Gold Price Today: மீண்டும் ரூ. 54,000-ஐ தாண்டியது தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன? - Tamil News | Gold price cross rupees 54000 in chennai today on june 6th | TV9 Tamil

Gold Price Today: மீண்டும் ரூ. 54,000-ஐ தாண்டியது தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

Published: 

06 Jun 2024 11:06 AM

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதுவும் ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. கடந்த மே மாதத்தில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டது.  மேலும் ஜூன் மாதத்தில் தொடகத்தில் இருந்தும் ஏற்ற இறக்கத்தில் இருக்கிறது. குறிப்பாக நேற்று தங்கத்தின் விலை சற்று குறைந்தது. அதன்படி,  22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,725க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Gold Price Today: மீண்டும் ரூ. 54,000-ஐ தாண்டியது தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை

Follow Us On

தங்கம் விலை: ஜூன் மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைந்த நிலையில் அடுத்தடுத்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. ஆனால் இன்று தங்கத்தில் விலை மீண்டும் 54,000 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகின்றது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதுவும் ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. கடந்த மே மாதத்தில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டது.  மேலும் ஜூன் மாதத்தில் தொடகத்தில் இருந்தும் ஏற்ற இறக்கத்தில் இருக்கிறது. குறிப்பாக நேற்று தங்கத்தின் விலை சற்று குறைந்தது. அதன்படி,  22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,725க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,800க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஜூன் 6-ம் தேதியான இன்றைய நிலவரப்படி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு சவரனுக்கு ரூ. 600 அதிகரித்துள்ளது. இதனால் இன்று தங்கத்தில் விலை ஒரு சவரன் 54, 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இன்றைய தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.54,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 75 உயர்ந்து ரூ.6,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,160 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.7,270 ஆக உள்ளது.

வெள்ளி விலை: அதேபோல, வெள்ளி கிராமுக்கு விலை ரூ.1.80 காசுகள் அதிகரித்து ரூ.98.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.98,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் ஏன் முக்கியம்? இந்தியாவைச் பொருத்தவரை ஏழை மற்றும் நடுத்தர வர்கத்திற்கு தங்கம் தான் முதல் மற்றும் ஒரே சேமிப்பாக இருக்கிறது. தங்கம் தான் சரியான சேமிப்பு என்பதால் இவர்கள் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். உலகளவில் தங்கத்தை நுகரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் வகிக்கிறது. இந்தியாவை போன்ற பிற நாடுகளும் தங்கத்தை சேமித்து வைக்கின்றன.

ஏதேனும் நிதி நெருக்கடி காலத்தில் பணத்திற்கு பதிலாக தங்கத்தை கொண்டு பிற நாடுகளில் இருந்து தானியங்கள் கூட வாங்கி, சொந்த நாட்டின் வறுமையை போக்கும் அளவுக்கு தங்கம் ஒரு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அப்படிதான், வீடுகளில் திடீர் செலவு வரும் நாட்களில் தங்கம் ஒரு காக்கும் தேவதையாகவே மாறிவிடுகிறது.

தங்கத்தை நகைகளாக மட்டும் வாங்காமல் நாணயங்கள், தங்க கட்டிகள், தங்க பத்திரம் வடிவில் வாங்கலாம். தங்கத்தின் செய்யும் முதலீடு பாதுகாப்பானதாகவும், லாபகரமானதாவும், நமது எதிர்கால நிதி சிக்கல்களை சமாளிக்கும் வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version