Gold Price August 19 2024 : குறைந்ததா தங்கம் விலை? இன்றைய நிலவரம் இதுதான்.. செக் பண்ணிக்கோங்க!

இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை: ஆகஸ்ட் 19 ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி சென்னையில் தங்கம் விலையில் விலை மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு சவரன் ரூ.53,360 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,670-க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.57,000 ஆகவும் கிராம் ரூ. 7,125 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold Price August 19 2024 : குறைந்ததா தங்கம் விலை? இன்றைய நிலவரம் இதுதான்.. செக் பண்ணிக்கோங்க!

தங்கம்

Updated On: 

12 Nov 2024 22:24 PM

தங்கம் விலை: சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது.  கடந்த சில மாதங்களாக தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது.  குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்ட நிலையில், அடுத்தடுத்த மாதங்களில் ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்தது.  மத்திய பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி சுங்க வரி குறைப்பால் விலை சரிய தொடங்கியது. பட்ஜெட் தாக்கலான பிறகு 4 நாட்கள் தங்கத்தின் விலை குறைந்த வந்த நிலையில், அதன்பிறகு ஏற்ற இறக்கத்தில் உள்ளது. குறிப்பாக கடந்த சனிக்கிழமை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 107 உயர்ந்து ரூ.6,670-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன்  ரூ.53,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், ஆகஸ்ட் 19ஆம் தேதியான இன்று தங்கம் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

Also Read: ரூ.7 செலுத்தினால் போதும்.. மாதம் ரூ.5,000 பெறலாம்.. அசத்தல் திட்டம்!

இன்றைய தங்கம் விலை:

ஆகஸ்ட் 19 ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி சென்னையில் தங்கம் விலையில் விலை மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு சவரன் ரூ.53,360 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,670-க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.57,000 ஆகவும் கிராம் ரூ. 7,125 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை:

அதேபோல, வெள்ளி விலை கிராமுக்கு விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.91.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.91,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை சேமிப்பது எப்படி?

உலகளவில் தங்கத்தை நுகரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் வகிக்கிறது. இந்தியாவை போன்ற பிற நாடுகளும் தங்கத்தை சேமித்து வைக்கின்றன. ஏதேனும் நிதி நெருக்கடி காலத்தில் பணத்திற்கு பதிலாக தங்கத்தை கொண்டு பிற நாடுகளில் இருந்து தானியங்கள் கூட வாங்கி, சொந்த நாட்டின் வறுமையை போக்கும் அளவுக்கு தங்கம் ஒரு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அப்படிதான், வீடுகளில் திடீர் செலவு வரும் நாட்களில் தங்கம் ஒரு காக்கும் தேவதையாகவே மாறிவிடுகிறது. இந்தியாவைச் பொருத்தவரை ஏழை மற்றும் நடுத்தர வர்கத்திற்கு தங்கம் தான் முதல் மற்றும் ஒரே சேமிப்பாக இருக்கிறது.

Also Read: உங்களுக்கு வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லையா?.. இது கூட காரணமாக இருக்கலாம்!

தங்கம் தான் சரியான சேமிப்பு என்பதால் இவர்கள் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். தங்கத்தை நகைகளாக மட்டும் வாங்காமல் நாணயங்கள், தங்க கட்டிகள், தங்க பத்திரம் வடிவில் வாங்கலாம். தங்கத்தின் செய்யும் முதலீடு பாதுகாப்பானதாகவும், லாபகரமானதாவும், நமது எதிர்கால நிதி சிக்கல்களை சமாளிக்கும் வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தோல்வியில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம்!
பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்!
காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?