5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Gold Price : சவரனுக்கு ரூ.3280 குறைந்த தங்கம் விலை.. ஒரே வாரத்தில் தடாலடி சரிவு..!

Gold Investment | கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மத்திய வங்கிகள், வைப்பு நிதிக்கான வட்டியை அதிரடியாக குறைத்தன. இதன் காரணமாக உலக அளவிலான முதலீட்டாளர்கள் கடந்த மாதம் முழுவதும் தங்கத்தில் முதலீடு செய்து வந்தனர். முதலீட்டாளர்கள் அதிக அளவு தங்கத்தில் முதலீடு செய்த நிலையில், உலக சந்தையிலும் தங்கத்தில் விலை உயர்ந்தது.

Gold Price : சவரனுக்கு ரூ.3280 குறைந்த தங்கம் விலை.. ஒரே வாரத்தில் தடாலடி சரிவு..!
தங்கம்
vinalin
Vinalin Sweety | Published: 13 Nov 2024 12:55 PM

கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கள் விலை கடும் உயர்வை சந்தித்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.3,280 குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வந்த நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் ரூ.60,000 எட்டும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை சரசரவென குறைந்துள்ளது. அதன்படி, தற்போது தங்கம் விலை சவரன் ரூ.56,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், தங்கம் விலை குறைய காரணம் என்ன மற்றும் கடந்த ஒரு வார தங்கம் விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : 37 கோடி பயணிகள் இருந்தும் இழுத்து மூடும் விமான நிறுவனங்கள்.. என்னதான் சிக்கல், ஏன் இந்த நஷ்டம்?

ஒரே வாரத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை

சென்னையில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் தங்கம் விலை ரூ.3,280 வரை குறைந்துள்ளது. அதாவது,

  • நவம்பர் 7 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்தது. அதன்படி, ஒரு சவரன் ரூ.57,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
  • நவம்பர் 8 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்தது. அதன்படி, ஒரு சவரன் ரூ.58,280-க்கு விற்பனை செய்யப்பட்டது.
  • நவம்பர் 9 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது. அதன்படி, ஒரு சவரன் ரூ.58,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
  • நவம்பர் 10 ஆம் தேதி தங்கம் விலையில் மாற்றமின்ரி விற்பனை செய்யப்பட்டது. அதாவது ஒரு சவரன் ரூ.58,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
  • அதனை தொடர்ந்து நவம்பர் 11 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்தது. அதன்படி, ஒரு சவரன் ரூ.57,760-க்கு விற்பனை செய்யப்பட்டது.
  • நவம்பர் 12 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைந்தது. அதன்படி, ஒரு சவரன் ரூ.56,680-க்கு விற்பனை செய்யப்பட்டது.
  • அதனை தொடர்ந்து இன்று (நவம்பர் 13) தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் ரூ.56,360-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : FD Interest Rate : 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. அதிக வட்டி வழங்கும் டாப் 7 வங்கிகள்.. பட்டியல் இதோ!

தங்கம் விலை குறைய காரணம் என்ன?

கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மத்திய வங்கிகள், வைப்பு நிதிக்கான வட்டியை அதிரடியாக குறைத்தன. இதன் காரணமாக உலக அளவிலான முதலீட்டாளர்கள் கடந்த மாதம் முழுவதும் தங்கத்தில் முதலீடு செய்து வந்தனர். முதலீட்டாளர்கள் அதிக அளவு தங்கத்தில் முதலீடு செய்த நிலையில், உலக சந்தையிலும் தங்கத்தில் விலை உயர்ந்தது. அதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கம் விலை கடும் உயர்வை சந்தித்து வந்தது. குறிப்பாக சென்னையில் எப்போதும் இல்லாத அளவு கடந்த அக்டோபர் 29 ஆ தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.59,000 என விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலையில் இது ஒரு புதிய உச்சமாக கருதப்பட்டது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் 2024 இறுதிக்குள் தங்கம் விலை ரூ.60,000 எட்டும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க : RBI : நிலையான வைப்புநிதி திட்டத்தில் இந்த தொகைக்கு மேல் முதலீடு செய்யாதீர்கள்.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஆனால் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக அமெரிக்க அதிபர் தேர்தல் சொல்லப்படுகிறது. அதாவது, அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து, அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்த உள்ளதாக அவர் வாக்குறுதி அளித்தார். இதன் காரணமாக, தங்கத்தில் முதலீடு செய்து வந்த உலக முதலீட்டாளர்கள் தற்போது டாலரில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாக தங்கம் விலை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Latest News