Gold Rate : சவரனுக்கு ரூ.1120 உயர்ந்த தங்கம் விலை.. ஒரு வாரத்துக்குள் எகிறிய ரேட்.. 6 நாள் விலை பட்டியல்

Price History | மத்திய பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி சுங்க வரி குறைப்பால் விலை சரிய தொடங்கியது. பட்ஜெட் தாக்கலான பிறகு 4 நாட்கள் தங்கத்தின் விலை குறைந்த வந்த நிலையில், அதன்பிறகு ஏற்ற இறக்கத்தில் உள்ளது. குறிப்பாக நேற்று முன் தினம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,445-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ரூ.160 அதிகரித்து ரூ.51,560-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Gold Rate : சவரனுக்கு ரூ.1120 உயர்ந்த தங்கம் விலை.. ஒரு வாரத்துக்குள் எகிறிய ரேட்.. 6 நாள் விலை பட்டியல்

தங்கம்

Published: 

12 Aug 2024 12:05 PM

தங்கம் விலை: சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது.  கடந்த சில மாதங்களாக தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது.  குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்ட நிலையில், அடுத்தடுத்த மாதங்களில் ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்தது.  மத்திய பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி சுங்க வரி குறைப்பால் விலை சரிய தொடங்கியது. பட்ஜெட் தாக்கலான பிறகு 4 நாட்கள் தங்கத்தின் விலை குறைந்த வந்த நிலையில், அதன்பிறகு ஏற்ற இறக்கத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை ரூ.1120 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : EPF Insurance | PF உறுப்பினர்களுக்கு ரூ.7 லட்சம் வரை இன்சூரன்ஸ்.. முழு விவரம் இதோ!

ஒரே வாரத்தில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

  • கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.6,330-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.50,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,350-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.50,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,4250-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.51,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,445-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.51,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • ஆகஸ்ட் 11 ஆம் தேதி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று தங்கம் விலை மீண்டு உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6,470-க்கும் ஒரு சவரன் ரூ.51,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : Fixed Deposit : 444 நாட்கள் வரையிலான FD திட்டங்கள்.. அதிக வட்டி வழங்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!

தொடர் விலை உயர்வால் சோகத்தில் மூழ்கிய பொதுமக்கள்

அதன்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை சுமார் ரூ.ரூ.1120 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரி குறைப்புக்கு பிறகு தங்கம் விலை அதிரடியாக குறைந்த நிலையில், மகிழ்ச்சியில் இருந்த பொதுமக்களுக்கு இந்த தொடர் விலையேற்றம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்படும் நிலையில், கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை வெறும் உயர்வை மட்டுமே சந்தித்து வருகிறது. இதன் காரணமாக தங்கம் விலை மீண்டும் உச்சத்தை தொடும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?