்டத்தை தேர்வு செய்கின்றனர். இதன் மூலம் சிறந்த வட்டி கிடைப்பது மட்டுமன்றி, திட்டத்தின் முடிவில் நல்ல தொகையும் கிடைக்கும்.
  • 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில், வருமான வரி சட்டம் 80C, 1961-ன் படி ரூ.1.50 லட்சம் வரை வரி விலக்கு கிடைக்கும்.
  • நிலையான வைப்புநிதி திட்டங்களில் ஒரு முறை முதலீடு செய்தால் போது, திட்டம் முடியும் வரை வட்டி கிடைக்கும். இந்த வட்டியை காலாண்டிற்கு ஒருமுறை, அரையாண்டிற்கு ஒருமுறை மற்றும் ஆண்டிற்கு ஒருமுறையும் பெற்றுக்கொள்ளலாம்.
  • மூத்த குடிமக்கள் நிதி பாதுகாப்யுடன் முதுமையை கழிக்க FD ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

இதையும் படிங்க : Indian Rupees : இந்திய ரூபாய் நோட்டிற்கு காந்தியின் புகைப்படம் முதல் தேர்வு அல்ல.. முதல் தேர்வு என்ன தெரியுமா?

தங்கத்தை சேமிக்கும் மக்கள்

உலகளவில் தங்கத்தை நுகரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் வகிக்கிறது. இந்தியாவை போன்ற பிற நாடுகளும் தங்கத்தை சேமித்து வைக்கின்றன. ஏதேனும் நிதி நெருக்கடி காலத்தில் பணத்திற்கு பதிலாக தங்கத்தை கொண்டு பிற நாடுகளில் இருந்து தானியங்கள் கூட வாங்கி, சொந்த நாட்டின் வறுமையை போக்கும் அளவுக்கு தங்கம் ஒரு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அப்படிதான், வீடுகளில் திடீர் செலவு வரும் நாட்களில் தங்கம் ஒரு காக்கும் தேவதையாகவே மாறிவிடுகிறது. இந்தியாவைச் பொருத்தவரை ஏழை மற்றும் நடுத்தர வர்கத்திற்கு தங்கம் தான் முதல் மற்றும் ஒரே சேமிப்பாக இருக்கிறது.

இதையும் படிங்க : UPI : UPI 123 Pay மற்றும் UPI Lite பரிவர்த்தனை வரம்பை உயர்த்திய ரிசர்வ் வங்கி.. எவ்வளவு தெரியுமா?

தங்க நகை முதலீட்டில் இருக்கும் சாதக, பாதகங்கள்

  • மக்கள் தங்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், பணத்தை சேமிக்கும் வழியாகவும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்.
  • தங்கத்தில் உள்ள ஒரு சிறப்பு என்னவென்றால் நகைகள் அல்லாத வெறும் தங்கத்தை உலக அளவில் பணமாக மாற்ற முடியும்.
  • தங்கம் ஒரு சிறந்த முதலீடு என்றாலும் அது நிலையற்றதாக கருதப்படுகிறது. காரணம் தங்கத்திற்கு நிலையான விலை எதுவும் கிடையாது. கால சூழலுக்கு ஏற்ப தங்கத்தின் விலை உயரவும், குறையவும் வாய்ப்புள்ளது.
  • தேவை மற்றும் வழங்கல், பணவீக்கம், உலகளாவிய தங்கத்தின் விலை, பொருளாதார சூழல் மற்றும் தங்க நகைகளுக்கான தேவை ஆகியவை தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே தங்கத்தில் முதலீடு செய்வதை விடவும் நிலையான வைப்புநிதி திட்டங்களில் முதலீடு செய்வது சிறப்பானதாக இருக்கும்.

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!